Published:Updated:

கொரோனாவால் வேலையிழந்தவர்களுக்கு வேலை.. சங்கடத்திலும் ஒரு சந்தோஷம் தரும் வால்மார்ட், அமேசான்!

வால்மார்ட்
வால்மார்ட்

வால்மார்ட் (waltmark inc) நிறுவனம் அமெரிக்காவில் 1,50,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று உலகமெங்கும் பரவி வருவதால், மக்கள் கூட்டமான இடத்திற்குச் செல்வதை தவிர்த்து, முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று (24.03.2020) மாலை 6 மணி முதல், தமிழகமெங்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதித்துள்ளனர். கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், மக்களும் வெளியில் இயல்பாக நடமாட அச்சம் கொள்கின்றனர். வீட்டில் முடங்கிக் கிடைக்கும் மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் மூலமாகப் பொருள்கள் வாங்கிக் கொள்கிறார்கள். எனவே ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் அமேசான்.காம் (Amazon.com inc) தனது அமெரிக்கக் கிடங்குகளில் பணிபுரிபவர்களுக்கு, அதிக நேரம் பணிபுரிபவர்களுக்கு ஊதியத்தை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.

வால்மார்ட் அமேஸான்
வால்மார்ட் அமேஸான்

அமேசானின் அமெரிக்கக் கிடங்குகளில் மணிநேரக் கணக்கில் பணிபுரியும் பணியாளர்கள், 40 மணிநேரத்திற்கு இரட்டிப்பு ஊதியத்தைப் பெறுவார்கள், மார்ச் 15 முதல் மே 9 வரை 1.5 சதவிகிதம் அளவிற்கு உயரும் என்று குறிப்பிடப்படுகிறது. அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது இது இரண்டாவது முறையாகும்.

அமேஸான், ஃப்ளிப்கார்ட்டில் ஃபிட்னெஸ் பொருட்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை! #HomeFitness

கடந்த திங்களன்று தங்கள் பணியாளர்களுக்கு ஒரு மணிநேரச் சம்பளத்தை 15 டாலரிலிருந்து 17 டாலராக உயர்த்தியுள்ளனர். மேலும் ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்காவில் 1,00,000 கிடங்குகளை திறப்பதற்கும், டெலிவரிக்காக கூடுதல் பணியாளர்களைச் சேர்ப்பதற்குமான திட்டங்களை அறிவித்தது. இது குறித்து அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜெப் பெஸோஸ், 'கொரோனாவால் வேலை இழந்தவர்கள், அமேசான் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றலாம்' என்பதை அண்மையில் தெரிவித்திருந்தார்

கிடங்குகள்
கிடங்குகள்

மக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் ஆன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் மளிகைக் கடை உரிமையாளர்கள் அதிகரித்து வரும் தேவையைப் பயன்படுத்திக்கொள்ள போட்டியிடுகின்றனர். வியாழக்கிழமை அன்று வால்மார்ட் (waltmark inc) நிறுவனம் அமெரிக்காவில் 150,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் தொழிலாளர்களுக்கு வெகுமதி அளிப்பதற்காக 550 மில்லியன் டாலர் ரொக்க போனஸ் அளிக்கவிருப்பதாகவும் அறிவித்தது.

அடுத்த கட்டுரைக்கு