Published:Updated:

பணி: அலமாரிகளில் துணி அடுக்குவது; சம்பளம்: மாதம் ₹50,000; பிரிட்டன் மாணவியின் `வாவ்' பிசினஸ்!

அலமாரிகளில் துணியை அடுக்கி சம்பாதிக்கும் எலா மெக்மஹோன் ( Instagram Photo )

``நான் ஃபேஷன் மாணவி என்பதால், எனக்கு ஆடைகள் கலெக்ஷன்ஸ் பார்ப்பது மிகவும் பிடிக்கும். அடுக்கிக்கொடுக்கும்போது அவர்களின் பயன்பாட்டில் இல்லாத ஆடைகளை வாங்கி வந்து, பழைய ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளுக்குக் (charity shops) கொடுத்துவிடுவேன்."

பணி: அலமாரிகளில் துணி அடுக்குவது; சம்பளம்: மாதம் ₹50,000; பிரிட்டன் மாணவியின் `வாவ்' பிசினஸ்!

``நான் ஃபேஷன் மாணவி என்பதால், எனக்கு ஆடைகள் கலெக்ஷன்ஸ் பார்ப்பது மிகவும் பிடிக்கும். அடுக்கிக்கொடுக்கும்போது அவர்களின் பயன்பாட்டில் இல்லாத ஆடைகளை வாங்கி வந்து, பழைய ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளுக்குக் (charity shops) கொடுத்துவிடுவேன்."

Published:Updated:
அலமாரிகளில் துணியை அடுக்கி சம்பாதிக்கும் எலா மெக்மஹோன் ( Instagram Photo )

பொதுவாகப் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னைக்கான தீர்வு நம்மிடம் இருந்தால், அதை பிசினஸாக செய்யும்போது ஜெயிக்கும் என்று கூறுவதுண்டு. அப்படித்தான் பலருடைய வீடுகளிலிருக்கும் சிறிய பிரச்னைக்குக் தீர்வு கண்டு அதையே பிசினஸாக மாற்றியிருக்கிறார் 19 வயது இளம்பெண் ஒருவர். இங்கிலாந்து லீசெஸ்டரைச் சேர்ந்தவர் எலா மெக்மஹோன். இவர், ஃபேஷன் டிசைனிங் மாணவியும்கூட. வாடிக்கையாளர்களின் அலமாரிகளை அழகாக அடுக்கிக் கொடுப்பதன் மூலம் மாதம் ரூ.50,000 வரை சம்பாதிக்கிறார்.

எலா மெக்மஹோன்
எலா மெக்மஹோன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உறவினர்கள், நண்பர்களுக்கு அலமாரிகளை பொழுதுபோக்குக்காக அடுக்கிக் கொடுத்தவருக்கு இதையே பிசினஸாக மாற்றலாம் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. அவ்வாறு, தான் அடுக்கியவற்றை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். இதனையடுத்து தற்போது வாடிக்கையாளர்கள் குவிந்துவிட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

20 ஸ்திரமான வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு வாரத்துக்கு ஒருமுறை போய் அடுக்கிக்கொடுத்துவிட்டு, அதற்கான கட்டணத்தையும் பெறுகிறாராம். ஒரு மணி நேரத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.1,500 முதல் ரூ. 2,000 வரை கட்டணமாக வசூலிக்கிறார். இதுபற்றி எலா கூறுகையில், ``ஓர் அலமாரியை ஒழுங்கமைக்க குறைந்தபட்சம் மூன்று மணிநேரம் ஆகும். அலமாரி அளவைப் பொறுத்து நேரமும் மாறுபாடும்.

அலமாரியில் துணிகளை அடுக்கும் எலா
அலமாரியில் துணிகளை அடுக்கும் எலா

ஆரம்ப காலங்களில் ஓர் அலமாரியை அடுக்க ஒன்பது மணிநேரம்கூட செலவழித்திருக்கிறேன். நான் ஃபேஷன் மாணவி என்பதால், எனக்கு ஆடைகள் கலெக்ஷன்ஸ் பார்ப்பது மிகவும் பிடிக்கும். அடுக்கிக்கொடுக்கும்போது அவர்களின் பயன்பாட்டில் இல்லாத ஆடைகளை வாங்கி வந்து, பழைய ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளுக்குக் (charity shops) கொடுத்துவிடுவேன். ஒரே வீட்டில் நான்கு முதல் ஆறு பைகள் வரை தேவையற்ற ஆடைகளைச் சேமித்து வைத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பயன்படுத்தாத, தேவையற்ற ஆடைகளை நீக்குவது, அலமாரியை அடுக்குவதில் ஒரு பகுதிதான். இந்த பிசினஸில் கிடைக்கும் பணத்தை ஒரு வீடு வாங்குவதற்காகச் சேமித்து வருகிறேன்" என்பவரின் ஸ்பெஷாலிட்டி, ஆடைகளை வண்ணங்கள் வாரியாகப் பிரித்து அடுக்குவது.

எலா மெக்மஹோன்
எலா மெக்மஹோன்

``பெரும்பாலான நேரங்களில், வாடிக்கையாளர்கள் தங்கள் அலமாரி, டிராவில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆடைகளை வார இறுதிக்குள் கலைத்துப் போட்டுவிடுவார்கள். நான் சென்று அதை ஒழுங்குபடுத்தியதும் அவர்களுக்குத் தேவையான ஆடைகளைக் கண்டுபிடிப்பது எளிதாகும். நேர்த்தியாக அடுக்கிவைக்கப்பட்ட ஓர் அலமாரி நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism