Published:Updated:

`முதல் காலாண்டில் 9% சரிவு... இரண்டாம் காலாண்டில்..?!’ - சீன பொருளாதாரம் குறித்து கோல்டுமேன் சாக்ஸ்

சீனாவின் பொருளாதாரம் 9 சதவிகிதம் குறையும்
சீனாவின் பொருளாதாரம் 9 சதவிகிதம் குறையும்

சீனாவின் சாதாரண வணிக நடவடிக்கைகள் எவ்வாறு பாதித்துள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது கோல்ட்மேன் சாக்ஸ்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, இன்று உலகத்தையே பதற்றத்தில் தள்ளியிருக்கிறது. உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ள கொரோனா வைரஸால், மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நிலையில் உள்ள சீனாவை கடுமையாகத் தாக்கியுள்ளது இந்த கொரோனா வைரஸ்.

#CoronaUpdates `ஒற்றை இலக்க சீனா.. கவலை அளிக்கும் இத்தாலி நிலவரம்..!' -கொரோனா ஸ்டேட்டஸ்

சீனாவின் சாதாரண வணிக நடவடிக்கைகள் எவ்வாறு பாதித்துள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது கோல்டுமேன் சாக்ஸ் (Goldman sachs) நிறுவனம். மேலும், சீனாவின் பொருளாதாரம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 9% சுருங்கக்கூடும் எனவும் குறிப்பிட்டிருக்கிறது. வைரஸின் தாக்கம் சீனாவில் குறைந்துகொண்டே வந்தாலும், கோல்டுமேன் சாக்ஸ், முதல் காலாண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டை ஒன்பது சதவிகிதமாகக் குறைத்துள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், சீனப் பொருளாதாரம் மிகவும் பலவீனமானதற்கான தரவுகளை சுட்டிக்காட்டியிருக்கிறது.

மேலும், சீனாவின் முழு ஆண்டு உள்நாட்டு உற்பத்தியின் கணிப்பை 5.5 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. சீனாவின் தொழிற்சாலை உற்பத்தி, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான வேகத்தில் சரிந்துள்ளது. கொரோனா வைரஸ், பலநாடுகளுக்கும் வேகமாகப் பரவிவருவதால், சீனாவின் வளர்ச்சி 2020-21ல் இரண்டாவது காலாண்டிலும் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம்
பொருளாதாரம்

சீனப் பொருளாதாரத்தில் நம்பிக்கை இருப்பதாகவும், தொழிற்சாலைகள், வணிகங்கள், நுகர்வோர்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் சீராகும் என்றும் சீன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, ஹூபே ((hubei) மாகாணத்திற்கு வெளியே உள்ள பெரிய அளவிலான தொழில்துறை நிறுவனங்கள் 90% உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளதும், மீளும் விகிதம் 100 சதவிகிதமாக இருப்பதும் உறுதியாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு