Published:Updated:

`பணியாளர்களின் சம்பளத்தில் 25% குறைக்கப்படும்!’ - ஷாக் கொடுத்த இண்டிகோ நிறுவனம்

இண்டிகோ
இண்டிகோ ( vikatan )

அனைத்து நாடுகளும் பெரும்பாலும் தங்களது சர்வதேசத் தொடர்புகளை அறுத்துக்கொண்டு தனித்தீவுகளாக மாறிவருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பால் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், வரும் ஏப்ரல் முதல் தனது பணியாளர்களின் சம்பளத்தில் 25% கட் செய்யப்போவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. கொரோனா பரவலால் உலகம் முழுவதும் டூர்ஸ் & டிராவல்ஸ் துறை நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ
இண்டிகோ
vikata

அனைத்து நாடுகளும் பெரும்பாலும் தங்களது சர்வதேசத் தொடர்புகளை அறுத்துக்கொண்டு தனித்தீவுகளாக மாறிவருகின்றன. விமானப்பயணங்களை அனைவரும் தற்காலிகமாகத் தவிர்த்துவருகிறார்கள். எனவே, விமானச்சேவை நிறுவனங்கள் பெருத்த வருமான இழப்புக்கு உள்ளாகி வருகின்றன.

இதன் எதிரொலியாக, கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தன் பணியாளர்களில் 200 பேரை பணிநீக்கம் செய்திருந்தது. தற்போது இண்டிகோ நிறுவனம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், A மற்றும் B பிரிவு பணியாளர்கள் தவிர்த்த மற்ற பணியாளர்களுக்குச் சம்பளத்தில் 25% குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், விமான பைலட்டுகள் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டாமென்றும், அப்படிப் பணியாற்றினால் கூடுதல் சம்பளம் தர இயலாதென்றும் கூறியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்கம்... விமான சேவையை குறைத்துக்கொண்ட நிறுவனங்கள்!
இண்டிகோ
இண்டிகோ
vikatan

இதேபோல, கோஏர் விமான நிறுவனம் தனது நிறுவனத்தில் கான்ட்ராக்ட் முறையில் பணியாற்றும் வெளிநாட்டு பைலட்டுகளின் கான்ட்ராக்டுகளை முடித்துக்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் சிக்கலுக்குள்ளான நிலையில் மற்ற நிறுவனங்களும் தள்ளாட்டத்தில் இருப்பதால் விமானப்பணியாளர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு