Published:Updated:

ட்விட்டர் மூலம் அறிமுகமான நட்பு: இந்திய இளைஞரை நேரில் சந்தித்த எலான் மஸ்க் - சுவாரஸ்ய பின்னணி!

எலான் மஸ்க், பிரணய் பத்தோல்

நீண்ட நாள்களாக எலான் மஸ்க்கிடம் ட்விட்டர் மூலம் மட்டுமே தொடர்பு கொண்டிருந்த பிரணய் பத்தோல் அண்மையில் தனது 'business analytics' தொடர்பான முதுகலை படிப்பிற்காக அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார். அப்போது...

ட்விட்டர் மூலம் அறிமுகமான நட்பு: இந்திய இளைஞரை நேரில் சந்தித்த எலான் மஸ்க் - சுவாரஸ்ய பின்னணி!

நீண்ட நாள்களாக எலான் மஸ்க்கிடம் ட்விட்டர் மூலம் மட்டுமே தொடர்பு கொண்டிருந்த பிரணய் பத்தோல் அண்மையில் தனது 'business analytics' தொடர்பான முதுகலை படிப்பிற்காக அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார். அப்போது...

Published:Updated:
எலான் மஸ்க், பிரணய் பத்தோல்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களின் தலைவருமானவர் எலான் மஸ்க். இப்படிப் பல பொறுப்புகளில் இவர் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில், குறிப்பாக ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இவரது ட்விட்டர் கணக்கை சுமார் 103 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அதில் ஒருவர்தான் மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் பிரணய் பத்தோல் என்பவர்.

டாடா கன்சல்டன்ஸி சர்வீஸில் பணிபுரிபவராக அறியப்படும் இவர், 2018-ம் ஆண்டு டெஸ்லாவின் ஆட்டோமேட்டிக் விண்ட்ஸ்க்ரீன் வைப்பரில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், "அடுத்து வரும் தயாரிப்புகளில் இந்தத் தவறு திருத்திக் கொள்ளப்படும்" என்று கூறியிருந்தார். இந்த ட்வீட் எலான் மஸ்க், பிரணய் பத்தோல் இருவரும் நட்பாகப் பழகுவதற்கு ஆரம்பமாக அமைந்தது. இதையடுத்து பிரணய் பத்தோல் டெஸ்லாவின் மென்பொருளில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது, ஸ்பேஸ் எக்ஸ் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டறிந்து கொள்வது என எலான் மஸ்க்கை அடிக்கடி ட்விட்டரில் தொடர்பு கொண்டு வந்த நிலையில், இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

இப்படி நீண்ட நாள்களாக எலான் மஸ்க்கிடம் ட்விட்டர் மூலம் மட்டுமே தொடர்பு கொண்டிருந்த பிரணய் பத்தோல் அண்மையில் தனது 'business analytics' தொடர்பான முதுகலை படிப்பிற்காக அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார். அப்போது எலான் மஸ்க்கை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக எலானுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரணய் பத்தோல், அதில், "டெக்சாஸில் உள்ள கிகாஃபேக்டரியில் உங்களைச் சந்தித்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி. தங்களைப் போன்ற யதார்த்தமான, எளிமையான மனிதரை நான் இதுவரை சந்தித்ததில்லை. நீங்கள் பல கோடி மக்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருக்கிறீர்கள்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

உலகின் உள்ள பிசினஸ்மேன்களில் உச்சாணிக் கொம்பில் இருக்கும் எலானின் ட்விட்டர் கணக்கைப் பல லட்ச மக்கள் பின்தொடர்ந்தாலும் இந்தியாவைச் சேர்ந்த 23-வயது இளைஞரின் புத்திசாலித்தனமான அணுகுமுறை எலானைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.