Published:Updated:

`உங்கள் சேவை எங்களுக்கு தேவை!' - IMF-ல் பதவி உயர்வுடன் பணியைத் தொடரவுள்ள கீதா கோபிநாத்

Gita Gopinath
News
Gita Gopinath ( Twitter Photo:/ @GitaGopinath )

``மீண்டும் ஹார்வர்ட் பல்கலைகழகத்திற்கே பொருளாதார பேராசிரியராக செல்லவுள்ளேன்” என்று கூறியிருந்தார். ஆனால், ஐ.எம்.எஃப் இவரை விடுவிக்கும் எண்ணத்தில் இல்லை. இதைப் பற்றி பேசிய ஐ.எம்.எப் நிர்வாகம், ``உயர்மட்ட நிர்வாகத்தில் சில சீரமைப்புகளை செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது” என்றது.

சர்வதேச நிதியத்தின் (IMF) பொருளாதார நிபுணராக இருந்துவந்த கீதா கோபிநாத்தின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து, மீண்டும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணிக்கே திரும்பப் போவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். ஆனால், இப்போது அவர் ஹார்வர்டுக்கு போகாமல், சர்வதேச நிதியத்தின் அடுத்த எஃப்.எம்.டி.டி (First Managing Deputy Director) என்கிற உயர் பதவியைப் பெற்றுள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கீதா கோபிநாத், டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பொருளாதாரம் படித்து, பின்பு அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

Gita Gopinath
Gita Gopinath
Twitter Photo:/ @GitaGopinath

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பின்பு சில காலம் ஹார்வர்டில் பேராசிரியராக இருந்த கீதாவிற்கு ஐ எம்.எப்-இல் தலைமைப் பொருளாதார நிபுணர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனின் பொருளாதார ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார் கீதா.

கடந்த மூன்று வருடங்களாக ஐ.எம்.எஃப்-ன் தலைமைப் பொருளாதார நிபுணராக பதவி வகித்துவந்த இவர், ``மீண்டும் ஹார்வர்ட் பல்கலைகழகத்திற்கே பொருளாதார பேராசிரியராக ஜனவரியில் செல்லவுள்ளேன்” என்று கூறியிருந்தார். ஆனால், ஐ.எம்.எஃப் இவரை பணியிலிருந்து விடுவிக்கும் எண்ணத்தில் இல்லை. இதைப் பற்றி பேசிய ஐ.எம்.எப் நிர்வாகம், ``உயர்மட்ட நிர்வாகத்தில் சில சீரமைப்புகளை செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது” என்றது.

கோவிட் காலத்தில் ஐ.எம்.எப்-இன் பொருளாதார ஆராய்ச்சி குழுக்களை மிகவும் சிறப்பாக கையாண்டிருக்கிறார் கீதா கோபிநாத். இந்த அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணராக பதிவேற்ற முதல் பெண் கீதாதான் என்பது கூடுதல் சிறப்பம்சம். இதைத் தொடர்ந்து இப்போது அதைவிட மிகப் பெரிய பதவியான முதன்மை நிர்வாக டெபுடி டைரக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Gita Gopinath
Gita Gopinath
Twitter Photo:/ @GitaGopinath

இவருக்கு முன்பு இந்தப் பதவியை வகித்துவந்த ஜ்யோபிரி ஓகோமோட்டோ தனியார் துறைக்குச் செல்வதால், இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பதாக சொல்கின்றனர் ஐ.எம்.எப் வட்டாரம். இதைப் பற்றி கருத்து தெரிவித்திருக்கும் ஐ.எம்.எப்-இன் மேலாண்மை இயக்குனர் க்ரிஸ்த்தினா ஜியோர்ஜிவா, ``ஒக்கோமோட்டோ செல்வதில் எனக்கு வருத்தம் என்றாலும், கீதா வருவதில் மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.

2022-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதியிலிருந்து ஐ.எம்.எப்-ன் முதன்மை நிர்வாக டெபுடி டைரக்டராக (FMDD) தன் புதிய பணியைத் தொடங்கவிருக்கிறார் கீதா கோபிநாத்.