Published:Updated:

Binance: சமையல் வேலை டு பில்லியனர்; வரவேற்புக்கும் சர்ச்சைக்கும் இடையில் சாவோ சாதித்தது எப்படி?

CZ
News
CZ

44 வயதான சாவோ கடந்துவந்த பாதை எளிதானதல்ல. மெக்டொனால்ட்ஸ் கடையில் சமையல் செய்யும் வேலை உள்ளிட்ட பல வேலைகள் பார்த்துள்ளார். முதன்முதலாக, பிட்காயின் வாங்குவதற்குத் தனது வீட்டை விற்றுத்தான் வாங்கினார். அதிலிருந்து படிப்படியாக உயர்ந்தவர்.

இன்று உலகின் மிகப் பெரிய கிரிப்டோகரன்ஸி எக்ஸ்சேஞ்ச் என்றால் அது பைனான்ஸ் (Binance) என்றுதான் சொல்ல வேண்டும். பிட்காயின் + ஃபைனான்ஸ் இரண்டும் சேர்ந்ததுதான் பைனான்ஸ். இதன் நிறுவனர் சங்பெங் சாவோ (Changpeng Zhao). இவரை சுருக்கமாக CZ என்று அழைக்கிறார்கள். இவர் உலகின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 96 பில்லியன் டாலர்கள்.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் பிறந்தவர் சங்பெங் சாவோ. இவரது பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். 1980-களின் இறுதியில் இவரது குடும்பம் கனடாவிற்குக் குடிபெயர்ந்தது. பள்ளிக்காலம் முதலே சாங்பெங் குடும்பத்திற்கு உதவியாகப் பகுதிநேர வேலை பார்த்தார். கனடாவின் மாண்ட்ரியல் பகுதியில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் கற்றார்.

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபிறகு, டோக்கியோ ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இன்டர்ன்ஷிப்பில் இணைந்தார் சாவோ. அங்கு டிரேடிங் ஆர்டர்கள் எடுக்கும் மென்பொருள் ஒன்றை உருவாக்கும் பணியில் இருந்தார். பின்னர் அவர் ப்ளூம்பெர்க் டிரேட்புக்கில் வர்த்தக மென்பொருளின் டெவலப்பராக இருந்தார்.

Binance
Binance

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

யார் இந்த சாவோ?

2005-ல் சாவோ ஷாங்காய்க்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவர் ஃப்யூஷன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். 2013-ம் ஆண்டு தொடங்கி, அவர் பிளாக்செயின் உட்பட பல்வேறு கிரிப்டோகரன்சி தளங்களில் பணியாற்றினார். ஓ.கே காயினின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாகவும் பணியாற்றினார்.

2017-ல், சாவோ ஓ.கே காயினை விட்டு வெளியேறி, பைனான்ஸ் என்ற கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சினைத் தொடங்கினார். தொடங்கிய எட்டு மாதங்களுக்குள், உலகின் மிகப் பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சாக பைனான்ஸ் வளர்ந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பிப்ரவரி 2018-ல், ஃபோர்ப்ஸ் இதழ் சாவோவை கிரிப்டோகரன்சியில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை அளித்த சிறப்பித்து.

44 வயதான சாவோ கடந்துவந்த பாதை எளிதானதல்ல. மெக்டொனால்ட்ஸ் கடையில் சமையல் செய்யும் வேலை உள்ளிட்ட பல வேலைகள் பார்த்துள்ளார். முதன்முதலாக, பிட்காயின் வாங்குவதற்குத் தனது வீட்டை விற்றுத்தான் வாங்கினார். அதிலிருந்து படிப்படியாக உயர்ந்தவர்.

பிட்காயின்
பிட்காயின்

பைனான்ஸுக்கு ஏன் இந்த வரவேற்பு?

ப்ளூம்பெர்கின் ஆய்வுப்படி, பைனான்ஸ் கடந்த ஆண்டு மட்டும் 20 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. மற்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகளைப் போலவே, பைனான்ஸும் வர்த்தகம், பட்டியல் செய்தல், நிதி திரட்டுதல் மற்றும் கிரிப்டோகரன்சிகளின் பட்டியல் நீக்கம் அல்லது திரும்பப் பெறுதல் போன்ற சேவைகளை வழங்குகிறது. கிரிப்டோகரன்சி ஆர்வலர்கள் தங்கள் சொந்த டோக்கன்களைத் தொடங்க, ஆரம்ப நாணயச் சலுகைகள் (ஐ.சி.ஓ.கள்) மூலம் நிதி திரட்ட பைனான்ஸைப் பயன்படுத்தலாம். பல்வேறு கிரிப்டோகரன்சிகளில் பரிமாற்றம் செய்வதற்கும் முதலீடு செய்வதற்கும் அதிக எண்ணிக்கையிலான வர்த்தகர்கள் மற்றும் பங்கேற்பாளர்களால் பைனான்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

பைனான்ஸின் மிகப் பெரிய ப்ளஸ், மற்ற சில பரிமாற்றங்களுடன் ஒப்பிடும்போது அதன் குறைந்த கட்டணமாகும். டிரேடிங் செய்ய `பேஸிக்', `அடவான்ஸ்டு' என வேண்டிய ஆப்ஷனைத் தேர்வு செய்துகொள்ளலாம். அதற்குத் தகுந்த கட்டணம் செலுத்தி வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பைனான்ஸ் குறித்த சர்ச்சைகள்!

இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட சீனாவில் இந்த நிறுவனம் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும் ஒரு குழு அமைத்து இது உண்மையில் கிரிப்டோ தளம்தானா அல்லது பணமோசடி செய்ய உருவாக்கப்பட்ட தளமா என்று விசாரணை செய்துவருகிறது. இதை எல்லாம் மீறி தினமும் புதிய கணக்கர்கள் பைனான்சில் இணைந்து கொண்டுதான் இருக்கின்றனர். சாவோ போன்றோரின் வளர்ச்சி அதிவேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோவின் மதிப்பை உணர்த்துகிறது.

Cryptocurrency
Cryptocurrency
Pixabay

கனடா உள்ளிட்ட நாடுகளில் பைனான்ஸ் தளத்திற்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அது குறித்து பேசிய சாவோ, ``கட்டுப்பாடுகள் நல்லதே. அது இத்துறை வளர்ந்து வருவதற்கு சாட்சி. மேலும், முறையான கட்டுப்பாடுகளும் நெறிமுறைகளும் வெளியானால் இன்னும் அதிக மக்கள் பயமின்றி கிரிப்டோவில் முதலீடு செய்வார்கள்” என்றார்.

ப்ளூம்பெர்க் இண்டெக்ஸில் தனது பெயர் வந்தது குறித்து சாவோ, ``யார் அதிக சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்பதைவிடவும் யார் தங்கள் சொத்துகளைச் சேவை நோக்கத்திற்காக அதிகம் கொடுத்துள்ளனர் என்பது குறித்து பட்டியல் வெளியிட வேண்டும்” என ட்வீட் செய்தார்.

மின்சாரக் கார்களுக்கு ஒரு எலான் மாஸ்க் போல, கிரிப்டோகரன்ஸிக்கு ஒரு சாவோ போல!