Published:Updated:

அன்று இந்தியாவுக்கு நிகரான வளர்ச்சி... இன்று எங்கோ போய்விட்ட சீனா... எப்படி?

சக்திவாய்ந்த தலைவர்களான மாவோ சேதுங், டெங் ஜியோபிங், ஜியாங் ஜெமின் முதல் தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் வரை அதிவேகப் பொருளாதார வளர்ச்சியிலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் கவனம்செலுத்தினர்.

china
china

சமீபத்தில் நான் சீனா சென்றிருந்தேன். அங்கிருக்கும் தொழில், நிதி, உள்கட்டமைப்பு வசதிகள், புதுமை புகுத்துதல், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் அவர்களின் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு அதிசயித்துப்போனேன். அதைப்போன்று நம் இந்தியா என்றைக்கு வளர்ச்சி காணப்போகிறது என்கிற கேள்விதான் எனக்குள் தோன்றியது. இத்தனைக்கும் சுமார் நாற்பது ஆண்டுகளுக்குமுன், சீனாவும் இந்தியாவும் பொருளாதார வளர்ச்சியில் ஒரே நிலையில் இருந்தன. ஆனால், சீனா இன்று எங்கோ போய்விட்டது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2nTY1CR

கடந்த 2008-ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை வென்றெடுக்க வேண்டு மென்ற நோக்கம்தான், சீனாவில் 2000-லிருந்தே பெரும் மாற்றங்கள் ஏற்படுவதற்குத் தூண்டுகோலாக இருந்ததாகத் தெரிகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக தலைநகரின் ஒரு பரந்த பகுதி ஒதுக்கப்பட்டது. அங்கிருந்த கட்டடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன; சாலைகள் அகலப்படுத்தப் பட்டன; உள்கட்டமைப்பு வசதி கள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டன.

Modi
Modi

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடத்திலிருந்து வரும் தெளிவான வழிமுறைகள், அரசின் திட்டகொள்கைகள் தொய்வின்றி தொடர்ச்சியாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கின்றன. அடுத்தடுத்துப் பதவிக்குவந்த சக்தி வாய்ந்த தலைவர்களிடமும் வளர்ச்சிக் கான நீண்டகாலப் பார்வையும் சிந்தனையும் இருந்தது. கட்சியும் அரசாங்கமும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையாகச் செயல்படுகின்றன. சக்திவாய்ந்த தலைவர்களான மாவோ சேதுங், டெங் ஜியோபிங், ஜியாங் ஜெமின் முதல் தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் வரை அதிவேகப் பொருளாதார வளர்ச்சியிலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் கவனம்செலுத்தினர். பிளவுகளை ஏற்படுத்தும் அரசியல் கருத்து வேறுபாடுகள், எதிர்ப்புகளுக்கு வாய்ப்பளிக்காது வளர்ச்சிக்கான கவனம் மட்டுமே மேலோங்கியிருந்தது.

இதற்கு நேர்மாறாக, இந்தியாவில் 1989-லிருந்து 2014 வரை மாறுபட்ட கருத்துகள் கொண்ட கட்சிகளின் நிலையற்றக் கூட்டணி அரசுகள் ஆட்சியில் இருந்தன. பெரும்பான்மை அரசுகளாக இல்லாததால், 1989-ல் வி.பி.சிங் முதல் 2009-14 வரை இருந்த இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வரை தீர்க்கமாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் ஏழு பிரதமர்கள் இந்தியாவை ஆண்டனர். கடந்த 2014-19-ல் ஆட்சிப் பொறுப்பிலிருந்த மோடி அரசு, மக்களவையில் பெரும்பான்மையாக இருந்தது. ஆனால், மாநிலங் களவையில் பெரும்பான்மை இல்லாததால், தேவையான சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. பொது உபயோகத்திற்கான நிலத்தைக் கூட அரசால் கையகப்படுத்த முடியவில்லை.

china
china

சீனாவில் தகவல் மற்றும் இயக்கம், அரசின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. கண்காணிப்பும் முழுவீச்சில் உள்ளது. வெளி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அங்கு அனுமதி கிடையாது, ஜனநாயகத்தில் இருப்பதைப் போல, பேச்சு சுதந்திரமும் கிடையாது. ஆனால், இவையெல்லாம் சாதாரண சீனர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை. வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி போன்றவற்றைச் சீன அரசு கவனித்துக்கொள்கிறது. வாழ்க்கைத்தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாகச் சீனா வளர்ந்து வருகிறது என்ற பெருமை, ஜனநாயகம் இல்லை என்ற குறையை விஞ்சி நிற்கிறது!

- இண்டஸ்ட்ரியல் எகானமிஸ்ட் ஆசிரியர் எஸ்.விஸ்வநாதன், சீனா எப்படியெல்லாம் வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதையும் விவரித்துள்ளார். உபரி வருமானத்தில் உருவான உள்கட்டமைப்பு, மெகா மின் திட்டங்கள், ரயில் வளர்ச்சி, சாலை மேம்பாடு, அலைபேசியும் மின்சார வாகனங்களும், இந்தியாவுக்கு வரும் சீனப் பொருள்கள் என பல தலைப்புகளில் அவரது பார்வையையும் அனுபவத்தையும் நாணயம் விகடன் சிறப்புக் கட்டுரையில் முழுமையாக வாசிக்க > பிரமிக்கவைக்கும் சீனாவின் வளர்ச்சி... இந்தியாவில் எப்போது நடக்கும்? https://www.vikatan.com/news/general-news/when-can-we-expect-a-growth-like-china-in-india

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |