Published:Updated:

``எலான் மஸ்க் கையில் சிக்கியது ட்விட்டரா அதன் பயனர்களா?'' ஓர் அலசல்!

எலான் மஸ்க் | Elon Musk

குறை கூறும் அனைவரும், தொடர்ந்து புகார்களைத் தெரிவியுங்கள். ஆனால், அதற்கு 8 டாலர்கள் செலவாகும் - எலான் மஸ்க்

``எலான் மஸ்க் கையில் சிக்கியது ட்விட்டரா அதன் பயனர்களா?'' ஓர் அலசல்!

குறை கூறும் அனைவரும், தொடர்ந்து புகார்களைத் தெரிவியுங்கள். ஆனால், அதற்கு 8 டாலர்கள் செலவாகும் - எலான் மஸ்க்

Published:Updated:
எலான் மஸ்க் | Elon Musk

`வரும் ஆனா வராது’ என்பது போல எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவாரா வாங்க மாட்டாரா என்பது இழுபறியாகவே இருந்தது. எப்படியோ ஒரு வழியாக அக்டோபர் 27-ம் தேதி ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கிவிட்டார். வந்தவர் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தவர் களுக்கு, பல அதிர்ச்சிகள் சரமாரியாகக் காத்திருந்தன…

Elon Musk | எலான் மஸ்க்
Elon Musk | எலான் மஸ்க்

அந்த வகையில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பின் இதுவரை நடந்த சம்பவங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து வெளிவந்த செய்திகளை இங்கே தொகுத்துள்ளோம்…

ஆட்குறைப்பு

ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.

பராக் அகர்வால் | எலான் மஸ்க்
பராக் அகர்வால் | எலான் மஸ்க்

7,500 ஊழியர்கள் ட்விட்டரில் பணிபுரிந்து வரும் நிலையில், இவர்களில் இருந்து எவரையெல்லாம் நீக்கலாம் என்ற பட்டியலைத் தயார் செய்து வருவதாகவும், நவம்பர் 1-ம் தேதிக்குள் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும், இவர்களில் இருந்து 5,000-க்கும் மேற்பட்டோர் நீக்கப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகிப்  பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தத் தகவல் உண்மையா என்று ட்விட்டர் பயனர் ஒருவர் நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த செய்தியைக் குறிப்பிட்டு, ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த எலான் மஸ்க், `இது உண்மை அல்ல’ என ட்வீட் செய்துள்ளார். 

ப்ளூ டிக்

ட்விட்டரில் அதிகாரபூர்வ கணக்கு என்பதை அடையாளப்படுத்த `ப்ளூ டிக்' மார்க் இருக்கும். இந்த `ப்ளூ டிக்' அடையாளத்தை அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகை யாளர்கள் என பல பிரபலங்கள், நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த `ப்ளூ டிக்' கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இனி ரூ.1,600 கட்டணமாக வசூலிக்கப்படும் என்ற தகவல் வெளியானது.

``ப்ளூ டிக்குக்கு 20 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டுமா..? நீங்கள்தான் எனக்கு பணம் தர வேண்டும். இது நடைமுறைப் படுத்தப்பட்டால் நான் திவாலாக வேண்டியதுதான்’’ என பிரபல அமெரிக்க நாவலாசிரியரான ஸ்டீபன் கிங் ட்வீட் செய்தார்.  அதைத் தொடர்ந்து பலரும் இந்தக் கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ப்ளூ டிக்
ப்ளூ டிக்

இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், ``நாங்களும் எப்படியாவது இந்தக் கட்டணத்தை (பில்) செலுத்தியாக வேண்டும்தான். ட்விட்டர் விளம்பரதாரர்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது. 8 அமெரிக்க டாலர் என்றால் செலுத்துவீர்களா?" என்று கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

ப்ளூ டிக் கட்டண விவகாரத்தில் தொடர்ந்து நெட்டிசன்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், இதற்கும் பதிலளிக்கும் விதமாக, ``குறை கூறும் அனைவரும், தொடர்ந்து புகார்களைத் தெரிவியுங்கள். ஆனால், அதற்கு 8 டாலர்கள் செலவாகும்’’ என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த நிலையில், ட்விட்டரில் அதிகாரபூர்வ கணக்குகளுக்கான `ப்ளூ டிக்' வசதிக்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

புதிய அதிகாரிகள்

எலான் மஸ்க்குக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவ அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 

எலான் மஸ்க்,  ஸ்ரீராம் கிருஷ்ணன்
எலான் மஸ்க், ஸ்ரீராம் கிருஷ்ணன்

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன், ``எலான் மஸ்க்குக்கு ட்விட்டரில் உதவ வேறு சிறந்த மனிதர்களுடன் தற்காலிகமாகச் சேர்ந்துள்ளேன். இது மிகவும் முக்கியமான நிறுவனம், உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். அதைச் செய்யக்கூடிய நபர் எலான் மஸ்க் தான்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இன்னும் என்ன செய்ய காத்திருக்கானோ?.. பார்ப்போம்!