Published:Updated:

மெக்கஃபே ஆன்டிவைரஸ் நிறுவனர் ஜான் மெக்கஃபே சிறையில் தற்கொலை; என்ன பிரச்னை?

`ஆன்டி வைரஸ்’ எனப்படும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பின் முன்னோடியான `மெக்கஃபே’ நிறுவனத்தின் நிறுவனர் ஜான் மெக்ஃபே தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`ஆன்டி வைரஸ்’ எனப்படும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பின் முன்னோடியான `மெக்கஃபே’ நிறுவனத்தின் நிறுவனர் ஜான் மெக்ஃபே தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்கஃபே 1987-ம் ஆண்டில் கலிஃபோர்னியாவில் உள்ள சான்டா கிளாராவில் மெக்ஃபே கார்ப் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர்களைத் தயாரிப்பதில் அவரது நிறுவனம் மார்க்கெட் லீடராக விளங்கியது. ஃபார்ச்சூன் 100 நிறுவனங்கள் மெக்கஃபே நிறுவனத்தின் தயாரிப்புகளையே பயன்படுத்தின. 1994-ம் ஆண்டு அவர் அந்த நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்தார். இந்த நிறுவனத்தை 2010-ம் ஆண்டு இன்டெல் நிறுவனம் வாங்கியது.

ஜான் மெக்ஃபே
ஜான் மெக்ஃபே
Todd J. Van Emst/Opelika-Auburn News via AP
சாஃப்ட்வேர் உருவாக்கம்... தமிழில் கற்றுத்தரும் ஸ்டார்ட்அப்..! கலக்கும் சென்னை நண்பர்கள்...

தற்போது 75 வயதான மெக்கஃபே, 2014-லிருந்து 2018 வரை அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து 2020-ம் ஆண்டு அக்டோபரில் ஸ்பெயினின் பார்சிலோனா விமான நிலையத்தில் அந்த நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டார். பார்சிலோனா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என அமெரிக்கா அரசாங்கம் தொடர்ந்து கோரிவந்தது. அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையை ஏற்று ஸ்பெயின் தேசிய நீதிமன்றம் மெக்கஃபேவை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதியளித்திருந்தது.

வரி ஏய்ப்புக் குற்றம் ஒருவேளை நிரூபிக்கப்பட்டால் மெக்கஃபே அமெரிக்காவில் சுமார் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும். இந்தச் சூழலில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் மெக்கஃபே சிறையில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. இதை அந்நாட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மெக்ஃபே தற்கொலை செய்துகொண்ட சிறை
மெக்ஃபே தற்கொலை செய்துகொண்ட சிறை
AP Photo/Joan Mateu
Vikatan

2014-லிருந்து 2018-க்கு இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் மெக்கஃபே 12 மில்லியன் டாலர்களை வருமானம் ஈட்டியிருந்ததாகவும் ஆனால், வரியை முறையாக செலுத்தவில்லை என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

க்ரிப்டோகரன்சிக்கு மிகப் பெரும் ஆதரவாளராக இருந்தார் மெக்கஃபே. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டுயிட்டு தோற்றுப்போனவர். அரசுக்கு எதிராக சதி செய்தார் என்கிற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.

- ஸ்ரீதர் சாரதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு