Published:Updated:

தொழிலில் புதுமை; வருமானத்தைப் பெருக்கியவர்!- பெண் ஊழியருடன் காதலால் பதவியை இழந்த மெக்டொனால்ட்ஸ் சிஇஓ

2011-ல் பிட்சா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்தவர், 2013-ம் ஆண்டே தாய் நிறுவனமான மெக்டொனால்ட்ஸுக்குத் திரும்பினார்.

ஈஸ்டர் ப்ரூக்
ஈஸ்டர் ப்ரூக்

மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், தலைமைச் செயல் அதிகாரியான ஸ்டீவ் ஈஸ்டர் ப்ரூக்கை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கத்துக்கான காரணமாக முன்வைக்கப்படுவது ஊழியர் ஒருவருடன் ஈஸ்டர் ப்ரூக் உறவில் இருந்ததுதான். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் `ஈஸ்டர் ப்ரூக் ... நிறுவனத்தின் கொள்கையை மீறி ஊழியருடன் உறவுவைத்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மெக்டொனால்ட்ஸ்
மெக்டொனால்ட்ஸ்

இதையடுத்து, அவர் நீக்கப்பட்டுள்ளார். போர்டு உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ஈஸ்டர் ப்ரூக் வெளியேறிவிட்டார். இனி நிறுவனத்தின் செயல்பாடு, நிதி குறித்து அவருக்குத் தொடர்பில்லை" எனக் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈஸ்டர் ப்ரூக்கை நீக்கிய கையோடு அந்தப் பதவிக்கு புதிய நபரையும் அறிவித்துள்ளது மெக்டொனால்ட்ஸ்.

Vikatan

52 வயதாகும் ஈஸ்டர் ப்ரூக் 1993 முதல் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தில் இருந்துவருகிறார். இதன்பின் 2011-ல் பிட்சா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்தவர், 2013-ம் ஆண்டே தாய் நிறுவனமான மெக்டொனால்ட்ஸுக்குத் திரும்பினார்.

ஈஸ்டர் ப்ரூக்
ஈஸ்டர் ப்ரூக்

2015-ல் சிஇஓவாக பதவியேற்ற அவர், மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். மெனுக்கள் மற்றும் உணவகங்களை புத்துயிர் பெறவைத்தது, கடைகளை மறுவடிவமைப்பு செய்தது என தனது பதவிக்காலத்தில் பல புதுமைகளைப் புகுத்தியவர். பதவிக்காலத்தில் மெக்டொனால்ட்ஸ் பங்குகளின் மதிப்பை இரு மடங்கு அதிகப்படுத்தினார்.

`எங்களை விட்டுப் போகாதீங்க டீச்சர்!' -கதறி அழுத மாணவர்களால் கலங்கிய ஆசிரியை அம்ரிதா

இந்நிலையில் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான ஈஸ்டர் ப்ரூக் பெண் ஊழியருடனான உறவை ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மெயிலில் `தனது உறவு நிறுவனத்தின் கொள்கையை மீறும்வகையிலான ஒரு தவறு என்றும், நான் முன்னேற வேண்டிய நேரம் இது. நிறுவனம் எடுத்த முடிவுக்கு உடன்படுகிறேன்" என்றும் கூறியுள்ளார்.

கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி
கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி

ஈஸ்டர் ப்ரூக் வகித்த சிஇஓ பதவிக்கு அவரது சிஷ்யரும், மெக்டொனால்ட்ஸின் அமெரிக்க கிளைகளுக்கு பொறுப்பாளராக இருந்தவருமான கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி கொண்டு வரப்பட்டுள்ளார். கெம்ப்சின்ஸ்கி ஈஸ்டர் ப்ரூக்கால் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்துக்கு அழைத்து வரப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan