உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு பல நாடுகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவில் வர்த்தகம் செய்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தில் இருந்து பின்வாங்கியுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் மீதான படையெடுப்பின் விளைவாக மாஸ்கோவிலிருந்து கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு அச்சமும், போக்குவரத்து பிரச்னையும் இருப்பதால் ரஷ்யா எண்ணெய் விற்பதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால், எண்ணெய் ஏற்றுமதியில் 70% முடங்கியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 10.5 மில்லியன் எண்ணெய் பீப்பாய்களை விற்பனை செய்தது ரஷ்யா. தற்போது எரிசக்தித் துறையில் நேரடியாக எவ்வித தடைகளும் இல்லை. இருந்தாலும் ரஷ்யா நாள் ஒன்றுக்கு ஏற்றுமதி செய்யும், ஒரு மில்லியன் எண்ணெய் பீப்பாய்களை இழக்க நேரிடும் என்று ரைஸ்டாட் எனர்ஜி-ன் (Rystad Energy) தலைவரும் ஆய்வாளருமான ஜரண்ட் ரைஸ்டாட் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உட்பட பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளும், மற்ற முக்கிய எண்ணெய் ஏற்றுமதியாளர்களும், புதன்கிழமை சந்தித்துக்கொண்டனர். அப்போது முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட உற்பத்தி அளவைத் தாண்டி எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மறுத்துள்ளனர்.

ரஷ்யாவில் எண்ணெய் விலைகள் உயர்வதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். பிரென்ட் கச்சா எண்ணெய் இந்த வாரம் ஒரு பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 130 டாலராக உயர்ந்துள்ளது. இந்த விலை ரஷ்யாவுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால், அதை வாங்குபவர்கள் பெரும் முடக்கத்தை எதிர்கொள்கின்றனர்.
சீனாவும் இந்தியாவும் இன்னும் கச்சா எண்ணையை வாங்கவில்லை. ஆனால், கப்பல் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் மெதுவாக வாங்கத் தொடங்குவார்கள் என்று எரிசக்தி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.