Published:Updated:

1.75 கோடிக்கு லம்போகினி கார் வாங்கிய நபருக்கு 9 வருஷம் ஜெயில்! என்ன காரணம்?

லம்போகினி URUS

லம்போகினியோடு சேர்த்து ஃபோர்டு நிறுவனத்தின் F-350 எனும் எஸ்யூவி மாடல் ட்ரக்கையும் இவர் 95,000 டாலர்களுக்கு வாங்கியிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். என்னதான் பிரச்னை?

1.75 கோடிக்கு லம்போகினி கார் வாங்கிய நபருக்கு 9 வருஷம் ஜெயில்! என்ன காரணம்?

லம்போகினியோடு சேர்த்து ஃபோர்டு நிறுவனத்தின் F-350 எனும் எஸ்யூவி மாடல் ட்ரக்கையும் இவர் 95,000 டாலர்களுக்கு வாங்கியிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். என்னதான் பிரச்னை?

Published:Updated:
லம்போகினி URUS
ஒரு லம்போகினி காரின் ஆன்ரோடு விலை 2.33 லட்சம் அமெரிக்க டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 1.75 கோடி ரூபாய். இந்தியாவுக்குக் கொண்டு வந்தால் ஏற்றுமதி வரி, நுழைவு வரி என்று 3.30 கோடிக்கு எகிறும். இந்த காரை அமெரிக்காவிலேயே வாங்க வேண்டும் என்றால், ஒன்று பிசினஸ் புள்ளியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், தனவான்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்க வேண்டும்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் ஹவுஸ்டனைச் சேர்ந்த லீ ப்ரைஸ் III, அப்படி ஒரு பிசினஸ் புள்ளிதான். மூன்று கம்பெனிகளின் உரிமையாளரான இவரை லம்போகினி URUS கார் வாங்கியதற்காக, அமெரிக்க காவல்துறை கைது செய்திருக்கிறது. லம்போகினி காரில் பயணிக்கும் தனவான்களைப் பார்த்தால் வழிவிடும் காவல்துறை, இவரைக் கைது செய்து 110 மாதங்கள்… அதாவது 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்திருக்கிறது.

காரணம், லீ ப்ரைஸ் III, லம்போகினி கார் வாங்கியது, தனது சொந்தக் காசில் இல்லை; அரசாங்கப் பணத்தில்!

லம்போகினி URUS Interior
லம்போகினி URUS Interior

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்மையில் கொரோனா பரவலின்போது ஏற்பட்ட ஊரடங்கு நெருக்கடியால் கடைகள், மெடிக்கல் ஷாப்கள், சூப்பர் மார்க்கெட்கள், சில சின்ன ஐடி நிறுவனங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்குக் கடும் நஷ்டம். இந்த நிதிநெருக்கடியை ஈடு கட்ட ட்ரம்ப் அரசாங்கம், இரண்டு டிரில்லியன் டாலர்களை ரிலீஃப் ஃபண்டாகக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தத் திட்டத்தின் பெயர் PayCheck Protection Programme (PPP).

இந்த PPP திட்டத்தின் கீழ் லோன் கேட்டு சிறுதொழில் நடத்துபவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ்தான் ‘எங்க கம்பெனிக்கு இவ்வளவு நஷ்டம் ஆகிடுச்சு’, ‘எங்க தொழிலாளிகளுக்குச் சம்பளம் கொடுக்கணும்’ என்று பலவகை அழுகாச்சி அப்ளிகேஷன்களோடு சுமார் 2.66 மில்லியன் டாலர்கள் லோன் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் லீ ப்ரைஸ் III. இதன் மூலம், அரசாங்கம் சார்பாக அவருக்கு, அவரது 3 நிறுவனங்களுக்கும் சேர்த்து, ‘போனா போகட்டும்’ என்று பரிதாபப்பட்டு சுமார் 1.6 மில்லியன் டாலர்கள் கோவிட் நிவாரண நிதியாகக் கொடுத்திருக்கிறது அரசு. இன்னும் சில மீடியாக்கள், மொத்தத் தொகையும் இவருக்குக் கிடைத்ததாகச் சொல்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிவாரணத் தொகையில்தான் லீ ப்ரைஸ் III பல சொகுசு கார்களை வாங்கி டெக்ஸாஸ் முழுக்க நகர்வலம் வந்திருக்கிறார். லம்போகினியோடு சேர்த்து ஃபோர்டு நிறுவனத்தின் F-350 எனும் எஸ்யூவி மாடல் ட்ரக்கையும் இவர் 95,000 டாலர்களுக்கு வாங்கியிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது மட்டுமில்லை; 14,000 டாலர் மதிப்பில் ரோலக்ஸ் கைக்கடிகாரம் மற்றும் 2,000 டாலருக்கு க்ளப்பில் ஆட்டம் என்று ப்ரைஸின் ஆட்டம் அதிகரிக்கவே… இன்கம்டாக்ஸ் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

ஃபோர்டு F-350
ஃபோர்டு F-350

அரசாங்கப் பணத்தை ஆட்டையைப் போட்டு ஆட்டம் போட்டதில் ப்ரைஸ் லீதான் முன்னோடி என்று இல்லை. இவரைப் போலவே லம்போகினி, பென்ட்லி, ஃபெராரி, டெஸ்லா, மஸ்டாங் என்று பல சொகுசு கார்களை வாங்கிய நபர்களையும், புதுப் புது பங்களாக்களைக் கட்டியவர்களையும் ஆராய்ந்ததில்… அட... எல்லோருக்குமே இந்த கோவிட் நிவாரண நிதிதான் வழி காட்டியிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. இதில் பீட்ஸா கடை ஓனர் ஒருவர், ஸ்டாக் மார்க்கெட்டில் பணம் போட்டு கோடீஸ்வரர் ஆனதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஸ்கீமில் மட்டும் சுமார் 120 பேரைக் கைது செய்திருக்கிறது அமெரிக்கக் காவல்துறை.

லீ ப்ரைஸ் III–யிடம் இருந்து சுமார் 70,000 டாலர்கள்… அதாவது செலவழித்தது போக மீதத் தொகையை மட்டும் சீஸ் செய்திருக்கிறதாம் அமெரிக்க லஞ்சஒழிப்புத் துறை. இதுபோல் PPP திட்டத்தின் கீழ் மட்டும் 75 மில்லியன் டாலர்களை சீஸ் செய்திருக்கிறார்களாம். இப்போது 110 மாதங்கள் சிறைத்தண்டனைக்காகக் காத்திருக்கிறார் லீ ப்ரைஸ் III.

இதில் லீ ப்ரைஸுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞரே இப்படிச் சொல்கிறார்: ‘‘இது போன்ற தவறான வழிகளில் சொகுசு வாழ்க்கை வாழ நினைப்பவர்களுக்கு ப்ரைஸ் ஒரு தக்க பாடமாக விளங்கியிருக்கிறார்!’’
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism