Published:Updated:

India - China Trade: மருந்து உற்பத்தியில் சீனாவை நம்பியிருக்கும் இந்தியா... என்னாகும் எதிர்காலம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சீனாவை வீழ்த்த இந்தியா ரெடியா?
சீனாவை வீழ்த்த இந்தியா ரெடியா?

India - China Trade: இந்தியா - சீனா வர்த்தகத்தில் மருந்து மூலப்பொருள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த விஷயத்தில் இந்தியா முழுமையாக சீனாவைத்தான் நம்பியிருக்கிறது. எதிர்காலம் என்னாகும்? ஓர் அலசல்!

இந்திய - சீன எல்லையில் ஆரம்பித்திருக்கும் போர்ப் பதற்றம், இவ்விரு நாடுகளுக்கிடையே நெடுங்காலமாக நீடித்த வர்த்தக உறவை அடியோடு சாய்த்துவிட்டது. இதனால் இந்தியாவில் 'சீனப் பொருள்களை' பயன்படுத்த மாட்டோம் என்கிற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

’சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம்’ என 'கெயிட்' எனப்படும், அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து 3,000 பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறியுள்ள இந்த அமைப்பு, இவற்றில் பெரும்பாலான பொருள்களை உள்நாட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட உபகரணங்களை இனி பயன்படுத்தப்போவதில்லை என இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மேலும், ’சீனப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம்’ என அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

'மேக்னடிக் மஹாராஷ்ட்ரா 2.0' என்கிற, மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் முதலீட்டாளர்கள் மாநாட்டின் கீழ் 5,000 கோடி ரூபாய்க்கு மூன்று சீன நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. அதையும் மத்திய அரசு நிறுத்திவைத்திருக்கிறது. இப்படி அரசு உட்பட, பல்வேறு தொழில் அமைப்புகளும் 'ஆன்டி-சீனா' அதிர்வலையை ஆதரிக்க ஆரம்பித்திருக்கின்றன.

`இந்தியாவுக்கு மாறும் ஐபோன் தயாரிப்பு!' - சீனாவை கழற்றிவிடும் ஆப்பிள்

ஆனால், மருந்துத் தயாரிப்புக்குத் தேவையான முக்கிய மூலப் பொருள்களுக்கு இந்தியா முழுமையாக சீனாவைத்தானே நம்பியிருக்கிறது..? மற்ற சீனப் பொருள்களை தடை செய்வது போல சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபடும் மருந்துவ மூலப்பொருட்களை தடை விதித்தால் அதன் விளைவாக உலக அளவில் மருந்துப் பொருள்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுமா? என்ற கேள்வியும், அதனை சரிகட்ட எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சுமார் 70 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரையிலான மூலப்பொருள்கள் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.

மருந்துத் தயாரிப்பில் இந்தியா முதலிடம்!

உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் தனது அறிக்கையில் ’மூன்றாம் உலக நாடுகளின் மருந்தகம்’ என இந்தியாவைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துப் பொருள்கள் உலக நாடெங்கிலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் இருந்து அதிக அளவில் மருந்துகளை இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் 'ஹைட்ராக்சி குளோரோகுயின்' மருந்துக்காக இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது. வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் 55 சதவிகிதத்தை வாங்குகின்றன. ஆப்பிரிக்காவில் ஜெனரிக் மருந்து (பொதுவான மற்றும் விலை குறைவாக உள்ள மருந்துகள்) சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 50 சதவிகிதமாகும். 

export import
export import

ஏறக்குறைய 30-40 ஆண்டுகளுக்கு முன்னர், மருந்து என்பது மனிதர்களுக்கு அவசியம் என்பதால் மருந்தில் அறிவு சொத்துரிமையைக் கட்டுக்குள் வைத்திருப்போம் என இந்தியா சட்டமியற்றியது. இதனால், சுயமான மருந்துத் தேவை உருவாகி நமக்கு மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டது. இதனால், ஜெனரிக் மருந்துகள் எனப்படும் பொதுவான மருந்துகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஜெனரிக் மருந்துகளைத் தயாரிக்கும் உலகின் முதல் 20 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்தவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்று எங்களுடைய ஆராய்ச்சி நிறுவனங்களில் நாங்களே மூலப்பொருள்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டோம். சீனாவிலிருந்து வாங்கிய மலிவான விலையை விடவும், குறைந்த விலைக்கு எங்களால் மூலப்பொருள்களை உற்பத்தி செய்ய முடிகிறது.
எஸ்.அபயகுமார், மேலாண்மை இயக்குநர், ஷாசன் பார்மா

சீனாவை நம்பியிருக்கும் இந்தியா!

மருந்துத் தயாரிப்பில் முதலிடத்தில் இந்தியா இருந்தாலும், இந்த மருந்துகளை தயாரிக்கத் தேவைப்படும் ஏ.பி.ஐ (Active Pharmaceutical Ingredients) எனப்படும் மூலப் பொருள்களுக்கு சீனாவையே இந்தியா இன்றும் நம்பியுள்ளது. இன்று வரையிலும் சுமார் 70 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரையிலான மூலப்பொருள்கள் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால்தான், சீனாவில் கொரோனா பரவல் தீவிரமான போது, இந்தியாவில் பல்வேறு அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.  

சீனா ஏ.பி.ஐ
சீனா ஏ.பி.ஐ

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஷாசன் பார்மா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ்.அபயகுமார், "கொரோனா சமயத்தில் சீனாவிடம் இருந்து மருந்து தயாரிப்பதற்கான (ஏ.பி.ஐ) மூலப்பொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டதால், இந்தியாவில் பல நிறுவனங்கள் மருந்து உற்பத்தியைக் குறைத்தது கவனிக்கத்தக்கது. இதேபோன்றதொரு நிலைமை இதற்கு முன்னர் 2014ம் ஆண்டு ஏற்பட்டபோது ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, இந்தியாவில் ஏ.பி.ஐ. உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனவும், அதன்மூலம் சீனாவைச் சார்ந்திருக்கும் நிலைமையை மாற்ற வேண்டும் எனவும் பரிந்துரைத்தது. 

ஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்? #DoubtOfCommonMan

ஆனால், குறைவான விலையில் சீனாவிலிருந்து மூலப்பொருள்கள் கிடைக்கும்போது, அதைத் தயாரிப்பதில் ஏன் செலவு செய்ய வேண்டும், நேரத்தை வீணாக்க வேண்டும் என மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் நினைத்ததாலோ என்னவோ, அரசும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகவும் அண்மையில் இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டிருக்கும் போர்ப் பதற்றத்தினாலும் இந்திய அரசாங்கம் மூலப்பொருள்களுக்காக சீனாவை நம்பியிருக்கும் விஷயத்தை மீண்டும் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவிலேயே மூலப் பொருள்கள் தயாரிப்பதை ஊக்குவிப்பதற்காக 10,000 கோடி ரூபாய் நிதியை தனியாக ஒதுக்கி நடவடிக்கையைத் துரிதப்படுத்தியிருக்கிறது. 

S.Abayakumar
S.Abayakumar

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 90 சதவிகிதம் மூலப்பொருள்களை நாங்களும் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்துகொண்டிருந்தோம். ஆனால், சீனாவை நீண்டகாலமாக சார்ந்திருக்கக் கூடாது என முடிவுசெய்து, ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, இன்று எங்களுடைய ஆராய்ச்சி நிறுவனங்களில் நாங்களே மூலப்பொருள்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டோம். சீனாவிலிருந்து வாங்கிய மலிவான விலையை விடவும், குறைந்த விலைக்கு எங்களால் மூலப்பொருள்களை உற்பத்தி செய்ய முடிகிறது. அதனால் அனைத்து மருந்து நிறுவனங்களும் நினைத்தால், நம்பிக்கை வைத்தால் சீனாவிலிருந்து மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் இறக்குமதி செய்வதை முற்றிலுமாக தவிர்க்க முடியும்" என்றார்.

மிகை இறக்குமதி தடுப்பு வரி!

இந்தியா சீனாவிலிருந்து மட்டும் ‘சிப்ரோஃப்ளோக்சாசின் ஹைட்ரோகுளோரைட் (ciprofloxacin hydrochloride)’ என்ற நோய்த்தொற்று எதிர்ப்பு மருந்தை 97.76 சதவிகிதம் இறக்குமதி செய்து வருகிறது. அதனால், இந்திய நிதி அமைச்சகம் இந்த மருந்தின் மீது  'மிகை இறக்குமதி தடுப்பு வரி' விதிக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. வரி விதிப்பு தொடா்பாக வா்த்தகத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள நிலையில், நிதியமைச்சகம் அதுகுறித்து இறுதி முடிவு எடுக்கவுள்ளது. இந்த வரியானது கிலோவுக்கு ரூ.71.55 முதல் ரூ.250.42 வரை விதிக்கப்படலாம் என்றும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

வீடே மருத்துவமனை... உணவே மருந்து... கொரோனாவுடன் வாழ்வதற்கு தயாராகுங்கள்!

இந்த மருந்தானது, தோல் தொற்று, எலும்புத் தொற்று, சிறுநீரக நோய்த் தொற்று உள்ளிட்டவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2015-16 காலகட்டத்தில் இந்த மருந்து 117 டன் இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 2018- ஜூன் 2019 காலகட்டத்தில் 377 டன்னாக அதிகரித்துள்ளது. இதன் பிறகே, இந்த மருந்தின் மீதான மிகை இறக்குமதி வரி விதிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் துரித நடவடிக்கையால் இந்திய பார்மா நிறுவனங்கள், மூலப்பொருள்கள் தயாரிப்பை அதிகப்படுத்தினால் சீனாவைச் சார்ந்திருக்கும் நிலை நிச்சயமாக மாறும் என்பதில் ஐயமில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு