`அதிகமாக வேலை வாங்குகிறார்கள்' என்று தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தைக் குறைகூறுபவர்களைக் கண்டிருப்போம். ஆனால், வேலையில் ஒன்றும் செய்யாமல் இருக்கச் சொல்கிறார்கள் என, தான் பணிபுரியும் நிறுவனத்தின் மீது ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அயர்லாந்து டப்ளினில் வசித்து வருபவர்தான், டெர்மோட் அலஸ்டர் மில்ஸ். இவர் அயர்லாந்தின் ரயில்வே நிறுவனத்தில் (Irish Rail) நிதி மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நிறுவனத்தின் மீது, தான் வேலை பார்க்காமல் இருப்பதற்கு ஆண்டுக்கு சுமார் 1.03 கோடி ரூபாய் (1,26,000 யூரோ) வரை சம்பளமாகத் தருவதாகக் புகார் அளித்துள்ளார்.
தன்னுடைய தினசரி வேலை குறித்து விசாரணையின்போது பணியிட உறவுகள் ஆணையத்திடம் மில்ஸ் கூறுகையில், ``தினமும் காலை 10 மணிக்கு அலுவலகத்துக்குச் செல்வேன். இரண்டு நாளிதழ்கள், ஒரு சான்ட்விச் வாங்குவேன். அதன்பின் நாளிதழைப் படித்துவிட்டு, சான்ட்விச்சை சாப்பிடுவேன். அப்படியே சிறிது நடந்துவிட்டு வருவேன். 10.30 மணிக்கு ஏதேனும் மெயில் வந்திருக்கிறதா என்று பார்த்து, அதற்குப் பதிலளிக்கும் வகையில் இருந்தால், பதிலளிப்பேன். அது தொடர்பான வேலைகள் இருந்தால் செய்வேன்.

2014-ம் ஆண்டில் நிறுவனத்தின் ஒழுங்கற்ற நிதி கணக்குகளைச் சுட்டிக் காட்டி வெளிக்கொண்டு வந்து, கேள்வி எழுப்பியதால் வேலை ஏதும் தராமல் வைத்துள்ளார்கள். வாரத்துக்கு ஒருமுறை வேலை வந்தால்கூட மிகவும் சந்தோஷப்படுவேன்’’ என்று கூறியுள்ளார். வேலை செய்யாமல்தான் புறந்தள்ளப்படுவதற்குப் பணம் கிடைப்பது குறித்து இவர் அளித்த புகார், பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
என்ன மனுஷன்யா..!