Published:Updated:

ரஷ்யா - உக்ரைன் போர்; கடும் சரிவில் பங்குச் சந்தை; முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?

Share Market (Representational Image) ( Photo by Lorenzo from Pexels )

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணத்தால் சர்வதேச சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. காலை 9.50 மணி அளவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,020 புள்ளிகள் சரிந்து 55,202 என்ற நிலையில் வர்த்தகமானது.

ரஷ்யா - உக்ரைன் போர்; கடும் சரிவில் பங்குச் சந்தை; முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணத்தால் சர்வதேச சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. காலை 9.50 மணி அளவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,020 புள்ளிகள் சரிந்து 55,202 என்ற நிலையில் வர்த்தகமானது.

Published:Updated:
Share Market (Representational Image) ( Photo by Lorenzo from Pexels )

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தொடங்கிவிட்டது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உத்தரவைத் தொடர்ந்து, உக்ரைனில் ரஷ்யா படைகள் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷ்யா முதலில் நுழைந்துள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது ரஷ்ய ராணுவம்.

``ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில் வேறு யாராவது குறுக்கிட்டால், அவர்கள் இதுவரை சந்திக்காத வரலாறு காணாத மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும்” எனக் கடுமையாக எச்சரித்திருக்கிறார் அதிபர் புதின்.

ரஷ்யாவின் போர் முடிவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், இதனால் ஏற்படும் அத்தனை விளைவுகளுக்கும், உயிர் சேதத்துக்கும் ரஷ்யாதான் பொறுப்பு என்று கூறியுள்ளார்.

புதின்
புதின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணத்தால் சர்வதேச சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று காலையில் 2,000 புள்ளிகளுக்கும் மேல் இறக்கத்தைச் சந்தித்தது. காலை 9.50 மணி அளவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,020 புள்ளிகள் சரிந்து, 55,202 என்ற நிலையில் வர்த்தகமானது. நிஃப்டி 595 புள்ளிகள் சரிந்து 16,473 என்ற நிலையில் வர்த்தகமானது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதே சமயம், இந்தப் போரால் கச்சா எண்ணெய் விலை கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 101 டாலருக்கு உயர்ந்துள்ளது. தங்கம் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை இன்று மட்டும் 31 டாலர் உயர்ந்து, 1940 டாலராக அதிகரித்திருக்கிறது. இன்று மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.864 உயர்ந்துள்ளது.

இந்தியப் பங்குச் சந்தை கடந்த சில நாள்களாகவே கடும் சரிவை சந்தித்து வருதால், முதலீட்டாளர்கள் பெரும் பதற்றத்தில் இருக்கிறார்கள். கடந்த சில நாள்களில் சந்தை இறக்கம் கண்டதன் விளைவாக ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் லாபத்தை இழந்தனர் முதலீட்டாளர்கள். இந்த நிலையில், இன்றும் பங்குச் சந்தை மிகப் பெரிய அளவில் இறங்கி இருப்பதால், மொத்த லாப இழப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்
crude oil

பங்குச் சந்தையில் நீண்டகால அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு இது போன்ற தற்காலிக நெருக்கடிகளால் பெரிய பாதிப்புகள் இருக்காது. அவர்கள் பதற்றப்பட தேவையில்லை. ஆனால், குறுகிய கால முதலீடுகளை மேற்கொள்ளும் வர்த்தகர்கள் இதுபோன்ற சமயங்களில் பாதிக்கப்படலாம்.

இப்போதைய சூழலில்கூட முதலீடு செய்துள்ள பங்குகள் சிறப்பான ஃபண்டமென்டல்களைக் கொண்டிருக்குமானால், அவற்றை விற்காமல் தொடர்ந்து வைத்திருக்கலாம். நல்ல பங்குகள் குறைந்த விலையில் கிடைக்கும்பட்சத்தில், அவற்றை மேலும் வாங்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

3:50 PM Update

ரஷ்யா - உக்ரைன் போரினால் இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,702 புள்ளிகளும், நிஃப்டி 815.30 புள்ளிகளும் சரிந்துள்ளன. ஒரே நாளில் இவ்வளவு பெரிய சரிவு என்பது முதலீட்டாளர்கள் எதிர்பார்க்காதது. தங்கம் சவரனுக்கு ரூ.1,240 விலை உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 103 டாலராக உயர்ந்துள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism