Published:Updated:

விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ்; விரைவில் லண்டன் பங்களாவை காலி செய்வாரா?

விஜய் மல்லையா ( AP )

விஜய் மல்லையாவிற்கு உலகம் முழுவதும் பல விலையுயர்ந்த சொத்துக்கள் உண்டு, அதில் சொகுசு பங்களாக்கள் பல. அப்படிப்பட்ட சொகுசு பங்களாக்களில் ஒன்றுதான், இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருக்கும் கார்ன்வால் டெர்ரஸில்.

விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ்; விரைவில் லண்டன் பங்களாவை காலி செய்வாரா?

விஜய் மல்லையாவிற்கு உலகம் முழுவதும் பல விலையுயர்ந்த சொத்துக்கள் உண்டு, அதில் சொகுசு பங்களாக்கள் பல. அப்படிப்பட்ட சொகுசு பங்களாக்களில் ஒன்றுதான், இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருக்கும் கார்ன்வால் டெர்ரஸில்.

Published:Updated:
விஜய் மல்லையா ( AP )

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) அன்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு எதிரான வழக்கு லண்டனில் இருக்கும் ஒரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிமன்றம், விஜய் மல்லையா தன் குடும்பத்துடன் வசித்துவரும் சொகுசு பங்களாவைக் காலி செய்துதர வேண்டும் என்று உத்தரவிட்டது. சுவிஸ் வங்கியான யு.பி.எஸ் (UBS) மல்லையாவிற்கு எதிராகத் தொடர்ந்திருந்த வழக்கு இது.

விஜய் மல்லையாவிற்கு உலகம் முழுவதும் பல விலையுயர்ந்த சொத்துக்கள் உண்டு. அதில் சொகுசு பங்களாக்கள் பல. அப்படிப்பட்ட சொகுசு பங்களாக்களில் ஒன்றுதான், இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருக்கும் கார்ன்வால் டெர்ரஸில். பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ளது இந்த பங்களா.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த பங்களா அமைந்திருக்கும் கார்ன்வால் டெர்ரஸ் செல்வந்தர்களின் இருப்பிடம், லண்டனின் பிரபல `மேடம் டுஸ்சாட்ஸ் அருங்காட்சியகம்’ மற்றும் `ரெஜெண்ட்ஸ் பூங்கா’ போன்ற இடங்களுக்குச் செல்ல இங்கிருந்து சில நிமிடங்களே போதும். இந்தியாவிலிருந்து இங்கிலாந்து தப்பிவந்தது முதல், மல்லையா தன் 95 வயது தாயார் லலிதா மல்லையா மற்றும் மகன் சித்தார்த் மல்லையாவுடன் இந்த சொகுசு பங்களாவில்தான் வசித்து வருகிறார்.

இந்த பங்களாவை தன் ரோஸ் கேப்பிடல் நிறுவனம் மூலம் அடகு வைத்து ஸ்விஸ் வங்கியான யு.பி.எஸ் வங்கியிடம் கடன் வாங்கியிருந்தார் மல்லையா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த வங்கிக்கு 20.4 மில்லியன் பவுண்டு (இந்திய ரூபாய் மதிப்பில் 185.4 கோடி ரூபாய்) கடன்பட்டிருக்கும் அவர், அதை அடைக்கத் தவறியதால், யு.பி.எஸ் வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், மல்லையா குடும்பத்துட்டன் அந்த பங்களாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் இந்த தீர்ப்புக்குக் கோரிய தற்காலிகத் தடையையும் நிராகரித்துள்ளார் நீதிபதி. இது மல்லையாவிற்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

இனி யு.பி.எஸ் வங்கி அந்த பங்களாவைக் கையகப்படுத்தி ஆகவேண்டிய நடவடிக்கைகளை எடுக்க நீதிமன்றம் வழிவகை செய்திருக்கிறது.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் இருக்கும் 13 வங்கிகளிடம் 9,000 கோடி கடன் பெற்று மோசடி செய்துவிட்டு இந்தியாவிலிருந்து இங்கிலாந்து தம்பிச் சென்றார் விஜய் மல்லையா. இதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு, மும்பை உயர் நீதிமன்றம் மல்லையாவைத் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது.

கடந்த மாதம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 13,109.17 கோடி ரூபாய் தப்பியோடிய குற்றவாளிகளான மெகுல் சோக்சி, விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடியின் சொத்துக்களை விற்று மீட்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

கடந்த ஜூலை 2021-ம் ஆண்டு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் சொத்துக்கள் விற்கப்பட்டு ரூ.792 கோடி மீட்கப்பட்டது. இப்படி இந்தியாவிலும் ஒரு பொருளாதாரக் குற்றவாளியாக இருக்கிறார் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism