Election bannerElection banner
Published:Updated:

வாரன் பஃபெட்டுடன் மதிய உணவு... ரூ.31 கோடிக்கு ஏலம்!

வாரன் பஃபெட்
வாரன் பஃபெட்

இன்றைய மதிப்பில் 31 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் இந்த ஏலம்தான், உலகிலேயே விலைமதிப்பு மிக்க மதிய உணவாகக் கருதப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற உலகின் மிகப் பெரிய பணக்காரர், பங்குச் சந்தையின் தந்தை வாரன் பஃபெட்டுடன் ஒருவேளை மதிய உணவு உண்பதற்கு, ஆண்டுதோறும் ஏலம் விடுவது வழக்கம். அப்படி, ஏலத்தின்மூலம் நடப்பு ஆண்டில் கிரிப்டோ கரன்ஸி தொழிலதிபர் ஜஸ்டின் சன் என்பவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். உணவருந்த, வரும் ஜூலை 25–ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை மற்றொரு நாளுக்கு தள்ளிவைத்திருப்பது பரபரப்பாகியுள்ளது.

ஏனெனில், வாரன் பப்ஃபெட்டுடனான உணவு விருந்துக்கு ரூ.31 கோடி கொடுக்க உள்ள ஜஸ்டினுக்கு உடம்பு சரியில்லையாம். அவர், இப்போது கிட்னி ஸ்டோன் பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், உணவு விருந்துக்கான தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஏழைகள் மற்றும் வீடு அற்றவர்களுக்காக இயங்கிவரும் (Glide) கிளைடு என்ற தொண்டு நிறுவனத்திற்கு உதவும் பொருட்டு, ஆண்டு தோறும் இந்த ஏலத்தை நடத்திவருகிறார், வாரன் பஃபெட்.

ஜஸ்டின் சன்
ஜஸ்டின் சன்
இன்றைய மதிப்பில் 31 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் இந்த ஏலம், உலகிலேயே விலைமதிப்பு மிக்க மதிய உணவாகக் கருதப்படுகிறது.

இவர், இதுவரை இந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 19 வருடங்களாகப் பணியாற்றிவருகிறார். இந்த ஏலத்தின்மூலம் மட்டும் இதுவரை 30 மில்லியன் டாலர்களைத் திரட்டி, வாழ்வாதாரம் குன்றிய மக்களுக்கு வாரன் பஃபெட் உதவி செய்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு