Published:Updated:

அனைவருக்கும் ஏற்ற ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்: சுந்தரம் மியூச்சுவல் சுனில் சுப்ரமணியம்!

சுந்தரம் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்
News
சுந்தரம் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்

சிரிக்கும் புத்தர் என்பது மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் நல்வாழ்வின் சின்னமாக இருக்கிறது. அது போல் இந்த ஃபண்டும் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் நல்வாழ்வை அளிப்பதாக இருக்கும். - சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் இயக்குநர் சுனில் சுப்ரமணியம்.

சுந்தரம் மியூச்சுவல் பண்ட் நிறுவனம், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டமான சுந்தரம் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட். (Sundaram Flexi Cap Fund) திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

இந்த அறிமுகம் குறித்து சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் சுப்ரமணியம் கூறும் போது, ``இந்தத் ஃபண்டில் திரட்டப்படும் நிதி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 55 முதல் 70 நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும். அதிக நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் பரவலாக்கம் செய்யப்படுகிறது. இந்த ஃபண்டில் லார்ஜ் கேப், ஸ்மால் கேப், மிட் கேப் நிறுவனப் பங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் சுந்தரம் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் அனைத்து சந்தை சுழற்சியிலும் சிறப்பாகச் செயல்படுவதாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சி நீண்ட காலத்தில் உறுதிப்பட்டதாக இருக்கிறது. இது இந்த ஃபண்டின் லாபத்தில் எதிரொலிக்கும்” என்றார்.

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் சுப்ரமணியம்
சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் சுப்ரமணியம்

அவர் மேலும் கூறும்போது, ``சிரிக்கும் புத்தர் (Laughing Buddha) என்பது மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் நல்வாழ்வின் சின்னமாக இருக்கிறது. அது போல் இந்த ஃபண்டும் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் நல்வாழ்வை அளிப்பதாக இருக்கும்” என்றார்.

சுந்தரம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டின் ஈக்விட்டி பிரிவு முதன்மை முதலீட்டு அதிகாரி ரவி கோபாலகிருஷ்ணன், ``இந்த ஃபண்டில் டாப் டவுண் அப்ரோஜ் முறையில் துறையும், பாட்டம் அப் அப்ரோஜ் முறையில் பங்கும் தேர்வு செய்யப்படும். லார்ஜ் கேப் பங்குகள் நடுத்தர வருமானம் கொடுப்பவையாக இருக்கும். ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் நிறுவனப் பங்குகள் அதிக வருமானம் தருபவையாக இருக்கும்” என்றார்.

சுந்தரம் ஈக்விட்டி மியூச்சுவல் ஈக்விட்டி பிரிவு முதன்மை முதலீட்டு அதிகாரி ரவி கோபாலகிருஷ்ணன்
சுந்தரம் ஈக்விட்டி மியூச்சுவல் ஈக்விட்டி பிரிவு முதன்மை முதலீட்டு அதிகாரி ரவி கோபாலகிருஷ்ணன்

இந்த ஃபண்டை நிதி மேலாளர் - ஈக்விட்டி சுதிர் கேடியா மற்றும் ஈக்விட்டி பிரிவின் முதன்மை முதலீட்டு அதிகாரி - ரவி கோபாலகிருஷ்ணன், ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது. பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் நிஃப்டி 500 TRI இன்டெக்ஸ் ஆகும்.

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரூ.52,380 கோடி தொகையை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்ட் நிறுவனத்தின் திட்டங்களில் 11 லட்சம் பேருக்கு மேல் முதலீடு செய்திருக்கிறார்கள். நாடு முழுக்க 80-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது.