நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஃபண்ட் கிளினிக் : 10 ஆண்டுகள்... ரூ.1 கோடி இலக்கு..! - எவ்வளவு முதலீடு..?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

இன்றைய நிலையில் லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்தால் 4% வருமானம் கிடைப்பதே கடினம்.

எனக்கு 37 வயதாகிறது. நான் 2017-ம் ஆண்டு முதல் சில ஃபண்டுகளில் மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். `2027-ம் ஆண்டில் ரூ.1 கோடி சேர்க்க வேண்டும்’ என்பது என் இலக்கு. என் இலக்கை அடைய என் முதலீடுகள் உதவுமா?

என் முதலீடுகள்... நிப்பான் இந்தியா குரோத் ஃபண்ட் ரூ.5,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் ரூ.5,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் ரூ.5,000, எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.5,000.

- விஜயகுமார், பெங்களூரு

ஃபண்ட் கிளினிக் : 10 ஆண்டுகள்... ரூ.1 கோடி இலக்கு..! - எவ்வளவு முதலீடு..?

“பத்து ஆண்டுகளில் உங்கள் இலக்கான ரூ.1 கோடியை அடைய நீங்கள் மாதம் ரூ.46,000 முதலீடு செய்துவர வேண்டும். அத்துடன் அந்த முதலீடு 11% வருமானம் தருவதாக இருக்கும்பட்சத்தில்தான் உங்கள் இலக்கை அடைய முடியும். நீங்கள் இப்போது செய்துவரும் முதலீடுகளை மட்டும் தொடர்ந்தால், ரூ.55 லட்சம் சேர்க்க முடியும். உங்கள் முதலீட்டிலுள்ள ஃபண்டுகளை இன்றைய சூழ்நிலையில் அப்படியே தொடரலாம். இருப்பினும் உங்களுக்கு இலக்குகளுக்கான ஆண்டுகள் நீண்டகாலமாக இருப்பதால், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் கடந்த சில மாதங்களாக நன்றாக வருமானம் தந்திருக்கிறது என்றாலும், அதை மாற்றி ஒரு லார்ஜ்கேப் ஃபண்டில் முதலீடு செய்வது சிறந்தது. ஆக்ஸிஸ் புளூசிப் அல்லது சுந்தரம் செலக்ட் ஃபோகஸ்டு ஃபண்டுக்கு மாற்றிவிடவும்.”

முதலீடு
முதலீடு

நான் டி.எஸ்.பி ஃபோகஸ் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட், நிப்பான் இந்தியா ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் போன்றவற்றில் தலா ரூ.1,000 கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலீடு செய்துவருகிறேன். என் முதலீட்டில் மாற்றம் ஏதும் அவசியமா?

- ஜி.அகிலன், மெயில் மூலமாக

“உங்களிடமிருக்கும் முதலீட்டில் நிப்பான் இந்தியா ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்டை நிறுத்திவிடவும். அதன் செயல்பாட்டில் சில ஆண்டுகளாகப் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் இல்லை. ஆகையால், அதற்கு பதிலாக மோதிலால் ஆஸ்வால் ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்யவும். ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட் முதலீடு செய்திருக்கும் ஆட்டோமொபைல் பங்குகளின் செயல்பாடு குறைந்திருந்தாலும், சமீபகாலத்தில் அந்தப் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன. எனவே, சில காலாண்டுகளுக்குத் தொடர்ந்து கண்காணித்து வரவும். அதன் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லையென்றால், வெளியேறிவிடவும்.”

முதலீடு
முதலீடு

என் வயது 60. நான் ஓராண்டுக்கு முன்பிருந்தே ஐந்து ஆண்டுகள் இலக்கு அடிப்படையில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். என் முதலீட்டில் மாறுதல் செய்ய வேண்டுமா?

என் முதலீடுகள்... ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மால் கம்பெனீஸ் ஃபண்ட் ரூ.5,000, எஸ்.பி.ஐ மேக்னம் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,500, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட் லைன் ஃபண்ட் ரூ.2,500, டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,500, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் ரூ.2,500, ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் ரூ.2,500, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.2,500, சுந்தரம் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட் ரூ.2,500, டாடா ஈக்விட்டி பி.இ ஃபண்ட் ரூ.2,500.

- எஸ்.ராஜன், சென்னை

ஃபண்ட் கிளினிக் : 10 ஆண்டுகள்... ரூ.1 கோடி இலக்கு..! - எவ்வளவு முதலீடு..?

“உங்களுடையது ஐந்து வருட இலக்குகள் என்பதால், உங்களிடமுள்ள முதலீட்டில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ், ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட், டாடா ஈக்விட்டி பி.இ ஃபண்ட் ஆகிய மூன்றையும் நிறுத்திவிடவும். அவற்றுக்கு பதிலாக, அட்டவணையில் தரப்பட்டுள்ள பரிந்துரை அடிப்படையில் முதலீடு செய்யவும்.”

எனக்கு யூலிப் பாலிசி மூலம் ரூ.5 லட்சம் முதிர்வுத் தொகை கிடைத்தது. நான் 2020, பிப்ரவரியில் மொத்த முதலீடாகச் சில ஃபண்டுகளில் அந்தத் தொகையை முதலீடு செய்தேன். கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக என் முதலீட்டில் மாற்றம் செய்ய வேண்டுமா? நான் 50% தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு இலக்கு வைத்தும், 50% தொகையை அவசரகால நிதியாகக் கருதியும் முதலீடு செய்திருக்கிறேன். என் முதலீடுகள்... ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.1,20,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ரூ.1,20,000, எஸ்.பி.ஐ ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.40,000, ஆக்ஸிஸ் லிக்விட்டி ஃபண்ட் ரூ.60,000, எஸ்.பி.ஐ மேக்னம் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் ஃபண்ட் ரூ.70,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் ரூ.60,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மீடியம் டேர்ம் ஃபண்ட் ரூ.40,000.

- பாலாஜி, சென்னை

“இன்றைய நிலையில் லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்தால் 4% வருமானம் கிடைப்பதே கடினம். எனவே, அந்த முதலீட்டை அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டில் முதலீடு செய்யவும்.

முதலீடு
முதலீடு

உங்கள் கடன் சார்ந்த முதலீடு அவசரகால நிதி என்பதால், `AAA’ ரேட்டிங் உள்ள ஐ.டி.எஃப்.சி அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டில் முதலீடு செய்யவும். மீதமுள்ள ஃபண்டுகளை அப்படியே தொடரவும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.