நாணயம் விகடனும் பிர்லா - சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து நடத்திய செல்வத்தைப் பெருக்கும் முதலீடு - முதலீட்டாளர் விழிப்பு உணர்வு கூட்டம் நெல்லையில் கடந்த 26-ம் தேதி சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய பிர்லா - சன் லைஃப் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி மற்றும் விநியோக வளர்ச்சிப் பிரிவின் தலைவர் கே.எஸ்.ராவ், “நாம் உழைத்துச் சம்பாதித்த பணம் வங்கியிலோ, வீட்டின் லாக்கர் பெட்டியிலோ தூங்கிக் கொண்டிருக்காமல், அந்தப் பணத்தை முறையாக முதலீடு செய்வதன்மூலம் நல்ல பயனை அடைய வேண்டும்” என்றார்.

அடுத்து பேசிய முதலீட்டு ஆலோசகரான ஏ.கே.நாராயன், ‘‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு பொறுமை தேவை. இன்று பணத்தை முதலீடு செய்தால், நாளை வருமானம் வந்துவிடாது. நீண்டகால நோக்கில் முதலீடு செய்தால் மட்டுமே நல்ல வருமானம் ஈட்ட முடியும்’’ என்றார்.

பிர்லா சன் லைஃப் குழுமத்தின் வர்த்தக மேலாளர் குருராஜ், “மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பலவகை உண்டு. உங்கள் தேவையைப் பொறுத்து உங்களுக்கான வகையைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். நீங்கள் முதலீடு செய்யும் பணம் உங்களுக்கு நிச்சயம் சம்பாதித்துக் கொடுக்கும்” என்று முடித்தார்.

அடுத்து பேசிய முதலீட்டு ஆலோசகர் வி.நாகப்பன், ‘‘மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது அந்த நிறுவனத்தில் உள்ள ஃபண்ட் மேனேஜர்கள், அந்த ஃபண்ட் தரும் வருமானத்தைப் பார்த்து முதலீடு செய்ய வேண்டும்'' என்றார்.

கருத்தரங்கு முடிவில், வாசகர்களின் கேள்விகளுக்கு நிபுணர்கள் பதிலளித்தனர்.

படம்: எல்.ராஜேந்திரன்.