இதுவரை பலவகையான பங்கு சார்ந்த திட்டங்கள் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் கடன் சார்ந்த திட்டங்களில் ஒன்றான ஃப்ராங்க்ளின் இந்தியா ஷார்ட் டேர்ம் இன்கம் பிளான் குறித்துப் பார்ப்போம்.

கடன் சார்ந்த திட்டங்களில் முதிர்வு காலத்தை அடிப்படை யாகக் கொண்டு பலவகையான திட்டங்கள் உள்ளன. லிக்விட், அல்ட்ரா ஷார்ட் டேர்ம், மீடியம் டேர்ம், இன்கம், கிரெடிட் ஆப்பர்சூனிட்டீஸ், கில்ட் என பலவகைகள் உள்ளன. இந்தத் திட்டத்தின் பெயரில் ஷார்ட் டேர்ம் என இருந்தாலும், நாம் இந்த ஃபண்டை ஒரு மீடியம் டேர்ம் ஃபண்டாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த ஃபண்ட் வைத்திருக்கும் உபகரணங்களின் சராசரி முதிர்வு காலம் ஏறக்குறைய இரண்டரை ஆண்டு கள் ஆகும். இந்த ஃபண்ட் பெரும்பாலும் அதிக வட்டி தரக்கூடிய கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்கிறது.

இந்த ஃபண்ட் வைத்திருக்கும் உபகரணங்களின் சராசரி கிரெடிட் ரேட்டிங் A ஆகும்.

இதன் போர்ட்ஃபோலியோவில் ஏறக்குறைய 48% முதலீடுகள் ‘AA’ ரேட்டிங்குடனும் மற்றும் 37% முதலீடுகள் ‘A’ ரேட்டிங் மற்றும் அதற்குக் குறைவாக உள்ள உபகரணங்களிலும் உள்ளன. எஞ்சிய முதலீடுகள் ‘AAA’ ரேட்டிங் கொண்ட உபகரணங்களிலும், டிரஷரி பில்ஸ் மற்றும் டெபாசிட்டுகளிலும் உள்ளன. மொத்தத்தில், இந்த ஃபண்ட் சற்று குறைவான கிரெடிட் ரேட்டிங் கொண்ட நிறுவனங்களில்தான் தனது பெரும்பாலான முதலீடுகளை வைத்துள்ளது.

இருந்தபோதிலும், இதுவரை சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது எடுக்கும் கிரெடிட் ரிஸ்க்குக்கு ஏற்ப இதன் வருமானமும் இருந்துள்ளது. கார்ப்பரேட் பாண்ட் முதலீட்டில் இந்த ஃபண்ட் நிறுவனம் ஒரு முன்னோடி யாகத் திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கடன் சார்ந்த திட்டங் களை நிர்வகிக்கும் அனலிஸ்ட்டுகளும், குழுவும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ஒரு சிறந்த அனுபவத்தைக் கொண்டதாகும்.

இந்தத் திட்டம் கடந்த ஒன்று (10.93%) மற்றும் மூன்று (9.94%) வருடங்களில் நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளது. கடந்த ஐந்து (8.92%) மற்றும் பத்து (8.68%) வருடங்களிலும் நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளது. தற்போது இந்தத் திட்டம் ரூ.9,531 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் குணால் அகர்வால் மற்றும் சந்தோஷ் காமத் ஆகியோர் ஆவர்.

அதானி என்டர்பிரசைஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ராம் டிரான்ஸ்போர்ட், திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் மற்றும் எஸ்ஸெல் கார்ப்பரேட் ரிசோர்சஸ் போன்ற நிறுவனங்களின் உபகரணங்கள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. கடந்த 18 காலாண்டுகளில் ஒருமுறைகூட இந்த ஃபண்ட் நெகட்டிவ் வருமானம் தந்ததில்லை. அதேபோல், கடந்த 10 வருடங்களில் ஒருமுறைகூட நெகட்டிவ் வருமானத்தை இந்த ஃபண்ட் தந்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 2004-ம் ஆண்டு மிகவும் குறைவான வருமானமான 4.01 சதவிகிதத்தையும், 2009-ம் ஆண்டு மிகவும் அதிகமான வருமானமான 11.95 சதவிகிதத்தையும் கொடுத்துள்ளது.

‘AAA’ கிரெடிட் ரேட்டிங் உள்ள முதலீட்டை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம். அதே சமயத்தில், ஒரு டீசன்ட் கிரெடிட் குவாலிட்டியுடன், கூடுதல் வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள் இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம். அதற்கு இந்த ஃபண்டின் 12 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு ஒரு சான்றாக உள்ளது.

இந்த ஃபண்டில் முதலீடு செய்த ஒரு வருடத்துக்குள் வெளியேறினால், 0.5% வெளியேற்றுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களது முதலீட்டுக் காலத்தைக் குறைந்தது மூன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வைத்துக்கொள்வது நல்லது. மூன்று ஆண்டுகளுக்குள் வெளியேறும்போது வரும் வருமானத்துக்கு அவரவர் வருமான வரி வரம்பில் வரி கட்ட வேண்டிவரும். அதுவே, மூன்று வருடத்துக்கு மேல் ஆகும்போது, நீண்ட கால கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ் உரித்தாகும். அது தற்போது, பணவீக்கத்துக்கு அட்ஜஸ்ட் செய்தபிறகு 20% ஆகும். அவ்வாறு செலுத்தும்போது வருமான வரி மிகவும் சொற்பமாகத்தான் வரும். ஆகவே, வருமான வரியின் உச்ச வரம்பில் இருப்பவர்களுக்கு, ஃபிக்ஸட் டெபாசிட்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஃபண்ட் வரப்பிரசாதமாக இருக்கும்.

இந்த ஃபண்டில் டிவிடெண்ட் ஆப்ஷன் (வாராந்திரம், மாதாந்திரம், காலாண்டுக்கு ஒருமுறை) மற்றும் போனஸ் ஆப்ஷனும் உள்ளது. இவற்றையெல்லாம்விட குரோத் ஆப்ஷனில் சென்றுவிட்டு, மூன்று ஆண்டுகள் கழித்து எஸ்டபிள்யூபி (SWP – Systematic Withdrawal Plan) முறை மூலம் மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் பணத்தை எடுத்துக் கொள்ளும்போது, வருமான வரி மிகவும் குறைவாக இருக்கும்.

ரெக்கரிங் டெபாசிட்டுக்குப் பதிலாக, எஸ்ஐபி முறையிலும் இந்த ஃபண்டில் சிறு முதலீட்டாளர்கள் தாராளமாக முதலீடு செய்யலாம். நல்ல ஃபண்ட் நிறுவனம், சிறந்த ஃபண்ட் நிர்வாகக் குழு, நல்ல வரலாறு போன்ற குணங்களுடைய இந்த ஃபண்ட் கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர் களுக்கும், போர்ட்ஃபோலியோவில் கடன் சார்ந்த ஒதுக்கீட்டை நாடுபவர் களுக்கும் சிறப்பான முதலீடாக அமையும்.

யாருக்கு உகந்தது?

பங்குச் சந்தையில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், அதிக வரி வரம்பில் இருப்பவர்கள், வரிக்குப் பிந்தைய வருமானத்தை அதிகமாக எதிர்பார்ப்பவர்கள், ஓய்வுக்காலத்தில் இருப்பவர்கள், பணம் அதிகம் உள்ளவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள், நடுத்தர காலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு நிகரான வருமானத்துடன், வேண்டும்போது எடுத்துக்கொள்ளும் வசதியை விரும்புபவர்கள்.

யார் முதலீடு செய்யக்கூடாது?

நீண்ட காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், குறிப்பிட்ட இடைவெளிகளில் உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள்.