இது காலாண்டு முடிவுகள் வெளியாகும் காலம். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதைத் துல்லியமாக அளப்பதற்கு காலாண்டு முடிவுகள் கட்டாயம் உதவும். ஒவ்வொரு நிறுவனமும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, தனது நிறுவனம் அந்தக் காலாண்டில் எப்படிச் செயல்பட்டது, அந்தச் சமயத்தில் கிடைத்த லாபம் என்ன என்பது குறித்து பல தகவல்களை வெளியிடும். இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். இதில் முக்கியமான 10 விஷயங்களைப் பார்ப்போம்.

1.நிறுவனத்தின் வளர்ச்சி!

காலாண்டு முடிவில் ஒரு நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி என்ன என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வளர்ச்சியை, போன காலாண்டுக்கும் இந்தக் காலாண்டுக்குமாக ஒப்பீட்டுப் பார்ப்பதைவிட போன வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் எப்படி உள்ளது எனப் பார்க்க வேண்டும். ஐ.டி, எஃப்எம்சிஜி ஆகிய துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் எப்படி செயல்பட் டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம். ஆனால், சிமென்ட், சர்க்கரை, உரம் போன்ற துறை சார்ந்த பங்குகளின் வளர்ச்சி என்பது சீஸனுக்கு ஏற்ப மாறும். எனவே, முதலீடு செய்திருக்கும் பங்கு எந்தத் துறையைச் சார்ந்தது என்பதைப் பொறுத்து நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் வேறுபடும்.

2.லாப வளர்ச்சி!

ஒரு நிறுவனத்தின் நிகர லாப வளர்ச்சி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறிப்பிட்ட காலாண்டில் எப்படி உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வருமான வளர்ச்சியை ஆய்வு செய்கிற மாதிரி, நிகர லாபமும் ஒவ்வொரு ஆண்டும் சீராக அதிகரித்து வருகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

3.வட்டியும் தேய்மானமும்!

வருமானம் மற்றும் லாப வளர்ச்சி விகிதம் என்பது ஆரம்ப நிலையில் முதலீட்டாளர்கள் முக்கியமாக பார்க்கும் விஷயங்கள்தான். இதை மட்டுமே பார்த்தால் போதாது. சில நேரங்களில் வருமானம் அதிகமாகி லாபம் குறைந்திருக்கும். அதேபோல், வருமானம் குறைந்து லாபம் அதிகமாக இருக்கும். வருமானம், நிகர லாபத்துக்கு இடையில் ஒரு முதலீட்டாளரானவர் பிற வருமானங்கள், வட்டிச் செலவு, தேய்மானம் போன்றவற்றைக் கவனிக்க வேண்டும். இந்த ஒவ்வொரு விஷயமும் கடந்த காலாண்டுகளில் எப்படி வளர்ந்து வந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் முக்கியமான பிசினஸானது மோசமாக இருக்கலாம். ஆனால், நிறுவனத்துக்கு சொந்தமான சில சொத்துக்களை விற்கும்போது ஒரே ஒருமுறை கிடைக்கும் வருமானம் அதிகரித்திருக்கலாம். பிற வருமானம் மூலம் கணிசமான வருமானம் கிடைத்திருக்கலாம். புது மெஷின் போன்ற சொத்துக்களுக்கான வட்டி செலவு அதிகரித்திருக்கலாம். சேதாரம் மூலம் செலவும் அதிகரித் திருக்கலாம்.

இந்த செலவுகளால் நிறுவனத்தின் வருமானம் அதிகமாக இருந்தபோதும் நிகர லாபம் குறைந்தி ருக்கலாம். எனவே, லாபம் உயர்ந்தாலும் சரி, குறைந்தாலும் அதற்கான காரணங்களை ஆராய்வது அவசியம்.

4. செயல்பாட்டு மார்ஜின்!

செயல்பாட்டு லாபம் மற்றும் செயல்பாட்டு மார்ஜின் என்கிற இரண்டு விஷயங்களையும் கட்டாயம் கவனிக்க வேண்டும். செயல்பாட்டு லாபம் என்பது வட்டி, தேய்மானம் மற்றும் வரி ஆகியவற்றுக்குமுன் கணக்கிடப்படுவது. இதில் நிறுவனத்தின் முக்கியமான தொழில்களிலிருந்து கிடைக்கும் வருமானம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். நிறுவனத்துக்குக் கிடைக்கும் பிற வருமானம் இதில் சேர்த்துக் கொள்ளப்படாது. செயல்பாட்டு வருமானத்திலிருந்து செயல்பாட்டு லாபமானது சதவிகிதத்தில் சொல்லப் படுவதே செயல்பாட்டு மார்ஜின் ஆகும். செயல்பாட்டு லாப மார்ஜின் குறைந்தால், அது சந்தையில் உள்ள போட்டிகளின் அழுத்தத்தைக் குறிக்கும். அல்லது மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தாலும் செயல்பாட்டு லாப மார்ஜின் குறையும்.

5. எக்ஸப்ஷனலும் எக்ஸ்ட்ராடினரியும்!

ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் எக்ஸப்ஷனல் அயிட்டம், எக்ஸ்ட்ராடினரி அயிட்டம், ஃபாரெக்ஸ் இழப்பு என சிலவற்றைக் குறிப்பிட்டு இருப்பார்கள். இதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் லாபம் என்பது ஒருமுறை வரும் வருமானம் அல்லது செலவைப் பொறுத்து மாறும். ஒரு நிறுவனத்தின் உண்மையான செயல்பாட்டை அறிய வேண்டுமெனில், இந்த விஷயங்களின் விளைவாக ஏற்படும் பாதிப்புகளை நீக்கிவிட்டு, அந்த நிறுவனத்தின் முக்கியமான தொழில் மூலம் கிடைக்கும் லாபம் ஒவ்வொரு காலாண்டும், ஒவ்வொரு ஆண்டும் எப்படி வளர்ந்து வந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

6. அடிக்குறிப்புகள் முக்கியம்!

காலாண்டு முடிவுகளில் ஆங்காங்கே அடிக்குறிப்புகளில் (Footnotes) சில முக்கியமான விவரங்களைச் சொல்லியிருப்பார்கள். இதைக் கவனமாகப் படித்துப் பார்ப்பது அவசியம். ஏனெனில், நிறுவனத்தின் லாபம் அல்லது வருமானம் அதிகமான தற்கான காரணம் என்ன என்பதை இதில் எடுத்துச் சொல்லியிருப்பார்கள். மேலும், இதில் டிவிடெண்ட், கணக்கு சரிக்கட்டல் போன்ற விஷயங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதைப் படித்துப் புரிந்துகொண்டால்தான் அந்த நிறுவனத்தின் உண்மையான நிதி நிலை என்ன என்பது தெரியும். அதாவது, ஏதாவது ஒரு வெளிநாட்டு நிறுவனத்துக்கு ஒரு பொருளை விற்பனை செய்து வராத பணத்துக்கு அயல்நாட்டுச் செலாவணி லாபத்தைக் காட்டியிருப்பார்கள். எனவேதான், அடிக்குறிப்புகளை அவசியம் படிக்க வேண்டும்.

7. பேலன்ஸ்ஷீட்!

ஒவ்வொரு நிறுவனமும் அரையாண்டுக்கு ஒருமுறை காலாண்டு முடிவுடன் பேலன்ஸ்ஷீட்டையும் கட்டாயம் வெளியிட வேண்டும் என புதிதாக உத்தரவிடப்பட்டு இருக்கிறது. உதாரணமாக, செப்டம்பர் மற்றும் மார்ச் மாதத்தில் பேலன்ஸ்ஷீட் வெளியிட வேண்டும். எதிர்காலத்தில் ஒவ்வொரு காலாண்டுக்கும் பேலன்ஸ்ஷீட் வெளியிட வேண்டும் என்று வரலாம்.

பேலன்ஸ்ஷீட் மூலம் குறுகியகால கடன் மற்றும் நீண்ட கால கடன் எவ்வளவு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். மேலும், லாபத்தின் மூலம் கடன்கள் குறைக்கப் பட்டுள்ளதா என அறியலாம். கடந்த வருடம் இதே காலாண்டில் எவ்வளவு கடன் இருந்தது, இப்போது எவ்வளவு கடன் உள்ளது, முந்தைய காலாண்டில் எவ்வளவு கடன் இருந்தது என்பதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கடன் அதிகரித்துள்ளது எனில், அதற்கான காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும். அசையாச் சொத்துகள் புதியதாக வாங்கப்பட்டுள்ளதா அல்லது செயல்பாட்டு மூலதனம் சரியாக நிர்வகிக்கப்படாததாலா என்பதையும் பார்க்க வேண்டும்.

8. செயல்பாட்டு மூலதனம்!

ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு மூலதனம் (Working Capital) எப்படி உள்ளது என்பதைப் பார்ப்பது அவசியம். இதில் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் அல்லது மூலதன பொருள்களின் கையிருப்பு எவ்வளவு உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். அடுத்ததாக, விற்பனைக்கான நிலுவைத் தொகை, உற்பத்தியான பொருள்கள் மற்றும் மூலதனப் பொருள்கள் அதிகமாக இருந்தால், விற்பனை எதிர்பார்த்த அளவு வேகமாக நடைபெறவில்லை என்பதாகும். விற்பனைத் தொகை வசூல் செய்யப்படாவிட்டால் அது லாபத்தை நேரடியாகப் பாதிக்கும்.

9. கையிருப்பு எப்படி?

ஒரு நிறுவனத்தின் ரொக்கக் கையிருப்பு மற்றும் அதன் லிக்விட் முதலீடுகள்(டெபாசிட், ஃபண்ட் முதலீடு) அதிகமாக இருந்தால், அது கடனைக் குறைப்பதற்குப் பயன்படும். மேலும், விரிவாக்கங்களுக்கும் பயன்படுத்தலாம். அதனால் நிறுவனத்தின் பணம் மற்றும் லிக்விட் முதலீடுகளை(current investments) உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

10. வாராக் கடன்!

வங்கிகளைப் பொறுத்தவரை யில் மொத்த வாராக் கடன் எவ்வளவு உள்ளது, நிகர வாராக் கடன் எவ்வளவு உள்ளது என்பதைக் கவனிப்பது முக்கியம். வாராக் கடன் என்பது இரண்டு காலாண்டுகளுக்குமேல் வட்டி வராமல் இருக்கும் கடன்களாகும். இது போன்ற கடன்கள் அதிகச் சிக்கலை உண்டாக்கும். முதலீட்டாளர்கள் நிகர வாராக் கடன் எவ்வளவு உள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். வங்கிகளின் லாபம் வளர்ந்திருந்தாலும் அதனுடைய நிகர வாராக் கடனும் வளர்ந்திருந்தால், அந்த லாபமே கேள்விக்குறியாகும்.