Published:Updated:

அள்ளித்தந்த மியூச்சுவல் ஃபண்ட்...இனியும் லாபம் தொடருமா?

இரா.ரூபாவதி

பிரீமியம் ஸ்டோரி

பாதுகாப்பான மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டம் என்றால் அது மியூச்சுவல் ஃபண்ட்தான். மேலும், அவரவரின் தேவைக்கும், ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கும் ஏற்ப மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும். கடந்த ஒரு வருடமாக பங்கு சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல வருமானம் தந்து வருகின்றன. இதனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு முக்கியமான காரணங்கள் பல. மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் நிலையான மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆட்சி அமைந்துள்ளது. கமாடிட்டி சந்தையில் முக்கிய வர்த்தகப் பொருளாகவும், இந்தியாவின் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறையும்போது பணவீக்க விகிதம் குறையும். இதனால் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. வட்டி விகிதம் குறைந்தால், பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க் கப்படுகிறது.

இனிவரும் காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்து ஃபண்ட்ஸ் இண்டியா டாட்காமின் துணைத் தலைவர் காந்த் மீனாட்சியிடம் கேட்டோம்.

“கடந்த ஒரு வருடமாக பங்குச் சந்தையின் வளர்ச்சி என்பது மிகவும் நல்ல நிலையில் இருந்து வருகிறது. கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதனால் பாதுகாப்பு மிக்க மற்றும் நிலையான வருமானம் தரக்கூடிய லிக்விட் ஃபண்டுகளின் வருமானம் கணிசமாக குறைந்தது.  பல முதலீட்டாளர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது. அதாவது, முதலீட்டாளர்கள் அதிக அளவு மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்கிறார்கள்.

அள்ளித்தந்த மியூச்சுவல் ஃபண்ட்...இனியும் லாபம் தொடருமா?

எஃப்ஐஐகளின் முதலீடு!

இந்திய முதலீட்டாளர்கள் மட்டு மல்லாமல், அந்நிய முதலீட்டாளர் களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், உலக நாடுகளின் பொருளாதாரம் தேக்கநிலையில் இருப்பதே. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடு களில் வட்டி விகிதம் என்பது 1 - 1.5 சதவிகிதமாகவே உள்ளது ஆனால், இந்தியாவில் இது மிக அதிகமாக உள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் வளர்ச்சியைவிட அதிகமாக உள்ளது. அதாவது, பிரேசிலில் சமீபத்தில்தான் தேர்தல் முடிந்துள்ளது. அங்கு நிலையான ஆட்சி என்பது இன்னும் உருவாக வில்லை. இதனால் அங்கு வளர்ச்சி என்பது இல்லாமல் உள்ளது. உக்ரைன் பிரச்னை மற்றும் கச்சா எண்ணெய் யின் விலை குறைந்து வருவதால் மிகவும் மோசமான நிலையில் ரஷ்யா உள்ளது. இதேபோல, மிகப் பெரிய வளர்ச்சிக்குப்பின் சீனாவில் ஒருவிதமான மந்தநிலை நிலவுகிறது. இதனால் அங்கு இப்போதைக்கு பொருளாதார வளர்ச்சி இல்லை. தென் ஆப்பிரிக்காவில் பல்வேறு சமூகவியல் காரணங்களால் இப்போதைக்கு அங்கு வளர்ச்சி இருக்காது. இதுபோன்ற பல காரணங்களினால் உலக முதலீட்டாளர் கள்  அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்கிறார்கள். இந்தியாவில் கிடைக்கும் வருமானம் அதிகமாக உள்ளது. இந்த வருமானம் உலக நாடுகள் எதிலும் கிடைப்பதில்லை என்பதால்தான் எஃப்ஐஐகள் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்து வருகிறார்கள்.

அள்ளித்தந்த மியூச்சுவல் ஃபண்ட்...இனியும் லாபம் தொடருமா?

சந்தையின் தற்போதைய நிலை!

இப்போது உள்ள சந்தை தொடர் ஏற்றத்துக்கான சந்தையாக உள்ளது. அதாவது, அடிப்படைக் காரணங்கள் மிகவும் வலிமையாக இருப்பதால், இந்த வளர்ச்சி அடுத்த 3 - 5 வருடங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வளர்ச்சியை அளவிடுவதற்கான எந்தக் குறியீட்டை எடுத்துக் கொண்டா லும், இனிவரும் காலங்களில் அந்த வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்பது தான் எல்லோரது முடிவாகவும் உள்ளது’’  என்றார் அவர். 
 

அள்ளித்தந்த மியூச்சுவல் ஃபண்ட்...இனியும் லாபம் தொடருமா?

நிறுவனங்களின் செயல்பாடு!

நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார ஏற்றத்தைப் பயன்படுத்தி வருமானத்தை ஈட்டும் வழிகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. அதிகமான முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்வதற்கான முக்கிய காரணம், தங்கத்தின் விலை கடந்த ஒரு வருடமாக தேக்கநிலையில் இருக்கிறது. அதேசமயம், ரியல் எஸ்டேட் துறையும் மந்தநிலையில் இருக்கிறது. 
 
அதிகரிக்கும் ஃபண்ட் நிறுவனங்களின் வருமானம்!

பங்குச் சந்தை பெரிய வளர்ச்சி அடைந்திருப்பதால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. அதாவது, பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் வருமானம் இரண்டு மடங்கு அதிகரித் துள்ளது. கடந்த 2012-13 நிதியாண்டைவிட 2013-14-ம் நிதியாண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் லாபம் 56.8% அதிகரித்துள்ளது. இப்படி மொத்தம் 21 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் வருமானம் ரூ.1,567 கோடியாக அதிகரித் துள்ளது. அதேசமயம், 20 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரூ.300 கோடி அளவுக்கு நஷ்டம் அடைந்துள்ளதையும் கவனிக்கத் தவறக்கூடாது. இதற்கு முந்தைய ஆண்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் லாபம் ரூ.1,093 கோடியா கவும், நஷ்டம் ரூ.287 கோடியாகவும் இருந்தது.

எல் அண்ட் டி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரூ.70 கோடி நஷ்டம் அடைந் துள்ளது. ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரூ.358 கோடி லாபம் அடைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12%  அதிகம். இதேபோல, ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் லாபம் 33% அதிகரித்து, ரூ.304 கோடியாக உள்ளது. ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 66% லாபம் அதிகரித்து, ரூ.182 கோடியாக உள்ளது. மேலும், யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஆகியவை லாபம் அடைந்துள்ளன.

அதிகரித்த எஸ்ஐபி முதலீட்டாளர்கள்!

ஃபண்ட் நிறுவனங்கள் சிறு நகரங்கள் மற்றும் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்பு உணர்வு கூட்டங்களை அதிக அளவில் நடத்தி வருகின்றன. இதன்மூலம் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளது. மொத்தமாக 15 நகரங்களில் புதிதாக எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவர் களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதத்தில் 2 லட்சமாக உள்ளது. இது, ஜனவரி மாதத்தில் 89 ஆயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அள்ளித்தந்த மியூச்சுவல் ஃபண்ட்...இனியும் லாபம் தொடருமா?

அதிகரித்த ஈக்விட்டி முதலீடு!

கடந்த ஒரு வருடத்தில் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் 40 சத விகிதத்துக்குமேல் வருமானம் தந்துள்ளன. இதனால் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செப்டம்பர் மாதத்தில் ரூ.2.27 லட்சம் கோடியாக அதிகரித்திருந்தது. இது 2014 ஜனவரி மாதத்தில் ரூ.1.79 லட்சம் கோடியாக இருந்தது. ஈக்விட்டி மற்றும் கடன் சார்ந்த ஃபண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மொத்தமாக நிர்வகிக்கும் தொகையின் அளவு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது.

முதலீட்டுக்கு ஏற்ற ஃபண்டுகள்!

ஐசிஐசிஐ ஃபோகஸ்டு புளூசிப் ஃபண்ட், மிரா இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஐசிஐசிஐ புரூ வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட், பிர்லா சன் லைஃப் வேல்யூ டிஸ்கவரி புரூ வேல்யூ ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ஆகியவற்றில் அடுத்த 3-5 வருடங்களுக்கு முதலீடு செய்யலாம்.

அள்ளித்தந்த மியூச்சுவல் ஃபண்ட்...இனியும் லாபம் தொடருமா?

லாபம் அள்ளித்தந்த ஃபண்டுகள்!

ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானம் என்பது கடந்த ஓராண்டில் மிகவும் அதிகமாக உள்ளது. இதில் எஃப்எம்சிஜி துறையில் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகள் மிகவும் குறைந்த அளவிலான வருமானத்தைத் தந்துள்ளன. ஆனால், அதுவே சுமார் 32% உள்ளது. இதில் மிக அதிகமாக இன்ஃப்ரா துறை மியூச்சுவல் ஃபண்டு கள் அதிக வருமானத்தைத் தந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், மத்தியில் நிலையான ஆட்சி அமைந்திருப்பது மற்றும் வளர்ச்சிக்கான நடவடிக்கை அதிகமாக எடுக்கப்பட்டிருப்பதே. என்றாலும், இந்தத் துறையில் ரிஸ்க்கும் அதிகம்.
ஈக்விட்டி லார்ஜ் கேப் ஃபண்டுகள் 42.63% வருமானம் தந்துள்ளன. இதில் ரிஸ்க் கொஞ்சம் குறைவாக இருக்கும். அதாவது, லார்ஜ் கேப் வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும் தொகை  பெரும்பாலும் பெரிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படும். அந்த நிறுவனங்களின் வளர்ச்சி என்பது சீராக இருக்கும். இதனால் சரிவு என்பது குறைவாக இருக்கும்.

அள்ளித்தந்த மியூச்சுவல் ஃபண்ட்...இனியும் லாபம் தொடருமா?

வரி சேமிப்புக்காக முதலீடு செய்யப்படும் இஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மிக அதிகமாக 57.28 சதவிகிதமும், மிக மோசமாக 48.28 சதவிகிதமும் வருமானம் தந்துள்ளன.  ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில்  ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் ரூ. 38,770 கோடி முதலீடு  வந்துள்ளது. இதுவரை வந்த முதலீடுகளில்  இதுவே மிக அதிகமான அளவு. அதாவது, 2007-08-ம் ஆண்டுகளில் சந்தை பெரிய ஏற்றம் கண்டபோது வந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைவிட இது அதிகமாகும்.

அள்ளித்தந்த மியூச்சுவல் ஃபண்ட்...இனியும் லாபம் தொடருமா?

மேலும், பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்  பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட அதிக வருமானம் கொடுத்துள்ளது. அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளில் 67%மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பெஞ்ச்மார்கை விட அதிக வருமானமும், 5 ஆண்டுகளில் 75% மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பென்ச்மார்க்கைவிட அதிக வருமான மும் கொடுத்துள்ளன. இதுவே, பத்தாண்டுகளில் 64 சதவிகிதம் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட அதிக வருமானம் கொடுத்துள்ளது.

இனியும் என்ன தாமதம்? இதுவரை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யாதவர்கள், இனியாவது எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யத் தொடங்கலாமே!

‘‘தமிழகத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரித்து வருகிறது!’’

‘‘சிறிய நகரங்களில் ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு உயர்ந்துள்ளது. குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்டுக்கு புதிய முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் திருச்சி, திருநெல்வேலி, மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்திய பங்குச் சந்தையில் எஃப்ஐஐக்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்வார்கள். இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி வருகிறது. குறிப்பாக, வளர்ந்துவரும் சந்தைகளில் இந்தியா கவர்ச்சிகரமான இடத்தைப் பிடித்திருக்கிறது. 

அள்ளித்தந்த மியூச்சுவல் ஃபண்ட்...இனியும் லாபம் தொடருமா?

குறுகிய காலத்தில், பார்மா மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ் துறைகள் சிறப்பாகச் செயல்படும். நடுத்தர காலத்தில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால், ஆயில்-காஸ்-எனர்ஜி நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படும். நீண்ட காலத்தில் இன்ஃப்ரா துறை சிறப்பாக இருக்கும்.

சிறு முதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்டுகளின் தினசரி என்ஏவி ஏற்ற இறக்கத்தைப் பார்க்க தேவை இல்லை. முதலீடு செய்வதற்கு நேரம், காலம் பார்க்க வேண்டியதில்லை. முதலீட்டாளர்கள் தங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப கடன் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.”

- சி.சரவணன்.

"3 - 5 ஆண்டுகளில் நல்ல லாபம் கிடைக்கும்!’’

‘‘கடந்த 10, 5, 2 மற்றும் ஓராண்டு காலத்தில் எங்களின் அனைத்து ஈக்விட்டி ஃபண்டுகளும் பெஞ்ச்மார்க்கைவிட அதிக வருமானம் தந்துள்ளன. அடுத்த 3-5 ஆண்டுகளில் பங்கு மற்றும் பங்கு சார்ந்த ஃபண்ட் முதலீடு நியாயமான வருமானத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம். பெரும்பாலான துறைகள் அவற்றின் நீண்ட கால சராசரி மதிப்பீட்டுக்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது.

அள்ளித்தந்த மியூச்சுவல் ஃபண்ட்...இனியும் லாபம் தொடருமா?

இந்திய பொருளாதாரம் நீண்ட காலத்தில் சீராகும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அந்தவகையில், 2016-17 மதிப்பீட்டில் பெரும்பாலான துறைகள் முதலீட்டாளர்களைக் கவர்வதாக இருக்கிறது. பல தொழில் நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தித்திறனை முழு அளவில் பயன்படுத்திக்கொள்ளும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அடுத்த 3-5 ஆண்டுகளில் வங்கி, இன்ஃப்ரா, பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

சந்தை உச்சத்தில் இருக்கும் நிலையில் சிறு முதலீட்டாளர்கள் அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப அசெட் அலோகேஷனை உருவாக்கிக்கொள்ள வேண்டும். சந்தை இறக்கத்தில் இருக்கும்போது வெளியேறுவது, சந்தை உச்சத்தில் முதலீடு செய்வது போன்ற தவறான முதலீட்டுப் பழக்கத்தை கைவிட வேண்டும். பங்குச் சந்தை, அதிக மதிப்பீட்டில் இருக்கும் நிலையில், சந்தை இறங்கும்போது முதலீடு செய்ய கையில் கொஞ்சம் பணத்தை ஒதுக்கிவைப்பது அவசியம்.’’

- சி.சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு