Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு... களைகட்டிய சேலம் கூட்டம்!

செ.தினேஷ் குமார்

மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு... களைகட்டிய சேலம் கூட்டம்!

செ.தினேஷ் குமார்

Published:Updated:

நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட் -  செல்வத்தைப் பெருக்கும் முதலீடு’ என்ற தலைப்பில் சேலத்தில் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.

முதலில் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் எஸ்.சுதிர், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த அடிப்படை விஷயங்களை விளக்கிப் பேசினார். அடுத்து, பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பயிற்சிப் பிரிவின் தலைவர்
எஸ்.குருராஜ், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள வகைகள், யாருக்கு எந்த ஃபண்ட் ஏற்றது என்பது குறித்து விளக்கிப் பேசினார். அவர் போட்டுக்காட்டிய வீடியோக்கள், முதலீட்டாளர்கள் இடையே மியூச்சுவல் ஃபண்ட் குறித்த தெளிவை ஏற்படுத்தியது.

மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு... களைகட்டிய சேலம் கூட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வருட இறுதியில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை தேவைப்படுகிறது என்றால், அதற்கேற்றாற் போல ஒவ்வொரு மாதமும் சிறிய அளவு தொகையை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். சந்தை இறங்குமுகமாக உள்ளபோது எஸ்ஐபி தொகையை அதிகரிப்பது அவசியம், தற்போதுள்ள நிலையில் தங்கத்தின் மீதான எஸ்ஐபியைத் தொடர்வதும், மேலும் அதிகரிப்பதும் நல்லது” என அவர் சொன்னார்.

முதலீட்டு ஆலோசகர் வி.நாகப்பன் பேசும்போது, “மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறவர்கள், நம்பகமான முதலீட்டு ஆலோசகர் ஒருவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்” என்றார்.

கூட்டத்தின் இறுதியில், சீனியர் சிட்டிசன்களில் ஒருவர் ‘ஈக்விட்டியில் முதலீடு செய்யலாமா?’ என கேட்க, அதற்கு பதில் சொன்னார் எஸ்.சுதிர். “சீனியர் சிட்டிசன்கள் ஈக்விட்டியில் முதலீடு செய்யக்கூடாது என எந்த சட்டமும் கிடையாது. ஆனால், சீனியர் சிட்டிசன்களுக்கு பணி ஓய்வுக்குப்பிறகு வருமானத்துக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, ரிஸ்க் அதிகமுள்ள முதலீடு செய்யக்கூடாது. இருந்தாலும், முதலீட்டின் ஒரு பகுதியை பங்கு சார்ந்த ஃபண்டுகளில் செய்யலாம். நீண்ட காலத்தில் நிதி தேவைப்பட்டால், இந்த முதலீடு பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தெளிவை ஏற்படுத்தும் இதுபோன்ற கூட்டங்களை எல்லா பெரிய, சிறிய நகரங்களிலும் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தனர் முதலீட்டாளர்கள்.

படங்கள்: க.தனசேகரன்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism