நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

முனைப்புடன் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டம் !

மு.சா.கெளதமன், படங்கள்: தி.குமரகுருபரன்.

நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்திய ‘வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு’ - முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வுக் கூட்டம் சென்னையில் கடந்த 23-ம் தேதி நடந்தது.

முதலில் தொடங்கிய ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ரீஜினல் ஹெட் ஹரீஷ், ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் நிதிக் கட்டுப்பாடு மற்றும் சரியான நிதித் திட்டமிடல் இல்லையென்றால், சம்பாதித்த பணம்  அனைத்தும் வீணாகிவிடும் என்பதை, புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரை உதாரணம் காட்டி எடுத்துச் சொன்னார்.

முனைப்புடன் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டம் !

அவரைத் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழநியப்பன், மற்ற துறைகளில் முதலீடு செய்வதைக்காட்டிலும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்பதை விளக்கினார்.

‘‘மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் திவாலானால் போட்ட பணம் போய்விடுமோ என சிலர்  பயப்படு கிறார்கள். நம் நாட்டில் அப்படி நடக்க 99.9% வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு சட்ட திட்டங்கள் வலுவாக இருக்கிறது. எனவே, துணிந்து முதலீடு செய்யலாம்’’ என்றார் அவர்.
நிறைவாக, குடும்ப நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி, நமது எதிர்காலத் தேவைகளை குறைவில்லாமல் நிறைவேற்றிக்கொள்ள ஒவ்வொருவரும் அவசியமாக நிதித் திட்டமிடல் செய்ய வேண்டும் என்றார். நம்  முதலீடு பணவீக்கத்தை யும் தாண்டி லாபம் தந்தால்தான் அது நல்ல முதலீடு.  

வங்கி எஃப்டிக்கு 8% வட்டி மட்டுமே கிடைக்கிறது. ஆனால், பணவீக்கமோ அதற்குமேல். எனவே, எஃப்டியில்  பணத்தைப் போட்டுவைத்தால் நமக்கு நஷ்டம்தான்.  நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்க மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுதான் சிறந்தது என்று சொன்னார். கூட்டத்தின் இறுதியில் வாசகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிபுணர்கள் விரிவான விளக்கம் தந்தனர்.