Published:Updated:

வேலூரில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம்...

முதலீட்டில் பொறுமை தேவை!சு.ராஜா, மு.வாசு. படங்கள்: சி.வெங்கடேஷன்.

வேலூரில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம்...

முதலீட்டில் பொறுமை தேவை!சு.ராஜா, மு.வாசு. படங்கள்: சி.வெங்கடேஷன்.

Published:Updated:

நாணயம் விகடனும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து நடத்திய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வுக் கூட்டம் வேலூரில் நடந்தது. வேலூர், திருவண்ணாமலை, சென்னை என பல ஊர்களிலிருந்தும் பல வாசகர்கள் இந்தக் கூட்டத்துக்கு ஆர்வத்துடன் வந்து பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் முதலாவதாகப் பேசினார் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தென்மண்டல அதிகாரி  வைபவ் சுக். ‘‘அனைவரின் வாழ்க்கையிலும் ஏபிசிடி அவசியம். அதுதான், ஆஸ்பிரேஷன், பேலன்ஸ்டு பட்ஜெட், கமிட்மென்ட்ஸ், டிசையர்ஸ். நான் ஒரு கார் வாங்க நினைத்தேன்.

வேலூரில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம்...

வங்கியில் ஆர்டியில் சிறுக சிறுகச் சேமித்தேன். கார் வாங்கத் தேவையான பணம் சேர்ந்தபோது, காரின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டது. நம் முதலீடும் சேமிப்பும் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைக் கொடுக்க வேண்டும்.  இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சரியானதாக இருக்கும்’’ என்றார்.

அடுத்து பேசிய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமைப் பயிற்சியாளர் குருராஜ், ‘‘அரை மணி நேரம் சமைக்க வேண்டிய உணவை கால் மணி நேரத்தில் சமைத்தால், அந்த உணவு அரைகுறையாகத்தான் தயாராகி இருக்கும். அதேமாதிரிதான் முதலீடும். அதற்குரிய காலத்தைத் தராவிட்டால், நல்ல பலனைத் தராது’’ என்றார். ‘‘ஒருவரது முதலீடும் சேமிப்பும் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைத் தராவிட்டால், ஓய்வு பெற்றபின் வாழ்க்கை வசதியைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அல்லது 60 வயதுக்குப் பின்பும் கட்டாயமாக உழைக்க வேண்டியிருக்கும்’ என்றும் எச்சரித்தார் அவர். 

வேலூரில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம்...

அடுத்து பேசிய பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன், ‘‘நாம் ஷாப்பிங் செய்வதற்கு (செலவு செய்வதற்கு) குடும்பத்துடன் செல்கிறோம். ஆனால், இதுபோன்ற முதலீடு தொடர்பான கூட்டங்களுக்கு (வருமானத்துக்கு வழிசொல்லும்) பெண்களை அழைத்துச் செல்வதில்லை. முதலீட்டையும் சேமிப்பையும் பெண்கள் தெரிந்துகொண்டு அவர்களும் அதில் ஈடுபட்டால் மட்டுமே குடும்பத்தின் அனைத்துத் தேவைகளும் சரியாக நிறைவேறும்’’ என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் வாசகர்கள் தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.