2015-ம் ஆண்டு தொடங்கிவிட்டது. பொருளாதாரச் சூழல்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்ல ரம்பித்துள்ளதால், முதலீடுகளுக்கான அசெட் அலோகேஷன் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சிறு முதலீட்டாளர்கள் மனதில் சில கேள்விகள் எழும்.

1. பங்குகளில் அதிக முதலீடு செய்யலாமா, சந்தை உச்சத்தில் இருக்கிறது. நான் தாமதமாக சந்தைக்கு வந்திருக்கிறேன். அதனால் பங்குகளில் குறைவாக முதலீட்டை மேற்கொள்ளலாமா?

2. பங்குகளுக்குப் பதில், பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா? அப்படி செய்தால், வரிக்குப் பிந்தைய வருமானம் குறைவாக இருக்குமா?

3. கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கத்தின் விலை கணிசமாக இறங்கி இருக்கிறது. இதன் விலை கடந்த பத்தாண்டுகளில் நடந்ததுபோல் மீண்டும் விலை அதிகரிக்குமா?

4. ஏற்கெனவே போதிய அளவுக்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துவிட்டேன். இது போதுமா? இல்லை இன்னும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வேண்டுமா?

நாணயம் விகடன் 2014, ஜனவரி முதல் இதழில் நான் எழுதிய கட்டுரை பலருக்கு நினைவில் இருக்கலாம்.

அதில் குறிப்பிட்டிருந்த சில முக்கிய விஷயங்களைச் சுருக்கமாக தொகுத்துத் தருகிறேன்.

1. பங்கு முதலீடு:

2013 டிசம்பரில் சென்செக்ஸ் புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது. என்றாலும், அப்போதும் 2008ம் ஆண்டின் நிலையிலேயே இருந்தது. இந்தக் காலகட்டத்தில் நிறுவனங்களின் வருமானம் சுமார் 60% அதிகரித்திருந்தது. அது பங்குச் சந்தை குறியீட்டிலும் எதிரொலித்தது. அந்தவகையில் 2014 முதல் 2017 வரை பங்குச் சந்தை ஆண்டுக்கு சராசரியாக 20% லாபம் தரும் என்று சொல்லியிருந்தேன்.

2. தங்கம்:

கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை 400% வரை ஏற்றம் கண்டிருக்கிறது. அதேநேரத்தில், ஆபரணத் தங்கத்துக்கான தேவை குறைவு, தங்கத்தின் மீது ஊக வணிகம் செய்பவர்கள் சந்தையிலிருந்து வெளியேறியதால், தங்கத்தின் விலை ஏற்றம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், மறுசுழற்சி தங்கம் பயன்பாட்டுக்கு வந்திருப்பதால், அடுத்த சில ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலையில் அதிக ஏற்றம் இருக்காது.

3. ரியல் எஸ்டேட்:

அடுத்த 3 - 5 ஆண்டுகளுக்கு ரியல் எஸ்டேட் முதலீட்டில் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியாது. அந்தவகையில் புதிதாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், தற்போதைய நிலையில் வட்டி அதிகமாக இருப்பதால், கடன் மூலம் சொத்து வாங்குவது ரிஸ்க் கொண்டது.

4. எஃப்டி மற்றும் கடன் சார்ந்த முதலீடு:

குறுகிய காலத்தில் எஃப்டி மற்றும் கடன் சார்ந்த முதலீடு எப்படி இருக்கும் என்பது கணிக்க முடியாததாக இருக்கும். அடுத்த 2 - 3 ஆண்டுகளில் கடனுக்கான வட்டி 1% - 1.5% குறைவது விரும்பத்தக்கதாக இருக்கிறது. ஆனால், மார்க்கெட் சென்டிமென்ட் கடனுக்கான வட்டி மேலும் உயரும் என்பதாக இருக்கிறது.

அந்தவகையில் ஒரு முதலீட்டாளர் லாங் டேர்ம் பாண்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வட்டி விகிதம் குறையும்போது லாபம் அடையலாம் என்று குறிப்பிட்டிருந்தேன். அது அப்படியே நடந்திருப்பதைக் காணலாம்.

2014, ஜனவரி 1 முதல் 2014 டிசம்பர் வரையில் மேலே குறிப்பிடப்பட்ட அசெட்கள் என்ன வருமானம் கொடுத்திருக்கின்றன என பார்ப்போம்.

1. பங்குச் சந்தை:

சென்செக்ஸ் 21000லிருந்து 27400க்கு உயர்ந்து 30% அதிகரித்துள்ளது. பெரும்பாலான ஈக்விட்டி ஃபண்டுகள் நல்ல லாபம் தந்திருக்கின்றன.

2. தங்கம்:

22 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,770லிருந்து 2,555க்கு குறைந்துள்ளது. இது 8% இறக்கம். பெரும்பாலான கோல்டு இடிஎஃப்களின் வருமானம் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளது.

3. கடன் ஃபண்டுகள்:

நீண்ட கால கடன் ஃபண்டுகள் 15 20% வருமானம் கொடுத்துள்ளன. 10 ஆண்டு அரசு கடன் பத்திரங்கள் மீதான வருமானம் 8.9 சதவிகிதத்திலிருந்து 7.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

4. ரியல் எஸ்டேட்:

இதர சொத்துகளைப்போல் ரியல் எஸ்டேட்டுக்கு, அதன் விலை ஏற்றத்தைச் சரியாக பிரதிபலிக்கும் இண்டெக்ஸ் இந்தியாவில் இல்லை. பெரும்பாலான இந்திய நகரங்களில் ரியல் எஸ்டேட் விலை சற்று இறக்கம் கண்டிருப்பதைப் புள்ளிவிவரங்கள் விளக்குகின்றன.

இனிவரும் ஆண்டுகளுக்கான முதலீட்டு ஒதுக்கீடுகளைப் பற்றி பார்ப்போம்.

2015 - 2017: முதலீட்டு கணிப்புகள்!

இந்திய அரசியல், நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மேம்பாடு, சர்வதேச பொருளாதார நிலை, ஐரோப்பிய பிரச்னைகள், ரஷ்ய சிக்கல்கள், அமெரிக்காவில் ரூபாய் நோட்டு புதிதாக அச்சிடுவது எல்லாம் குறுகிய காலத்துக்குத்தான் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதேநேரத்தில், நாம் நீண்ட கால பங்கு முதலீட்டை மேற்கொள்வதால் இவைகுறித்து கவலைக்கொள்ள தேவை இல்லை.

பங்குச் சந்தை:

அடுத்த மூன்றாண்டுகளுக்கு, அதாவது 2017 வரைக்கும் சிறப்பான லாபம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014-ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தை 30 சதவிகிதத்துக்கும் மேல் வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. இதேபோல், அடுத்த மூன்றாண்டுகளுக்கும் வருமானம் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமல் இருக்கலாம். அதேநேரத்தில், பங்குச் சந்தை முதலீடு, அடுத்த மூன்று ஆண்டு காலத்தில் இதர அசெட் பிரிவுகளைவிட அதிக வருமானம் தருவதாக இருக்கும்.

சென்செக்ஸ், நிஃப்டி போன்ற பங்குச் சந்தை குறியீடுகள் ஆண்டுக்கு 15 - 20% வருமானம் அளிக்கக்கூடும். சில டைவர்ஸிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகள் இதைவிட அதிக வருமானம் தருவதாக இருக்கும். பங்குச் சந்தை ஏன் காளையின் பிடியில் இருக்கும் என்பதற்கான மூன்று முக்கிய காரணங்கள் பின் வருமாறு:

1. பெரும்பாலான நிறுவனங்கள் அவற்றின் கடன் சுமையைக் குறைத்துள்ளன. இதனால் வட்டிச் செலவு கணிசமாக குறைந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 60 டாலர் அளவுக்கு இறங்கி இருப்பது, இந்திய நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்க உதவியாக இருக்கும். அடுத்த மூன்றாண்டுகளில் இந்திய நிறுவனங்களின் வருமானம் ஆண்டுக்கு 15 - 20% அதிகரிக்கக்கூடும். இது நிறுவனங்களின் பங்கு விலையிலும் எதிரொலிக்கும்.

2 பி/இ மதிப்பீடுகள் தற்போது அவற்றின் உச்சநிலைக்கு அருகில் இருக்கிறது. நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்கும்போது, பி/இ மதிப்பீடுகள் குறைய வாய்ப்பு இல்லை.

3. 2007-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மக்களின் பங்குச்சந்தை முதலீடு குறைவாக இருக்கிறது. இது 2015-ல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்கும்போது, எஃப்ஐஐகள் தங்கள் முதலீட்டை இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியே எடுக்க வாய்ப்பு குறைவு.

தங்கம்:

கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் விலை சுமார் 8% குறைந்திருக்கிறது. 2008 மற்றும் 2012 இடையே ஆபரணத்துக்கான தங்கம் மற்றும் தொழிற்சாலை தேவை குறைந்திருக்கிறது. சப்ளை மற்றும் தேவையைப் பார்க்கும்போது உள்நாட்டில் மற்றும் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அடுத்த மூன்றாண்டுகளில் அதிகரிக்காது. இடையிடையே மேக்ரோ செய்திகளால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணலாம். ஆனால், நீண்ட காலத்தில் அது லாபம் தரும் முதலீடாக இருக்க வாய்ப்பு இல்லை.

ரியல் எஸ்டேட்:

இதர அசெட் பிரிவுகளைப்போல, ரியல் எஸ்டேட் வருமானத்தைக் கண்டறிய நம்மிடம் போதிய புள்ளிவிவரங்கள் இல்லை. இதன்

வருமானம் என்பது நகரத்துக்கு நகரம், பகுதிக்குப் பகுதி வேறுபடும். தங்கத்தைப்போலவே, கடந்த 5 - 10 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் விலை மிகவும் அதிகரித்துள்ளது. அதனால் சொத்து (மனை, வீடு) என்பது வாங்கக்கூடிய விலையில் இல்லாமல் இருக்கிறது.

ரியல் எஸ்டேட் -ஐ பொறுத்தவரையில் விலை ஏற்றம் நின்றுவிட்டால், தேவை என்பது சப்ளையாக மாறிவிடும். அப்போது சப்ளை அதிகமாகி, விலை குறைந்துவிடும். மூன்றாண்டுகளில் ரியல் எஸ்டேட் வருமானம் எதுவும் தரவில்லை எனில், அதற்காக செலவிட்ட கடனுக்கான வட்டி, ஆண்டுக்கு சுமார் 10% இழப்பாகும். ஆனால், பெரும்பாலான முதலீட்டாளர்கள், இந்த வட்டி இழப்பை ஒப்புக்கொள்வதில்லை. ரியல் எஸ்டேட் முதலீடு என்பது எப்போதும் இழப்பில்லை என்கிற கொள்கை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகாது.

கடன் ஃபண்டுகள்:

கடந்த பல ஆண்டுகளில் வட்டி விகிதம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஆனால், பணவீக்க விகிதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வட்டி மிகவும் அதிகமாக உள்ளது. ஆர்பிஐ பணவீக்க விகிதத்தைக் குறைக்க அதிக வட்டியைப் பராமரித்து வருகின்றது.

அண்மைக் காலத்தில் பணவீக்க விகிதம் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. இதனால், வரும் ஆண்டுகளில் வட்டி கணிசமாக குறையும். வட்டி குறைவால் அடுத்த மூன்றாண்டுகளில் நீண்ட கால கடன் ஃபண்டுகள் கவர்ச்சிகரமான முதலீடாக இருக்கும்.

அசெட் அலோகேஷன்!

அசெட் அலோகேஷன் மூலம் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். இந்த அலோகேஷன் என்பது ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப அமைவது சிறப்பு.

2015 முதல் 2017 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான அசெட் அலோகேஷனை மேலே அட்டவணையாகத் தந்திருக்கிறேன், பார்த்து பயன் பெறவும்.

அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மாடல் போர்ட்ஃபோலியோவில், அதிக ரிஸ்க் எடுக்காத முதலீட்டார்களுக்கு அவர்களின் முதலீட்டுக்கேற்ப ஆண்டுக்கு 10% வருமானம், நடுத்தர அளவு ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளருக்கு 12% வருமானம், அதிக ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளருக்கு 15% வருமானம் கிடைப்பதாக எடுத்துக் கொண்டி ருக்கிறோம்.

மேலும், மேலே கூறப்பட்டுள்ள வருமானக் கணக்கு மூன்றாண்டு களுக்கானது. இது வரிக்குப் பிந்தைய வருமானமாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த முதலீட்டு போர்ட் ஃபோலியோவை 2014 ஜனவரி முதல் ஆரம்பித்த வர்கள் அப்படியே தொடரலாம்.

மேலும் புதிதாக அசெட் அலோகேஷன் உருவாக்குபவர்களும் இந்த போர்ட்ஃபோலியோவைப் பின்பற்றலாம்.

தொகுப்பு: சி.சரவணன்.