Published:Updated:

சேலம்: மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம்!

நிரம்பி வழிந்த அரங்கம்! ச.ஸ்ரீராம் படங்கள்: அ.நவின்ராஜ்.

சேலம்: மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம்!

நிரம்பி வழிந்த அரங்கம்! ச.ஸ்ரீராம் படங்கள்: அ.நவின்ராஜ்.

Published:Updated:

நாணயம் விகடனும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை சேலத்தில் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் சேலம், ஆத்தூர், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வாசகர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். ஆரம்பம் முதலே கூட்டம் அலைமோதிய அரங்கில் சிறிது காலதாமதமாக வந்த சில வாசகர்கள் நின்று கொண்டே  பேச்சைக் கேட்கத் தயாராக இருந்தது, அவர்களின் அதிக ஆர்வத்தைக் காட்டுவதாக இருந்தது.

இந்தக் கூட்டத்தில் முதலாவதாகப் பேசிய ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்டின் கிளஸ்டர் தலைவர் வெங்கடேஷ், ‘‘நம் சேமிப்பு, முதலீடுகளில் எப்போதுமே நாம் எதிர்பார்ப்பது அதிக வருமானத்தைத் தான். உலகின் எட்டாவது அதிசயமாக அறிவியல் மேதை ஐன்ஸ்டீனால் சொல்லப்பட்டது கூட்டுவட்டி தான். நீண்ட கால முதலீட்டில் ஒருசில சதவிகிதம் கூடுதல் வருமானம் கிடைத்தால், அதன்மூலம் கிடைக்கும் வருமானம் பல மடங்காக இருக்கும்’’ என்றார்.

சேலம்: மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம்!

அடுத்து பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், ‘‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது கட்டுப்பாடுகள் நிறைந்தது. வரிச் சலுகை பெற்றுத் தரக்கூடியது. நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைத் தரக்கூடியது. இப்படிப்பட்ட முதலீட்டின் அருமையை நாம் புரிந்துகொள்ளாமல் நம் பணம் அனைத்தையும் ரியல் எஸ்டேட்டிலும், தங்கத்திலும் மட்டுமே முதலீடு செய்து வருகிறோம். ரியல் எஸ்டேட்டையோ, தங்கத்தையோ நினைத்த நேரத்தில் நம்மால் விற்க முடியாது. அப்படி விற்க நினைத்தால் மார்க்கெட் விலையைவிட குறைந்த வருமானமே கிடைக்கும்.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் மார்க்கெட் விலைக்கு உடனடியாக விற்று வெளியேற முடியும்’’ என்றார்.

மியூச்சுவல் ஃபண்ட் நிபுணரும் குடும்ப நிதி ஆலோசகருமான சுரேஷ் பார்த்தசாரதி, ‘‘எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான வகையில் இன்று நிதித் திட்டமிடலைச் செய்துகொள்கிறவர்களே என்றும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இன்றைக்கு சந்தோஷமாக இருப்பவர்கள், எதிர்காலத்தில் வருந்தவே செய்வார்கள்’’ என்றார்.

கூட்டத்தின் முடிவில் வாசகர்களின் கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் சொல்ல, தங்களது சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றனர் வாசகர்கள்.