Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: எஸ்ஐபி எனக்குக் கிடைத்த வரம்!

ஒரு வாசகியின் அனுபவம்மு.சா.கெளதமன் படங்கள்: தி.கெளதீஸ்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: எஸ்ஐபி எனக்குக் கிடைத்த வரம்!

ஒரு வாசகியின் அனுபவம்மு.சா.கெளதமன் படங்கள்: தி.கெளதீஸ்

Published:Updated:

மியூச்சுவல் ஃபண்டில் சிறுக சிறுக முதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் மிக நல்ல லாபம் கிடைக்கும் என்பதை நாணயம் விகடனில் தொடர்ந்து சொல்லி வருகிறோம். நாம் அப்படிச் சொல்வதற்கு ஒரு வாழும் உதாரணமாக இருக்கிறார் திருச்சியில் வசிக்கும் வாசகி
டி.நந்தினி. திருச்சியில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் வணிகத் துறை உதவிப் பேராசிரியையாக வேலை பார்க்கும் அவரைச் சந்தித்தோம். ‘‘மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது எனக்குக் கிடைத்த வரம்’’ என்றபடி உற்சாகமாகப் பேச ஆரம்பித்த நந்தினி, தனது முதலீட்டு அனுபவங் களை நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘நான் 1993-ம் ஆண்டிலிருந்து முதலீடு செய்து வருகிறேன். அந்தக் காலத்தில் முதலீட்டுக்கு நான் தேர்ந்தெடுத்தது, எல்லோரும் மேற்கொள்ளும் வங்கி எஃப்டி, அஞ்சலக ஆர்.டி. போன்றவைதான். அது பாதுகாப்பானதாக இருந்தாலும் அதன் வருமானம் பண வீக்கத்தைத் தாண்டியதாக இல்லை என்பதை உணர்ந்தேன்.

தற்செயலாக என் நண்பர் மற்றும் ஸ்டாக் ஃபோகஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.குருமூர்த்தியைச் சந்தித்த போது, நான் செய்துவந்த முதலீடுகள் பற்றி ஆலோசனை கேட்டேன். எனக்கு முதன் முதலில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி அவர்தான் பரிந்துரை செய்தார். ஆரம்பத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தயக்கம் இருந்தது. அதைப் புரிந்து கொண்டு, நண்பர் மீண்டும் பலமுறை பேசி புரியவைத்தார். அதன்பிறகே மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்யத் தொடங்கி னேன்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: எஸ்ஐபி எனக்குக் கிடைத்த வரம்!

2007-ம் ஆண்டில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யத் தொடங்கினேன். இதற்குமுன் செய்த முதலீடுகளைக் காட்டிலும் எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்த முதலீடு எனக்கு அதிக வருமானம் தந்தது.  நீண்ட காலத்தில் சுமார் 18% ஆண்டு வருமானம் தருவதாக இருக்கிறது.

பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சிகளைச் சந்தித்த காலத்தில் எஸ்ஐபி முதலீட்டை விடாமல் அதிக அளவில் முதலீடு செய்தேன். அதிக வருமானம் ஈட்ட, சொத்துக்களை உருவாக்க நிறுவனப் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும் என அனுபவப் பூர்வமாக உணர்ந்தேன்.

இன்று எனக்குக் கிடைத்த வருமானத்தைப் பார்த்து என் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வருகிறார்கள். ஐந்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் எட்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்திருக்கிறேன்.
 

கவனத்துக்கு...

1. முதலில் ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம் நம் முதலீடுகள் பற்றி ஆலோசிப்பது நல்லது.

2. அதிக வருமானம் கிடைக்க நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும்.

3. பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கங்களைக் கண்டு பயப்படத் தேவையில்லை. சந்தை இறக்கம் கண்டால் நிச்சயம் பழைய உச்சங்களை விட புதிய உச்சத்தைத் தொடும் என்கிற விதிப்படி கூடுதல் முதலீடுகளைச் செய்யலாம்.

4. பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதை விட, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது ரிஸ்க் குறைவு. அதேசமயத்தில் பங்குச் சந்தைக்கு நிகராக அல்லது அதற்கும்மேல் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் வருமானத்தைத் தரக்கூடியது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: எஸ்ஐபி எனக்குக் கிடைத்த வரம்!

5. நாம் முதலீடு செய்யும் பங்கோ, ஃபண்டோ அதன் கடந்த 10 ஆண்டுகால நடவடிக்கைகள் மற்றும் வருமானத்தை நிச்சயமாகக் கணக்கில் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த 10 ஆண்டு களில் சந்தையின் பெரிய ஏற்ற இறக்கங்களை அந்தப் பங்கு அல்லது ஃபண்ட் எப்படிச் சமாளித்தது, எவ்வளவு லாபம் ஈட்டி தந்தது என்பதைக் கவனித்துத் தேர்ந்தெடுக்க முடியும்.

6. மாதச் சம்பளக்காரர்களுக்கு எஸ்ஐபி முதலீட்டு முறை மிகவும் உகந்தது.

7. நிரந்தர வருமானம் பெறுபவராக இருந்தால், எஸ்ஐபியில் குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்யலாம்.

8. ஓய்வுபெற்றவராக இருந்தால், டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்யலாம்.

9. அதிக வருமானம் பெற ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

10. வருமான வரியை மிச்சப்படுத்தும் எண்ணம் இருந்தால், இஎல்எஸ்எஸ் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

இந்திய பங்குச் சந்தைகள் வளரும்போது, சந்தையில் முதலீடு செய்யப்படும் நம் பணம் வளராதா..? இந்தியர்களுக்கே உரியதான சேமிப்பை இனி நாம் சிறப்பாகவும் சரியாகவும் செய்வோம். செய்யும் முதலீடுகள் நமக்கும், நம் நாட்டுக்கும் வளத்தைப் பெருக்குவதாக அமையட்டும்’’ என்று தீர்க்கமாகப் பேசி முடித்தார் நந்தினி.

இதுநாள்வரை மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி முறையில் முதலீடு எதுவும் மேற்கொள்ளாதவர்கள் நந்தினியைப்போல, உடனடியாக முதலீட்டை ஆரம்பிக்கலாமே!