Published:Updated:

ஷேர்லக்!

ஷேர் To ஃப்ண்ட் தாவும் முதலீட்டாளர்கள்!

ஷேர்லக்!

ஷேர் To ஃப்ண்ட் தாவும் முதலீட்டாளர்கள்!

Published:Updated:

ருவாரா, அவர் வருவாரா என்று எதிர்பார்த்தபடி ஷேர்லக்கின் வருகைக்காக காத்திருந்தோம். வழக்கம்போல மின்னலாக நம்முன் வந்து உட்கார்ந்தார். ‘‘சந்தை இந்த வாரத்தின் நான்கு நாட்கள் இறக்கத்திலேயே வர்த்தகமானதே!’’ என்று கேட்டோம்.

‘‘சந்தை 5 முதல் 10% இறங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என சில வாரங்களுக்கு முன்பே சொன்னேன். அதுதான் இப்போது நடக்கிறது. இந்திய பங்குச் சந்தையின் ஏற்றம் இப்போதைக்கு எஃப்ஐஐகளின் மூடைப் பொறுத்திருக்கிறது. அவர்களின் மூட் பாசிட்டிவ்-ஆக அதாவது, முதலீடு தொடரும் என்பதற்கான ஒரு புள்ளிவிவரத்தை சொல்கிறார்கள். கடந்த 2014 மார்ச் கடைசியில் இந்தியாவில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 8,054-ஆக இருந்தது. அது இப்போது 8,201-ஆக அதிகரித்துள்ளது.

ஷேர்லக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 குறுகிய காலத்தில் இந்திய பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்தாலும் நீண்ட காலத்தில் அது அதிக ஏற்றத்தில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரிச்சல் லிஞ்ச், 2018-ம் ஆண்டில் சென்செக்ஸ் 54000 புள்ளிகளாக அதிகரித்திருக்கும் என சொல்லி இருக்கிறது. தற்போதைய நிலையில் சந்தை அதிக எக்ஸ்பென்ஸிவ்-ஆக இருக்கிறது. அது இன்னும் 3 முதல் 6 மாதங்களில் சரியாகும். அந்த இறக்கம் வரை முதலீட்டாளர்களை காத்திருங்கள் எனவும் மெரில் லிஞ்ச் குறிப்பிட்டுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அண்மையில் உலக அளவில் நடத்தப்பட்ட சர்வேயில் மிகவும் நம்பகமான சந்தை என்பதில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.

அமெரிக்காவில் வட்டி அதிகரிக்கப்படும் என்கிற பயம், ரூபாய் மதிப்பு குறைவு போன்ற காரணங்களால் சந்தை கணிசமாக இறங்கி உள்ளது. இதனால் தற்போதைய நிலையில் பல பங்குகள் அவற்றின் 200 நாள் மூவிங் ஆவரேஜ் (டிஎம்ஏ)-க்கு கீழ் வர்த்தகமாகி வருகின்றன. என்எஸ்இயில் பட்டியலிடப்பட்டுள்ள 1600 பங்குகளில் பாதிக்கு பாதி 200 டிஎம்ஏக்கு கீழே வர்த்தகமாகி வருகிறது. இது சந்தை மீது நம்பிக்கை இல்லா நிலையை காட்டுவதாக அனலிஸ்ட்கள் கருத்து தெரிவித்துள் ளார்கள்’’ என பேசிக்கொண்டே போனவருக்கு சூடாக  ஏலக்காய் டீ தந்தோம்.

‘‘சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதை தெளிவாக சொல்லுங்கள்!’’ என்று கேட்டோம்.

‘‘நிஃப்டி இன்னும்கூட இறங்க வாய்ப்புள்ளது. நிஃப்டி 8500-க்கு கீழே போனால் 8200 வரை இறங்க வாய்ப்புள்ளது. வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறையை சேர்ந்த பங்குகளின் மதிப்பீடு மிகவும் உச்சத்தில் இருக்கிறது. டாப் 15 வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களின் பி/இ விகிதம் 18.1-ஆக இருக்கிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகம் ஆகும். மேலும், இந்தத் துறை பங்குகளின் புத்தக மதிப்பு 2.3 மடங்காக இருக்கிறது. நிஃப்டி பங்குகளில் நிதிச் சேவை பங்குகளின் பங்களிப்பு 30 சதவிகிதமாக இருக்கிறது.

ஷேர்லக்!

இது ஓராண்டுக்கு முன்பு 24 சதவிகிதமாக இருந்தது. கடந்த 12 மாதங்களில் நிஃப்டி 35% அதிகரித்துள்ள நிலையில், பேங்க் நிஃப்டி 55% உயர்ந்துள்ளது. (அதே நேரத்தில் ஒரு சில தனியார் வங்கிகளின் வேல்யூவேஷன் இப்போதும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. இது குறித்த கவர் ஸ்டோரியை வாசகர்கள் தவறாமல் படிக்கவும்!) அந்த வகையில் இனி ஆயில் அண்ட் கேஸ், கேப்பிட்டல் கூட்ஸ், மெட்டல் துறைகளை சேர்ந்த முன்னணி நிறுவனப் பங்குகள்தான் அடுத்தக் கட்ட விலை அதிகரிப்பில் பங்கேற்கும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
 
கடந்த 11 மாதங்களில் சிறு முதலீட்டாளர்களும் பெரும் பணக்காரர்களும் (ஹெச்என்ஐக்கள்) ரூ.21,000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றிருக்கிறார்கள். அதேநேரத்தில் அவர்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.21,800 கோடி முதலீடு செய்திருக்கிறார்கள். இந்திய சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருப்பதால், முதலீட்டாளர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக மும்பையைச் சேர்ந்த முன்னணி பங்குச் சந்தை அனலிஸ்ட் ஒருவர் தெரிவித்தார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் புதிதாக 3.82 லட்சம் புதிய ஃபோலியோக்கள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கப்பட்டிருக்கிறது. கடந்த 11 மாதத்தில் மட்டும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காக 16.14 லட்சம் ஃபோலியோக்கள் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. இதனை அடுத்து மொத்த ஈக்விட்டி ஃபோலியோக்கள் எண்ணிக்கை 3.11 கோடியாக அதிகரித்துள்ளது. 2014 பிப்ரவரியில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்பட்ட மொத்த முதலீடு ரூ.1.57 லட்சம் கோடியாக இருந்தது. அது 2015 பிப்ரவரியில் ரூ.3.07 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது ஏறக்குறைய இரு மடங்கு உயர்வு’’ என்றார் அவர்.

‘‘ஐபிஓவில் முதலீடு செய்பவர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறதே!’’ என்றோம்.

‘‘அண்மையில் ஐபிஓ வந்து பட்டியலிடப்பட்ட ஓர்டெல் கம்யூனிகேஷன் பங்கு பட்டியலிடப்பட்ட அன்று, அதன் வெளியீட்டு விலையைவிட 8%  குறைந்துள்ளது. மறுநாளும் இதன் விலை 7% அளவுக்கு இறங்கியுள்ளது. இதேபோல், அண்மையில் ஐபிஓ வந்த மான்டே கார்லோ பங்கு விலை அதன் வெளியீட்டு விலையைவிட 25% குறைவாக வர்த்தகமாகி வருகிறது. இது கவலை தரும் போக்குதான்'' என்றார்.

‘‘நிறுவனங்களின் அட்வான்ஸ் டாக்ஸ் எப்படி இருக்கிறது?’’ என்று விசாரித்தோம்.

‘‘நடப்பு மார்ச் காலாண்டுக்கான முன்கூட்டியே வரி கட்டுவதில் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி முன்னணியில் இருக்கின்றன. இவை இரட்டை இலக்கத்தில் வரி கட்டி இருக்கின்றன. கடன் வளர்ச்சி குறைவாக இருந்தபோதிலும் எஸ்பிஐ முந்தையை ஆண்டைவிட 23% அதிகமாக, அதாவது ரூ.1,794 கோடியை அட்வான்ஸ் டாக்ஸ் ஆக கட்டி இருக்கிறது. இதேபோல், ஹெச்டிஎஃப்டி (10%) ரூ. 550 கோடி வரி கட்டி உள்ளன’’ என்றார்.

‘‘புதிதாக என்எஸ்இ குவாலிட்டி 30 என்கிற ஷேர் இண்டெக்ஸை வெளியிடப் போகிறதாமே!’’ என்று கேட்டோம்.

ஷேர்லக்!

‘‘இதனை நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (என்எஸ்இ) குழுமத்தை சேர்ந்த இந்தியா இண்டெக்ஸ் சர்வீசஸ் அண்ட் புராடக்ட்ஸ் நிறுவனம் கொண்டு வருகிறது. என்எஸ்இ-ல் பட்டியலிட்டப்பட்டுள்ள டாப் 100 கம்பெனிகளில் 30 கம்பெனிகளின் பங்குகள் இந்த இண்டெக்ஸ்க்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மூலதனம் மீது அதிக லாபம், குறைவான கடன், நிகர லாபம் அதிகம் உள்ள கம்பெனிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
அடுத்த வாரம் என்எஸ்இ அதன் சிஎன்எக்ஸ் 200, சிஎன்எக்ஸ் 500 இண்டெக்ஸ்களில் மாற்றம் கொண்டு வருகிறது. சிஎன்எக்ஸ் 200-ல் சிஎம்சி பங்கு விலக்கி கொள்ளப்பட்டு, காக்ஸ் அண்ட் கிங்க்ஸ் சேர்க்கப்படுகிறது. சிஎன்எக்ஸ் 500-ல் சிஎம்சி, மாஸ்டெக், ஷாசன் பார்மா பங்குகள் விலக்கி கொள்ளப்பட்டு, மயூர் யூனிகோட்டர்ஸ், முஞ்சால் ஷோவா, சுவன் லைஃப் சயின்ஸ் பங்குகள் சேர்க்கப்படுகிறது. சிஎன்எக்ஸ் மிட்கேப் இண்டெக்ஸ்-ல் சிஎம்சி நீக்கப்பட்டு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சேர்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் மார்ச் 27-ம் தேதி  முதல் அமலுக்கு வருகிறது’’ என்றவர், ‘‘ஏற்ற இறக்கத்தைக் கண்டு அஞ்சாமல், சந்தையில் ஓர் ஒழுங்குடன் தொடர்ந்து முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் லாபம் கிடைக்கும்'' என்று சொல்லிவிட்டு, புறப்பட்டார்.

ஷேர்லக்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism