Published:Updated:

கம்பெனி ஸ்கேன்: மயூர் யூனிகோட்டர்ஸ்! (mayurunIq)

கம்பெனி ஸ்கேன்: மயூர் யூனிகோட்டர்ஸ்! (mayurunIq)

கம்பெனி ஸ்கேன்: மயூர் யூனிகோட்டர்ஸ்! (mayurunIq)

கம்பெனி ஸ்கேன்: மயூர் யூனிகோட்டர்ஸ்! (mayurunIq)

Published:Updated:

1962-ம் ஆண்டு ஒரு தொழிலில் கமிஷன் ஏஜென்டாக வாழ்க்கையைத் தொடங்கினார் ஒருவர். 1970-களின் ஆரம்பத்தில் நிகழ்ந்த பல்வேறு பிசினஸ் நிகழ்வுகள் அவருக்கு கிழக்கிந்தியாவுக்கான டிஸ்ட்ரிபியூட்டர் என்ற அந்தஸ்த்தை தந்தது. 1980-ல் குர்கானில் மாருதி சுஸூகி நிறுவனம் தனது  தொழிற்சாலையை அமைக்க முயன்றபோது, தான் செய்யும் தொழிலுக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது என்பதை உணர்ந்தவர், ஜெய்ப்பூரில் தனது சொந்த தொழிற்சாலையை ஆரம்பித்தார்.

கம்பெனி ஸ்கேன்: மயூர் யூனிகோட்டர்ஸ்! (mayurunIq)

1994-ல் பங்குச் சந்தையில் நிதி திரட்டியதன் மூலம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது இந்த நிறுவனம். 2000-ம் ஆண்டு ஆரம்பத்தில் ஜப்பானிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தித் தொழிலைச் செய்ய ஆரம்பித்து, இன்றைக்கு ஆர்ட்டிஃபிஷியல் லெதர் மற்றும் பிவிசி வினைல் தொழிலில் இந்திய அளவில் மிகப் பெரிய முன்னணி நிறுவனமாக விளங்குகிறது, சுரேஷ் குமார் போதார் தலைமையில் இயங்கிவரும் மயூர் யூனிகோட்டர்ஸ் லிமிடெட்  நிறுவனம்.

இந்த நிறுவனம் ஆர்ட்டிபிஷியல் லெதர் மற்றும் பிவிசி வினைல் துறையில், சந்தை மதிப்பில் சுமார் 11  சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனையில் காலணிகள் தயாரிக்கும் தொழிலுக்கு ஏறக்குறைய 50 சதவிகிதமும், மோட்டார் வாகனங்கள் (கார்கள் உட்பட) தயாரிக்கும் தொழிலுக்கு ஏறக்குறைய 35 சதவிகிதமும், ஏனைய 15 சதவிகிதம் ஆயத்த ஆடைகள், கிளவுஸ் போன்ற துணைப் பொருட்கள் (ஆக்சஸரிஸ்), ஃபர்னிஷிங், அப்ஹோல்ஸ்ட்ரி போன்றவற்றைத் தயாரிக்கும் தொழிலுக்கும்  விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சராசரி உற்பத்தி அளவான 0.20 மில்லியன் லீனியர் மீட்டர் உற்பத்தித் திறனில் ஆரம்பித்து தற்போது 3.05 மில்லியன் லீனியர் மீட்டர் அளவுக்கான உற்பத்தி செய்யும் வசதியை ஜெய்ப்பூரில் ஜெய்ட்புரா மற்றும் தோத்சார் என்ற இடத்தில் இருக்கும் இரண்டு தொழிற்சாலைகளிலும் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

மாருதி சுஸூகி, ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள்ஸ், ஹீரோ மோட்டோ, ஃபோர்டு (இந்தியா மற்றும் அமெரிக்கா), ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், எய்ச்சர் மோட்டார்ஸ் போன்ற முக்கிய வாடிக்கையாளர்களின் பெயர்களைப்

கம்பெனி ஸ்கேன்: மயூர் யூனிகோட்டர்ஸ்! (mayurunIq)

பார்த்தாலே, இந்த நிறுவனத்தின் தரம் தெளிவாகிறது. வெறுமனே வாடிக்கையாளர் களின் பெயரைப் பார்க்காமல் இன்னமும் சற்று ஆராய்வோம்.

ஆசியாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு சப்ளை செய்யும் இரண்டு நிறுவனங்களில் ஒன்று இந்த நிறுவனம். கொரிய நிறுவனமான எல்ஜி கெமிக்கல்ஸ் நிறுவனம் மற்றொன்றாகும். அமெரிக்க நிறுவனங்களுக்கு சப்ளை செய்வது என்பது ஒரு முக்கியமான விஷயம். ஏனென்றால், சாதாரணமாக அமெரிக்கச் சந்தையில் உள்ள நிறுவனங்களுக்குப் பொருட்கள் சப்ளை செய்யும்முன் அவர் களுடைய தேவைக்கு ஏற்றாற் போல் தங்கள் தயாரிப்புகளை மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்றுமதியில் வெற்றிகரமாகக் கால்பதித்த இந்த நிறுவனம் ஏற்றுமதி வர்த்தகத்தில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இதுதவிர, மேலே குறிப்பிட்டதைப் போன்ற பெரிய வாடிக்கை யாளர்களுக்கு பொருட்கள் சப்ளை செய்வதற்கு போட்டி அதிகம் இருக்கும். அப்படிப் போட்டி அதிகம் இருக்கும் போது இதுபோன்ற பெரிய அளவிலான கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் விலையை இறக்கியே வாங்குவதற்கு முயற்சி செய்யும்.

இந்தப் போட்டியிலும் இந்த  நிறுவனத்தின் தயாரிப்புகள் ஏனைய தயாரிப்புகளைவிட ஓரளவு பிரீமியம் விலையிலேயே விற்கப்படுகிறது என்பது இதன்  தரம் உயர்ந்தது என்பதைக் காட்டுகிறது.

இந்த வகை பிரீமியம் விலையை நிர்ணயிக்கவும்  பெரிய நிறுவனங்களுடன் வியாபாரம் செய்யவும்  உதவியாக இருப்பது இந்த நிறுவனத்தின் பெரிய அளவேயாகும். இந்த நிறுவனத்துக்கு இரண்டாவது நிலையில் இருக்கும் நிறுவனம் இந்த நிறுவனத்தின் உற்பத்தித் திறனில் பாதி அளவையே கொண்டிருக்கிறது என்பதே இதற்குச் சான்றாகும்.

மேலும் தொழில் ரீதியாகக் காலணிகள், புதிய மோட்டார் வாகனங்கள், அப்ஹோல்ஸ்ட்ரி தயாரிப்பு மற்றும் மோட்டார் வாகனங்களில் பழையதை மாற்றிப் புதியதாகச் செய்யும் தொழில் போன்ற பல்வேறு தரப்பட்ட தொழில்களுக்கும் தன் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் ஒரு டைவர்சிஃபைடு விற்பனை சந்தையை தன்வசம் கொண்டுள்ளது. 

கம்பெனி ஸ்கேன்: மயூர் யூனிகோட்டர்ஸ்! (mayurunIq)
கம்பெனி ஸ்கேன்: மயூர் யூனிகோட்டர்ஸ்! (mayurunIq)

வர்த்தகம் மற்றும் உற்பத்தித்திறன் அளவு என்ற இரண்டையும் தாண்டி நீண்ட நெடும் அனுபவத்தை தன்வசத்தே கொண்டிருப்பதும், தரம் குறித்த சரியான கட்டுப்பாடுகளை நிர்ணயம் செய்திருப்பதும், பேக்வர்ட் இன்டெக்ரேஷனை செய்து வைத்திருப்பதும், வாடிக்கையாளர்களிடம் நல்லவிதமான உறவைப் பேணி வளர்த்து வருவதும் இந்த நிறுவனத்தின்  தனிச்சிறப்பு என்று சொல்லலாம். அதிலும் தரம் குறித்த இந்த நிறுவனத்தின் கவனம் என்பது ஆரம்பக் காலம் முதலேயே மிகவும் அதிகப்படி யானதாகவே இருந்துவருகிறது.

ஆர்ட்டிபிஷியல் லெதர் தயாரிப்பில் தரக்கட்டுப்பாட்டின் அவசியத்தை வெகுவாக உணர்ந்த இந்த நிறுவனம் இதற்கான அதிக தரமுள்ள இயந்திரங்களை இத்தாலியில் இருந்து வாங்குகிறது. ஜப்பானின் தரநிர்ணயத்துக்கான  கொள்கைகளை தொடர்ந்து இடைவிடாது கடைபிடித்துக் கொண்டிருக்கிறது. ரிசர்ச் மற்றும் டெவலப்மென்ட் வசதிகளைத் தன்னகத்தே கொண்டிருப்பதால் புதிய வகைத் தயாரிப்புகளைக் கண்டுபிடிக்கும் செலவு ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது என்றே சொல்லலாம்.

மேலும், புதிய தொழிற்சாலை பெருமளவுக்கு  ஆட்டோமேட்டிக் செயல்பாடுகளைக் கொண்டுள்ளதால், தரமான ஏற்றுமதிப் பொருட்களை இங்கு உற்பத்தி செய்ய முடிகின்றது. 190 சென்டி மீட்டர் அகலமான ஆர்ட்டிஃபிஷியல் லெதர் ஷீட் கோட்டிங் லைனைக் கொண்ட நிறுவனமாக இந்த நிறுவனம் தற்சமயம் திகழ்கிறது.

உற்பத்தித் திறனை உயர்த்தவும், தரத்தை அதிகரிக்கவும், அதிக லாபம் தரும் பொருட்களை உற்பத்தி செய்யவும் இந்த நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதால், தொடர்ந்து அதிக லாபத்தை ஈட்ட முயற்சி செய்யும் என்றே சொல்லலாம்.
உலகப் பொருளாதாரச் சூழல்கள் மாறிவந்த போதிலும் கடந்த ஐந்து ஆண்டுகள் அளவீட்டில் பார்த்தால், விற்பனை சுமார் 30 சதவிகித அளவும், லாபம் சுமார் 40  சதவிகிதத்துக்கு அதிகமான அளவும் (இரண்டும் சிஏஜிஆர்) அதிகரித்து வந்துள்ளது ஒரு நல்ல விஷயமாகவே தெரிகிறது.

ரிஸ்க் ஏதும் உண்டா?

பெரும்பான்மையான விற்பனை, சுமார் 50%  காலணிகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நடைபெறுகிறது. பொருளாதாரச் சுழற்சிக்கு ஏற்றாற்போல் காலணிகள் விற்பனையும் வளரவும் தேங்கவும் செய்யும். அதனால் இந்த நிறுவனத்தின்  வியாபாரமும் தேக்கமடையலாம். இதன் தயாரிப்புகளில் 70% வரை மூலப்பொருட்களே அடங்கி யுள்ளன. மூலப்பொருட்களோ குருடாயிலிலிருந்து வரும் பொருளான பாலிவினைல் குளோரைடு, குருடாயில் விலை ஏற்ற இறக்கங்கள் லாபத்தை ஓரளவுக்குப் பாதிப்படையச் செய்யும் எனலாம். சீனாவிலிருந்து இறக்குமதியும், இந்திய அளவில் சிறுசிறு தொழிற்சாலைகளில் செய்யப்படும் செயற்கை ஷீட்டுகளும் நல்லதொரு போட்டியாகத் தொடர்ந்து நிலைத்து நிற்கலாம்.

ரிஸ்க்குகள் பல இருந்த போதிலும் நீண்ட அனுபவத்தை யும், நல்ல வாடிக்கையாளர் களையும் கொண்டுள்ள இந்த  நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து ட்ராக் செய்து ஏதாவது ஒரு அசாதாரணச் சூழ்நிலையில் சரியானதொரு விலை இறக்கம் வரும்போது, சிறிய எண்ணிக்கையில் நீண்டகால முதலீட்டுக்காக வாங்கலாம்.  பெரிய அளவில் லிக்யுடிட்டி அதிகமில்லாத ஸ்மால் கேப் கம்பெனி இது என்பதால் ரிஸ்க் கொஞ்சம் அதிகம்!

-நாணயம் ஸ்கேனர்

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்.)