Published:Updated:

இணையும் ஃப்யூச்சர் & பார்தி: களைகட்டும் ரீடெய்ல் வர்த்தகம்!

இணையும் ஃப்யூச்சர் & பார்தி: களைகட்டும் ரீடெய்ல் வர்த்தகம்!

இணையும் ஃப்யூச்சர் & பார்தி: களைகட்டும் ரீடெய்ல் வர்த்தகம்!

இணையும் ஃப்யூச்சர் & பார்தி: களைகட்டும் ரீடெய்ல் வர்த்தகம்!

Published:Updated:

ந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட் ஆன ஃப்யூச்சர் ரீடெய்லும் (Future Retail), பார்தி ரீடெய்லும் (Bharti Retail) ஒன்றாக இணைந்திருக்கின்றன. அண்மைக் காலம் வரை எலியும், பூனையுமாக இருந்த இந்த நிறுவனங்கள் இன்றைக்கு ஒன்று சேர்ந்துவிட்டன. எப்படி நிகழ்ந்தது இந்த இணைப்பு?

இணையும் ஃப்யூச்சர் & பார்தி: களைகட்டும் ரீடெய்ல் வர்த்தகம்!

ஃப்யூச்சர் ரீடெய்லும், பார்தி ரீடெய்லும் (பார்தி என்டர் பிரைசஸின் ஒரு அங்கம். இது ஏர்டெல் குழுமத்தைச் சார்ந்தது) ஒன்றாக இணைவதன் மூலம் கிட்டத்தட்ட 570 ரீடெய்ல் கடைகள் ஒரே நிர்வாகத்தின் கீழ் வந்துவிடும். இந்த 570 கடைகளும் சுமார் 18.5 மில்லியன் சதுர அடிகளில் 243 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த இரு நிறுவனங்களின் கட்டமைப்பு, முதலீடு, சொத்து பராமரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களும் ஃப்யூச்சர் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் செயல்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாடர்ன் ரீடெய்லின் பிதாமகராக வலம்வரும்  கிஷோர் பியானி, 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்தபோது, அவரது ஜாதகக் கணிப்பைப் பார்த்த குடும்பத்தினருக்கு பரம திருப்தி. காரணம், வாழ்க்கையில் வெற்றி  பல அடைந்து புகழோடு வாழ் வார் என்றிருந்தது கிஷோரின் ஜாதகத்தில்.

இணையும் ஃப்யூச்சர் & பார்தி: களைகட்டும் ரீடெய்ல் வர்த்தகம்!

இவரது ரீடெய்ல் பயணம் இவருடைய பதின்ம வயதிலேயே ஆரம்பமாயிற்று. அதன்பின்  2001-ம் ஆண்டு முதன் முதலாக `பிக் பஜார்’ என்கிற பெயரில் `நவீன பலசரக்குக் கடை’யைத் திறந்தார். கடந்த 14 ஆண்டுகளில் 10 மில்லியன் சதுர அடிகளில் 95 நகரங்களில் 300-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வருகிறது இந்தக் குழுமம். இதில் ஹைப்பர் மார்க்கெட், சூப்பர் மார்க்கெட், எலெக்ட்ரானிக் கடைகள் என அனைத்தும் அடங்கும். ஆண்டுக்கு 30 கோடி நுகர்வோர் களுக்கு (அதாவது, இந்தியாவின் மக்கள் தொகையில் 25%) இந்த கடைகள் தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

ரீடெய்ல் துறையில் பிக் பஜார் ஒரு`ட்ரெண்ட் செட்டர்’ என்றுதான் சொல்ல வேண்டும்.  2006-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின அதிரடி ஆஃபர் அளித்து சில நகரங்களில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தது இந்த நிறுவனம்தான். இந்த அதிரடி ஆஃபர் வெற்றி பெறவே,  ஆகஸ்ட் 15, மே 1 என பொது விடுமுறை நாட்களில் எல்லாம் `அதிரடி’ச் சலுகை களைத் தந்து  நுகர்வோர்களை சுண்டியிழுத்தது. 

ஏர்டெல் குழுமத்தைச் சேர்ந்த பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனம், 2007-ம் ஆண்டு ரீடெய்ல் துறையில் வால்மார்ட் டின் உதவியுடன் நுழைந்தது. வெளிநாட்டு ரீடெய்ல் நிறுவனங் கள் இந்தியாவில் தொழில் நடத்த சட்டம் அனுமதிக்காததால், `புழக்கடை வழியாக’ பார்தியுடன் கைகோத்தது. பஞ்சாபில் `பெஸ்ட் பிரைஸ் ஹோல்சேல் கேஷ் அண்ட் கேரி (Best Price Wholesale Cash & Carry)’ கடையைத் திறந்தது.

இணையும் ஃப்யூச்சர் & பார்தி: களைகட்டும் ரீடெய்ல் வர்த்தகம்!

அதன்பின் 2009-ம் ஆண்டு பார்தி குழுமம் `ஈஸீ டே’ என்கிற பெயரில் நவீன பலசரக்குக் கடை களைத் திறந்தது. இன்றைக்கு 13 மாநிலங்களில், ஏறக்குறைய 110 நகரங்களில்,   200-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வருகிறது. 2012/13-ம் ஆண்டு ஏற்பட்ட சர்ச்சையின் (ஊழல்) காரணமாக வால்மார்ட் - பார்தி ரீடெய்ல் உடனான தனது நட்பை முறித்துக் கொண்டது.

இப்போது பார்தியுடன் ஃப்யூச்சர் நிறுவனம் இணைந்து இருப்பதால், மற்ற நவீன பலசரக்குக் கடைகளான மோர், ஸ்பென்சர்ஸ், ஃபுட்வோர்ல்டு, ஸ்டார், ரிலையன்ஸ் ஆகிய வற்றுக்கு ஒரு சவாலாக இருக்கும்.

இந்த இணைப்பின் மூலம், ஏறக்குறைய 570 கடைகள்,       200-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரே குழுமத்தின் கீழ் செயல்படும். ஒரே குழுமத்தின் கீழ் அதிகக் கடைகள் இயங்க இருப்பதால், தயாரிப்பாளர்களிடம் கடினமாக பேரம் செய்து குறைந்த விலைக்கு பொருட்களை வாங்க முடியும். அதனால் அவர்கள் அடையும் பலனை நுகர்வோர்களுக்கும் அளிக்க வாய்ப்புண்டு.

ஏறக்குறைய 750 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ள ‘டீல்’ இது. பணத்தைத் தருவதற்கு பதிலாக முழுக்க முழுக்க பங்குகளை பரிமாறிக்கொள்கிற மாதிரி இந்த டீலை முடித்திருக்கிறார்கள்.  இந்த இரு நிறுவனங்களும் இணைந்ததன் மூலம் 2021-ம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 4000 புதிய கடைகள் திறக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார் கிஷோர் பியானி.

இணையும் ஃப்யூச்சர் & பார்தி: களைகட்டும் ரீடெய்ல் வர்த்தகம்!

ஃப்யூச்சர் ரீடெய்ல், பார்தி ரீடெய்ல் என்கிற இரண்டு சில்லறை வணிக குழுமங்களும் சமீபத்தில் ஒன்றிணைந்தது குறித்து ரீடெய்லர் அசோசி யேஷன் ஆஃப் இந்தியாவின் சிஇஓ. குமார் ராஜகோபாலனிடம் கேட்டோம்.

‘‘இரண்டு குழுமங்களின் சிறப்பியல்புகளும் ஒன்றிணையும் போது அதனுடைய விளைவு முன்பு இருந்ததைவிட மிகவும் சிறப்பாக இருக்கும். சில்லறை வணிகத் துறையைப் பொறுத்த மட்டில், இந்த மாதிரியான ஒருங்கிணைப்பு ஏற்படுவதன் மூலம் செயல்திறன் அதிகரிக்கும். இதனால் நுகர்வோர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க முடியும். தவிர, ஒரே குழுமத்தின் கீழ் அதிகமான கடைகள் இயங்கும் வாய்ப்பை இது உருவாக்கி இருப்பதால், பொருட்களைப் போட்டி விலைக்கு (Competitive price) வாங்குவதன் மூலம் நுகர்வோர் களுக்குக் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியும். ரீடெய்ல் துறையில் வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி இல்லாத இந்தக் காலகட்டத்தில் இந்த மாதிரியான ஒருங்கிணைப்பு இத்துறையில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்த வழிவகுக்கும்’ என்று கூறினார்.

ஃப்யூச்சர் ரீடெய்லின் அதிரடிச் சலுகை போல இதுவும் இந்திய ரீடெய்ல் துறையில் ஒரு அதிரடியான நகர்வுதான் இது. ஆனாலும் நுகர்வோர்களாகிய நமக்கு இதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பொருத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை?

இணையும் ஃப்யூச்சர் & பார்தி: களைகட்டும் ரீடெய்ல் வர்த்தகம்!

ஃப்யூச்சர் - பார்தி இணைப்பின் மூலம்  முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை என பங்குச் சந்தை நிபுணர் எஸ்.லெட்சுமணராமனிடம் கேட்டோம்.

“இந்த இணைப்பின் மூலம் இரு நிறுவனங்களுக்கும் சிலபல நன்மைகள் கிடைக்கும். என்றாலும் இந்த இணைப்பின் மூலம் பங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால் இந்த பங்கு  ரீரேட்டிங்கிற்கு உள்ளாக வேண்டியிருக்கும். இணைப்புக்குப்பின் வரும் இரண்டு காலாண்டுகளில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். இதன் இபிஎஸ் தொடர்ந்து அதிகரிக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். இதெல்லாம் நடந்தால்தான் இந்த இணைப்பு முதலீட்டாளர்களுக்கு நன்மை செய்வதாக அமையும்'' என்றார்.

விக்னேஷ் சித்தார்த்