Published:Updated:

புதுமை படைத்தால்தான் பிசினஸில் வெற்றி!

புதுமை படைத்தால்தான் பிசினஸில் வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘படைப்பாற்றலும், புதுமையும் (innovation) ஒரு நிறுவனத்துக்கு இதயமும், ஆன்மாவும் போன்றதாகும்’ – இதைச் சொன்னவர் வால்ட் டிஸ்னியின் சேர்மனும், சிஇஓவுமான பாப் ஐகர் (Bob Iger). எந்தவொரு நிறுவனத்துக்கும் இது பொருந்தும். ஒரு நிறுவனம் மேன்மேலும் வளர்ச்சி அடைவதற்கும், லாபகரமாகச் செயல்படுவதற்கும் பல காரணிகள் இருக்கலாம். அதில் புதுமை என்பது முக்கியமான ஒன்றாகும். இன்றைக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றியும், அவருடைய ஆப்பிள் நிறுவனம் பற்றியும் உலகளவில் பேசப்படுவதற்குப் புதுமையைத் தவிர வேறென்ன காரணமாக இருக்க முடியும்?

புதுமை படைத்தால்தான் பிசினஸில் வெற்றி!

இந்தியாவில் உள்ள நுகர்வோர் பொருட்கள் (FMCG) தயாரிக்கும் நிறுவனங்கள் எத்தனையோ பொருட்களை விற்று வந்தாலும் சந்தையில் உள்ள தேக்கநிலையைப் போக்க வும், ஒரே பிராண்டை வாங்கி அலுத்துப்போயிருக்கும் நுகர்வோர்களைச் சுண்டி இழுக் கும் வகையிலும் அவ்வப்போது 'நியூ’,  "இம்ப்ரூவ்டு’ என்கிற சொற்களைச் சேர்த்து பழைய பிராண்டின் நீட்டிப்பாக" (extension)’சில பொருட்களை சந்தையில் அறிமுகம்  செய்து வருகின்றன.

ஆனால், பிராண்டின் பெயரில் மட்டும் மாற்றம் செய்தால் புதுமையாகிவிடுமா? இல்லை. எனவே, இந்த நிறுவனங் கள் `கன்ஸ்யூமர் கனெக்ட்’ என்கிற புரோகிராம் மூலமும், சமூக ஊடகங்களின் மூலமும் பல்வேறு பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறவர்களின் நிறைவடையாத தேவையை அறிந்து அதற்கேற்றாற்போலப் பல பொருட்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதுபற்றி சமீபத்தில் நீல்சன் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்த சில சுவாரஸ்யமான தகவல் களைப் பார்ப்போம்.

இந்த ஆய்வில் 80 எஃப்எம்சிஜி பொருட்கள் (பேஸ்ட், பிஸ்கெட், ஷாம்பூ போன்றவை) எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பொருட்களில் 2012-ம் ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிராண்டுகளின் விற்பனையைச் சுமார் 18 மாத காலம் தொடர்ந்து கண்காணித்து, அதில் வெற்றி பெற்ற டாப் 23 பிராண்டுகள் வரிசைப்படுத்தப்பட்டு இருக் கின்றன. இந்த ஆய்வில் வெற்றி பெற்ற பிராண்டுகளை மூன்று தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

அ) அறிமுகமான முதல் ஆண்டு அந்த பிராண்ட் சுமார் ரூ.10.5 கோடி விற்பனையை எட்டியிருக்க வேண்டும்.

ஆ) 13 – 18 மாதங்களில் இந்த பிராண்ட் பொருட்கள் முதலாண்டு விற்பனையைவிட 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக, அதாவது,  சராசரியாக ரூ.17.7 கோடியாக இருக்க வேண்டும்.

3. இந்தப் புதிய பிராண்டுகள் தனித்துவம் கொண்டவையாக இருக்க வேண்டும். இந்தப் பகுத்தாய்வில் ஈடுபட்ட இன்னோவேஷன் நிபுணர்கள்  முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட, அதாவது, `re-packaging,re-formulations and re-positioning’ செய்யப்பட்ட பிராண்டுகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

புதுமை படைத்தால்தான் பிசினஸில் வெற்றி!

2012-ம் ஆண்டு 16,914 பிராண்டுகள் புதிதாகச் சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்டன. 2013-ம் ஆண்டு இதன் எண்ணிக்கை 14,217 ஆகவும், 2014-ம் ஆண்டு 10,528 ஆகவும் இருந்தன. இந்த எண்ணிக்கை அந்தந்த ஆண்டு சந்தை இருந்த போக்கையும், பொருளாதாரத் தையும் பொறுத்து மாறும். 2012-ம் ஆண்டு அறிமுகமான சுமார் 17,000 பிராண்டுகளில் மேற்குறிப் பிட்ட மூன்று தகுதிகளையும் பெற்றவை 23 பிராண்டுகள் மட்டுமே. இவற்றில்  ஜஸ்ட் ஜெல்லி, க்ளீன் & க்ளீயர் மார்னிங் எனர்ஜி (ஸ்கின் க்ரீம்), சூப்பரிய சில்க் (Superia Silk - குளியல் சோப்), குர்குர்ரே பாஃப்கார்ன், ஆல் அவுட் அல்ட்ரா, செரிலாக் ஷிஷூ ஆகார் (குழந்தை உணவு), லைஃபாய் க்ளீனி கேர் (குளியல் சோப்),  பெனட்ரில் கன் ஜெஷன் சிரப் (இருமல் மருந்து) போன்ற சில பிராண்டுகள் அடங்கும்.

சந்தையில் வெற்றி பெறத் தேவையான மூன்று முக்கிய அம்சங்கள் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ள விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

1. பொருளாதாரம் நெருக்கடி யில் இருக்கும்போது நுகர்வோர் கள் பொதுவாக தங்கள் செலவைக் குறைத்துக்கொள்ள நினைப்பார்கள். அந்தமாதிரி யான நேரங்களில் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், நுகர்வோர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்றாற் போலப் பொருட்களைச் சந்தையில் அறிமுகம் செய்ய வேண்டும். (உதாரணமாக, தண்ணீர் தட்டுப்பாடான நேரத்தில் குறைவான அளவு தண்ணீரைக்கொண்டு துணி துவைக்கக்கூடிய வாஷிங் சோப் அல்லது வாஷிங் பவுடர்)

2. நுகர்வோர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொண்டாலே புதுமை படைக் கும் வேலை பாதி முடிந்துவிடும். அதன்பின், அதற்கான விலை, பேக்கேஜிங், விநியோகம் போன்றவை முக்கியமான காரணிகளாக இருக்கும்.

3. நுகர்வோர்களின் நிறைவேறாத தேவைகளை நிறைவேற்றி, அவற்றுக்குச் சரியான விலை வைத்தாலும், பொருட்கள் கடைகளில் கிடைக்கவில்லையெனில் அதுவரை எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீண்தான்.

ஆக, மேற்குறிப்பிட்ட Unmet Demand, Market Ready Proposition and Seamless Execution மூன்றும் ஒரு புதிய பொருள் சந்தையில் வெற்றி பெற அவசியமான காரணிகள் ஆகும்.

வெற்றி பெற்ற 23 பிராண்டு களின் உற்பத்தியாளர்களும் முதல் ஆறு மாதத்தில் தங்களது பொருட்கள் ‘சரியான’ கடை களில் (right kind of outlets/shops) கிடைக்கும்படி விநியோகத்தைப் பலப்படுத்தினர். முதல் ஆறு மாதங்களில் சுமார் 1,15,000 கடைகளிலும், அதன்பின்  2,00,000 கடைகளிலுமாக அதிகரித்தனர்.

புதுமை படைத்தால்தான் பிசினஸில் வெற்றி!

இந்தப் புதுமையான பிராண்டு கள் அறிமுகமான ஆறு மாதங்களிலேயே 1 சதவிகித மார்க்கெட் ஷேரை எட்டியது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

பொதுவாக, வளர்ச்சி அதிகமாக இருந்தால், புதிய பிராண்ட் எளிதாகத் தனது வளர்ச்சியை அடைந்துவிடும் என்றுதான் நாம் நினைப்போம். அது தவறு. 'சரியான’ கடைகளை இந்தப் புதிய பிராண்டுகள் சென்றடைய வேண்டும்.

அதுபோல, சரியான கலவை யில் பொருட்களை வழங்க வேண்டும். அதாவது, ஒன்றுக்கும் மேற்பட்ட பேக் சைஸ்களும், அதற்கேற்ற விலையுடனும் கிடைக்க வேண்டும்.

இன்னொரு ஆச்சர்யம், புதிதாக அறிமுகமான இந்த 23 பொருட்களில் 15 பொருட்களைப் பிரபலப்படுத்த முதல் ஆறு மாதங்களில் எந்தவிதமான `புரமோஷன்’ வேலையும் செய்யவில்லை என்பதே.

எனவே, நுகர்வோர்களைப் `படி’த்து அவர்களின் தேவைக் கேற்ப புதுமையான பொருட் களை உற்பத்தி செய்து, எங்கும் கிடைக்கும்படி செய்தாலே வெற்றி உங்கள் வாசல் கதவைத் தட்டும்!

சித்தார்த்தன் சுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு