Election bannerElection banner
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்

கமாடிட்டி டிரேடிங்

அக்ரி கமாடிட்டி!

கமாடிட்டி டிரேடிங்

இந்த வாரம் ஜீரகம் மற்றும் மிளகாய் விலைப்போக்குக் குறித்துச் சொல்கிறார் கமாடிட்டி நிபுணரும், அலைஸ் ப்ளூ நிறுவனத்தின் தலைவருமான கே.ராஜேஷ்.

கமாடிட்டி டிரேடிங்
கமாடிட்டி டிரேடிங்

ஜீரகம் (Jeera)

‘‘கடந்த வாரம் என்சிடிஇ எக்ஸில் ஜூலை மாத கான்ட்ராக்ட் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தேவைகள் அதிகமாக இருப்பதாலும், வரும் காலங்களில் விளைச்சல் உற்பத்தி குறைவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பாலும் விலை அதிகரித்து வர்த்தகமானது.

மேலும், ரூ.15,800 என்ற வலுவான சப்போர்ட் லெவலுக்கு மேலே வர்த்தகமாவதாலும், ரூ.16,500 என்ற ரெசிஸ்டன்ஸ் லெவலுக்கு மேலே சென்றால் விலை மேலும் அதிகரித்து வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.’’

கமாடிட்டி டிரேடிங்

மிளகாய் (Chilli)

ஜூலை மாத கான்ட்ராக்ட் சென்ற வாரம் ஏற்ற இறக்கத்துடன் 150 புள்ளி இடைவெளியில் வர்த்தகமானது. வரும் வாரங்களில் பருவமழையின் அளவைப் பொறுத்தும், உற்பத்தி மற்றும் தேவை களின் அளவைப் பொறுத்தும் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
மேலும், ரூ.8,800 என்பது இடைக்கால சப்போர்ட்டாகவும், ரூ.9,200 என்ற வலுவான ரெசிஸ்டன்ஸை உடைக்கும்பட்சத் தில், ரூ.9,800 என்ற அளவுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கமாடிட்டி டிரேடிங்

மஞ்சள் (Turmeric)

கடந்த வாரம் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமானது. முக்கிய வர்த்தகச் சந்தைகளில் மஞ்சளுக்கான தேவை குறைந்து காணப்பட்டதே இதற்கு மிக முக்கியக் காரணமாகும். தவிர,  வட இந்தியாவிலிருந்து ஆர்டர்கள் வந்திருக்க வேண்டிய நிலையில், இன்னும் வராததால், விலை இறங்கக் காரணமாக அமைந்திருக்கிறது.

மேலும், மஞ்சள் விளையும் ஏரியாக்களில் நல்ல மழை பெய்திருப்பதால், நடப்புப் பருவத் தில் மஞ்சள் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதனாலும் கடந்த வாரம் விலை குறைந்து வர்த்தகமானது.

வரும் மாதங்களில் மஞ்சளுக்கான தேவை அதிகரிக்கும் என்பதாலும், தரமான மஞ்சள் வரத்து இருக்கும் என்பதாலும் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2014-15 நிலவரப்படி, ஆந்திராவில் மஞ்சள் விளைச்சல் 13,000 ஹெக்டேராகவும், தெலங்கானா மாநிலத்தில் 44,600 ஹெக்டேராகவும் காணப்படுகிறது.

இதே ஆண்டில் ஏற்றுமதியாகி இருக்கும் மஞ்சள் அளவு 86,000 டன் என இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு 744.35 கோடி ரூபாய். இது இதற்கு முந்தைய ஆண்டில் 77,500 டன்னாக இருந்தது. இதன் மதிப்பு 666.75 கோடி ரூபாய்.

தரமான மஞ்சள் வரத்து மற்றும் தேவை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பால் வரும் வாரங்களில் மஞ்சள் விலை உயர வாய்ப்புள்ளது.

கமாடிட்டி டிரேடிங்

ஏலக்காய் (Cardamom)

உற்பத்தி மற்றும் வரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் சென்ற வாரம் ஏலக்காய் விலை சரிந்து வர்த்தகமானது. குறிப்பாக, முக்கியச் சந்தைகளில் ஏலக்காய் வரத்து சற்று அதிகமாகவே காணப் பட்டது. தவிர, சென்ற வாரத்தில் ஏலக்காய் மீதான தேவை குறைந்து காணப்பட்டது. இதற்குக் காரணம், ஏற்றுமதிக்கு ஏற்ற தரமான ஏலக்காய்கள் வர்த்தகத்துக்கு வராததுதான்.

இருப்பினும் நடப்புப் பருவத்தில் கெளதமாலாவில் ஏலக்காய் உற்பத்தி குறையும் என்று கணக்கிடப் பட்டுள்ளதால், விலை மேலும் குறையாமல் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் கெளதமாலாவின் ஏலக்காய் தரம் தாழ்ந்து காணப்படுவதாலும் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

2014-15-ம் நிலவரப்படி, கெளதமாலாவின் மொத்த உற்பத்தி குறைந்து 29,000-30,000 டன்னாகக் காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 80,000 டன்னாகக் காணப்பட்டது. கெளதமாலாவிலிருந்து ஏப்ரல் 2015-ம் ஆண்டில் 4,500 டன் ஏலக்காய் ஏற்றுமதி ஆகியிருக்கிறது.

இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விடக் குறைவாகும். இந்த விவரத்தை இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது.

கமாடிட்டி டிரேடிங்

சோயாபீன் (Soybean)

மழைப்பொழிவின் காரணமாக காரீஃப் பருவ பருப்பு வகைகளின் விளைச்சல் சிறப்பாகக் காணப்படுவதால், சோயாபீன் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த வாரத்தில் சோயாபீன் விலை குறைந்து வர்த்தகமானது. மேலும்,  சோயா மீல் ஏற்றுமதி தேவை குறைந்து காணப்படுவதாலும் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

2014-15-ம் ஆண்டு நிலவரப்படி, ஏற்றுமதி தேவை 44% குறைந்துள் ளதாக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. மூன்றாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, இந்தியாவின் சோயாபீன் உற்பத்தி 116.41 லட்சம் டன் னிலிருந்து 107 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.

கமாடிட்டி டிரேடிங்

சோயாமீல் ஏற்றுமதி தேவை குறைவு, உற்பத்தி அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் வரும் வாரத்திலும் சோயாபீன் விலை குறைந்து வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி டிரேடிங்

சென்னா (Chana)

வரத்து அதிகரிப்பு மற்றும் தேவை குறைவு காரணமாகச் சென்ற வாரம் சென்னா விலை குறைந்து வர்த்தகமானது.

மூன்றாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2014-15-ம் ஆண்டின் சென்னா உற்பத்தி 7.59 மில்லியன் டன்னாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய இரண்டாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டில் 8.28 மில்லியன் டன்னாக இருந்தது.
கடந்த 2014-ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் 2015-ம் ஆண்டின் பிப்ரவரி மாதம் வரை 3.90 லட்சம் டன் சென்னா ஏற்றுமதியாகி ஆகியிருப்பதா கவும், கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடப்பு மாதம் வரை ஒரு லட்சம் டன் சென்னா இறக்குமதி செய்திருப்பதாகவும் இந்திய நாட்டின் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2013-14-ம் ஆண்டின் மொத்த சென்னா இறக்குமதி அளவு 2.76 லட்சம் டன். சென்னா விளைச்சல் அதிகமாக இருப்ப தால், வரும் வாரங்களில் சந்தைக்கு வரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலையும் குறைந்த வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

செ.கார்த்திகேயன்

மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்
கமாடிட்டி டிரேடிங்

இந்த வாரம் கச்சா எண்ணெய்யின்  விலைப்போக்குக் குறித்து கூறுகிறார் ஜியோஃபின் கமாடிட்டி நிறுவனத்தின் தலைவர் ஹரீஷ்.

கச்சா எண்ணெய்!

“சர்வதேச சந்தைகளில் டபிள்யூ.டி.ஐ மற்றும் பிரன்ட் கச்சா எண்ணெய்யின் விலை முறையே 1.2 சதவிகிதமும், 1.5 சதவிகிதமும் இறக்கம் கண்டது. இந்திய சந்தைகளில் கச்சா எண்ணெய் தோராயமாக 2%  இறக்கம் கண்டு வர்த்தகமாகியது. இதற்குக் காரணம், அமெரிக்க பொருளாதார டேட்டாக்களும், கிரீஸ் கடன் பிரச்னையுமே. அமெரிக்காவின் அதிக கையிருப்பு மற்றும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை அதிகரிக்க உள்ளன என்ற செய்திகள் முதலீட்டாளர்களின் ஆர்வத்தைக் குறைத்தது. 

அடுத்த வாரத்தில் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தை களில் பேரல் ஒன்றுக்கு 62 டாலர் என்கிற வலுவான ரெசிஸ்டன்ஸைத் தாண்டி வர்த்தகமானால் வாங்குவ தற்கான அறிகுறியாகக் கருதலாம். மாறாக, 62 டாலரை தாண்ட முடியாவிட்டால் விற்பனைக் கான அழுத்தம் அதிகரிக்கலாம்.”

தங்கம்!

தங்கத்தின் விலை கடந்த வாரம் இறக்கம் கண்டது.  சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,200 டாலருக்கு வர்த்தகமாகத் தொடங்கி, வெள்ளிக்கிழமை அன்று 1,174 டாலருக்கு வர்த்தக மானது. இது தோராயமாக 2 சதவிகித இறக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையின் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. ஜூன் 30-ம் தேதிக்குள் சர்வதேச நிதியத்துக்கு (IMF) தரவேண்டிய கடன் தொகையான 1.6 பில்லியன் யூரோவை (1.8 பில்லியன் டாலர்) கிரீஸ் தரவேண்டும். இல்லை என்றால், கிரீஸ் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததாக (Defaulter) அறிவிக்கப்படும். இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த வாரத்தில் 0.2%  இறக்கம் கண்டது. தவிர, அமெரிக்காவின் நான்காவது காலாண்டின் (மார்ச் மாதம்) ஜிடிபி 0.2%  குறைந்ததும் முக்கியமான விஷயம். 

அடுத்த வாரம் கிரீஸ்  பிரச்னை தான் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கக்கூடிய சர்வதேச காரணியாக இருக்கும். எனவே, கிரீஸ் பிரச்னையைக் கவனிப்பது அவசியம்.

கமாடிட்டி டிரேடிங்

வெள்ளி!

ஒரு அவுன்ஸ் வெள்ளி கடந்த வாரம் சர்வதேச சந்தையில் 16.12 டாலருக்கு வர்த்தகமாகத் தொடங்கி, வெள்ளியன்று 15.83 டாலருக்கு வர்த்தகமானது.  இந்தியச் சந்தைகளில் திங்களன்று கிலோ ஒன்றுக்கு ரூ.37,005-க்கு   வர்த்தகமாகத் தொடங்கி, வெள்ளியன்று ரூ.36,106-க்கு  வர்த்தகமானது.

கிரீஸ் பிரச்னை குறிப்பிட்ட தேதிக்குள் முடிவுக்கு வராமல் போனால், தங்கத்தின் விலை அதிகரிக்கும்போது வெள்ளியின் விலையும் அதிகரிக்கவே செய்யும்.

காப்பர்!

கடந்த வாரம் காப்பர் சர்வதேச சந்தைகளில் 0.7%  இறக்கம் கண்டது. சீனாவின் நிகர இறக்குமதி கடந்த 18 மாதங் களில் இல்லாத அளவுக்கு 2,52,000 டன்னாக  இறக்கம் கண்டது. சர்வதேசக் காரணிகள் மற்றும் சீனாவின் உள்நாட்டு காப்பர் சுத்திகரிப்பு அளவு அதிகரிப்பு போன்றவை காப்பர் விலை இறக்கத்துக்குக் காரணங்களாக அமைந்தது.

இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால், இந்திய சந்தைகளில் காப்பர் கடந்த வாரம் 0.4% இறக்கம் கண்டு, ஒரு கிலோ காப்பர் 368.8 ரூபாய்க்கு வர்த்தகமானது.

சீனாவின் காப்பர் இறக்குமதி குறைவு மற்றும் கிரீஸ் பிரச்னை யால்,  சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றம் காரணமாக, அடுத்த வாரத்திலும் காப்பர்  இறக்கத்தில் வர்த்தகமாகலாம்.

மு.சா.கெளதமன்

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு