Published:Updated:

கன்னியாகுமரி ஸ்பாட் ரேட் நிலவரம்!

ரியல் எஸ்டேட் ரியல் அப்டேட்

டவுளின் தேசம் என வர்ணிக்கப் படும் கேரளாவுக்கு நெருக்க மாக இருக்கும் மாவட்டம், கன்னியாகுமரி. தமிழகம் முழுவதுமே ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் சரிவைச் சந்தித்து நிற்கும் சூழலில் குமரி மாவட்டத்திலும் நிலைமை படு டல்லாகவே இருக்கிறது.

இந்த மாவட்ட ரியல் எஸ்டேட் நிலவரம் பற்றி தாமஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் விவேக் தாமஸுடன் பேசினோம்.

கன்னியாகுமரி ஸ்பாட் ரேட் நிலவரம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘ரியல் எஸ்டேட் தொழிலில் தமிழகத்தின் பிற மாவட்டங்களுடன் குமரி மாவட்டத்தை ஒப்பிட முடியாது. இங்கே கட்டடம் மற்றும் பிளாட்டுகளில் அதிகமாக யாரும் முதலீடு செய்வதில்லை. தற்போது பொருளாதாரத் தேக்கநிலை ஏற்பட்டு இருப்பதால், இந்த மாவட்டத்தில் பிசினஸ் நிறையவே டல் அடித்துக் கிடக்கிறது.

இந்த மாவட்ட மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்துவரும் சூழலில், தண்ணீர் கிடைப்பதில் தற்போது சிக்கல்கள் இருக் கின்றன. கேரளாவில் இருந்து தண்ணீர் வருவதில்லை; மழையும் குறைவாக இருப்பதால் விவசாயம் செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. அதனால் விளைநிலங்களை மனை களாக்கிக் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். மக்களிடம் போதுமான பணம் இல்லாததால் அதுவும் இப்போது படுத்துவிட்டது.

தவிர, சில இடங்களில் மார்க்கெட் விலையைவிடவும் கூடுதலாக கைடுலைன் வேல்யூ இருப்பதால், பத்திரச்செலவு  அதிகமாகவே இருக் கிறது. அதனால், மனைகளை வாங்கவே மக்கள் பயப்படுகிறார்கள். மார்த்தாண்டம், தக்கலை போன்ற சிறிய நகரங்கள் தற்போது நன்கு வளர்ச்சியடைந்து விட்டன. அங்கேயே தேவையான அளவுக்கு மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் வந்துவிட்டன. ஆனால், ரியல் எஸ்டேட் மட்டும்  மந்தமாகவே இருக்கிறது.

கன்னியாகுமரி ஸ்பாட் ரேட் நிலவரம்!

குமரி மாவட்டத்தின் இன்னொரு முக்கியமான பிரச்னை, இங்குள்ள பல இடங்கள் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருகின்றன. இந்தச் சட்டத்தின் படி, பட்டா நிலத்தைக்கூட விற்பனை செய்ய முடியாது. அத்துடன், புதிதாகக் கட்டடம் கட்டுவதற்கும் அனுமதி கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. சுற்றுச்சூழல் துறை, வனத்துறை உள்ளிட்ட பல துறையினரிடம் சென்று அலைந்து அனுமதி வாங்கி வருவதற்குள் போதும்போதும் என்றாகிவிடுவதால், புதிய கட்டடங்களைக் கட்ட யாரும் முன்வருவதில்லை’’ என ஆதங்கப்பட்டார்.

குமரி மாவட்டத்தில் உள்ள தடிக்காரன்கோணம், திருவட் டாறு, அழகிய பாண்டியபுரம், புத்தேரி உள்ளிட்ட பகுதிகள் பெருமளவுக்கு தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப் பட்டு இருக்கிறது. இந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் சொந்த தேவைக்குக்கூட வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளனர்.

கன்னியாகுமரி ஸ்பாட் ரேட் நிலவரம்!

ரியல் எஸ்டேட் கட்டுமான துறையில் 30 ஆண்டு அனுபவம் கொண்ட சிரில் கிறிஸ்துராஜ், ‘‘பத்திரப்பதிவு உள்ளிட்ட பல பிரச்னைகள் காரணமாக இந்த மாவட்டத்தில் கட்டுமான தொழில் நிறையவே நலிந்து கிடக் கிறது. குறிப்பாக, கடந்த மூன்று வருடமாகத் தொழில் நடப்பதே சிரமமாக உள்ளது. ஆசாரிப் பள்ளம், இந்திரா காலனி உள்ளிட்ட முக்கியமான இடங் களில் கட்டப்பட்ட வீடுகள்கூட கடந்த 2 வருடமாக விற்காமல் கிடக்கின்றன.

ஒரு சிலர் கட்டிய வீடுகளை நிர்ணயித்த விலையைவிடவும் குறைவான தொகைக்கு விற்பனை செய்து நஷ்டத்தைச் சமாளிக்க முயற்சி செய்கிறார்கள். அப்படியும் விற்கவில்லை.  வங்கி கள் கடனுதவி கொடுக்க முன்வந்த போதிலும், வீடுகளை வாங்குவதில் நிறைய சிரமம் இருக்கு. புதிதாக வீடுகள் கட்ட  எளிதாக லோன் கிடைத்தாலும் அப்ரூவல் கிடைப்பதில் நிறைய சிரமம் இருக்கு.

இந்த மாவட்ட மக்களைப் பொறுத்தவரையிலும் சுற்றிலும் மரம் செடி கொடிகளுடன் தனியாக வீடுகள் கட்டுவதையே விரும்புறாங்க. கடந்த ஓரிரு வருடத்தில் மட்டும் 10 சதவிகிதத் துக்கும் அதிகமான விளை நிலங்கள் வீட்டு மனைகளாகி விட்டன. அரசு உரிய நடவடிக்கை எடுத்து பத்திரப் பதிவுத் தொகையைக் குறைக்க வேண்டும். அத்துடன், சம்பந்தமே இல்லாமல் உயர்ந்து போயிருக்கும் கைடுலைன் வேல்யூவை சரிபார்த்து அதில் உள்ள குறை களைக் களைய வேண்டும்’’ என்றார்.

கன்னியாகுமரி ஸ்பாட் ரேட் நிலவரம்!

குமரி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கட்டப்பட்ட வீடுகள் விற்கப்படாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. இதுபற்றி ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் ஆர்.ஜே.ஏ. அலெக்ஸிடம் பேசினோம்.

‘‘கடந்த சில வருடங்களாக கட்டுமான பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து வருவ தால், மக்கள் வீடு கட்டுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. தேவை இருப்பவர்கள்கூட சிறியதாக ஓரிரு அறைகளைக் கொண்ட வீடுகளைக் கட்டி அட்ஜஸ்ட் செய்துக்கிறாங்க. அதனால்தான் சில வருடங்களாக ரியல் எஸ்டேட் சரிவரச் செயல்ப டவில்லை.   பார்வதிபுரம் பகுதி யில் நாங்கள் கட்டிமுடித்த 100 வீடுகள் விற்பனையாகாமல் கிடக்கின்றன. சுசீந்திரம் பகுதியில் 20 வீடுகள்கூட விற்க வில்லை. கட்டிய விலைக்கே விற்பனை செய்ய முன்வந்த போதிலும் வாங்க யாரும் முன்வரவில்லை.

இன்னும் சிலர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யா மல் இருப்பதற்கு வருமான வரித்துறையின் நெருக்குதலும் காரணம். ரூ.50 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்தால் உடனடியாக அவரைத் தேடி வருமானவரித் துறை அதிகாரிகள் சென்று கேள்விகளைக் கேட்டு துளைத்து எடுப்பதால், ஒருசிலர் இந்தத் தொழிலில் முதலீடு செய்யத் தயங்குறாங்க. கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும் இந்தத் தொழில் நசிவுக்கு முக்கியக் காரணம்’’ என்றார்.

கன்னியாகுமரி ஸ்பாட் ரேட் நிலவரம்!

குமரி மாவட்ட பில்டர்ஸ் அசோசியேஷன் துணைத் தலைவரான கோவிந்தனிடம் பேசினோம். ‘‘சொந்த தேவைக் காக வீடு கட்ட நினைப்பவர் களுக்கு அனுமதி கிடைப்பதை எளிமைப்படுத்த வேண்டும். இதன் மூலமாக மட்டுமே இந்த மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையை மீண்டும் புதுப்பொலிவு பெற வைக்க முடியும். அரசு இதில் உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம்’’ என்றார் உறுதியாக.

கூடிய விரைவில் குமரி மாவட்ட ரியல் எஸ்டேட் துறை மறுமலர்ச்சி பெறும் என நம்புவோமாக!

 ஆண்டனிராஜ்

படங்கள்: ரா.ராம்குமார்.

அபார்ட்மென்ட்டுகளுக்கு ஆதரவு இல்லை..!

கன்னியாகுமரி ஸ்பாட் ரேட் நிலவரம்!

குமரி மாவட்ட மக்கள், தனி வீடுகளையே பெரிதும் விரும்புவதால் இங்கு அபார்ட்மென்ட்டுகள் அதிகம் வரவில்லை. கட்டப்பட்ட ஓரிரு அபார்ட்மென்ட்டுகளும் சரிவர விற்பனையாகவில்லை. 1,500 சதுர அடி கொண்ட அபார்ட்மென்ட்டுக்கு ரூ.20 லட்சம் எனக் குறைவான விலை நிர்ணயிக்கப்பட்ட போதிலும், விற்பனை ஆவதற்குள் கட்டுமான நிறுவனங்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதனால், தற்போது அபார்ட்மென்ட்டுகளைக் கட்ட யாரும் ஆர்வம் காட்டவில்லை.