இந்த வாரம் மெட்டல் மற்றும் ஆயில் கமாடிட்டியின் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்பது

குறித்து விளக்கமாகக் கூறுகிறார் ஆனந்த் ரதி நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா பிரிவின் கமாடிட்டி மேலாளர் கார்த்திகேயன் ராமநாதன்.

தங்கம்!

“சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் மந்தநிலையில் உள்ளது. உலக அளவில் தங்கத்துக்கான தேவை குறைந்துள்ளது. கடந்த வாரம் முதல் இரண்டு வர்த்தக நாட்களில் தங்கத்தின் விலை 400 ரூபாய் வரை குறைந்தது. அடுத்தடுத்த நாட்களில் சந்தை ஏற்றம் பெறும்போது 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 24,800 வரை ஏற்றம் கண்டது.

மேலும், அமெரிக்க வேலைவாய்ப்பு விவரங்களைப் பொறுத்து, அமெரிக்க வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம். வட்டி விகித உயர்வு ஏற்பட்டால் தங்கத்தின் விலை இன்னும் குறையவே செய்யும். மேலும், எஸ்டிபிஆர் கோல்டு ஃபண்டில் இருந்து முதலீடுகள் வெளியேறுகின்றன.

அடுத்த வாரத்தில் தங்கத்தின் விலை இன்னும் ரூ. 200-300 வரை இறங்க வாய்ப்புள்ளது. எம்சிஎக்ஸ் கோல்டு சப்போர்ட் ரூ.24,500 அளவில் இருக்கிறது. இந்த விலையை அடைந்தால் சிறிது ஏற்றம் வரலாம். வரும் வாரத்தில் 24,500- 25,000 அளவில் வர்த்தகமாகும். ரெசிஸ்டன்ஸ் அளவு 25000-25270 அளவில் உள்ளது.

வெள்ளி!

வெள்ளியின் விலையானது கடந்த வியாழன் அன்று ஒரு சதவிகிதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் வெள்ளி 14.67 டாலருக்கு வர்த்தகமானது. வெள்ளி விலையானது கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு குறைந்து வர்த்தகமாகிறது. மேலும், ஆர்எஸ்ஐ சார்ட்டின்படி, வெள்ளி அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் வெள்ளியின் விலைக்கான சப்போர்ட் ரூ. 33,400 ஆகும். விலை 33,300 ரூபாய்க்கு கீழ் போனால் ரூ. 32,200 வரை இறக்கம் தொடரலாம். வரும் வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.500 வரை குறைய வாய்ப்புள்ளது. வரும் வாரத்தில் வெள்ளியின் விலை ரூ. 33,100-34,200அளவில் வர்த்தகமாகலாம்.

கச்சா எண்ணெய்!

பல மாதங்களாக இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. அதிக வரத்துக் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை யானது கடந்த வாரம் முழுவதும் குறைந்த ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமானது. வாரத்தின் முதல் வர்த்தக நாட்களில் கச்சா எண்ணெய் யின் விலை ரூ.150 வரை குறைந்தது.

ரூ. 3,200 என்ற ரெசிஸ்டன்ஸ் லெவலை உடைக்காமல் விலை கீழே சரிய ஆரம்பித்துள்ளது. குறுகிய காலத்தில் ரூ. 2850 என்ற சப்போர்ட் நிலை வரை இறக்கம் வரலாம். எனவே, வரும் வாரத்தில் கச்சா எண்ணெய்யின் விலை ரூ. 2,700-3,000 என்ற அளவில் வர்த்தகமா கலாம்.

காப்பர்!

காப்பரின் விலையானது கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து குறைந்த நிலையில் வர்த்தகமானது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று காப்பரின் இறக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. அதாவது, காப்பரின் விலை ரூ.327.30 என்ற நிலைக்குச் சரிந்தது. மேலும், சீனாவில் நிலவும் பொருளாதார மந்தநிலையினால் காப்பரின் விலையில் 17 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. சீனா பிஎம்ஐ உற்பத்தி விவரம் இரண்டு ஆண்டு களில் இல்லாத அளவுக்கு குறைந்து 47.8 என்ற நிலையில் இருந்தது. காப்பர் பயன்படுத்துவதில் சீனா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆர்எஸ்ஐ சார்ட்டின்படி, காப்பரின் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்புள்ளது. குறுகிய கால சப்போர்ட் ரூ. 320 ஆகும். வரும் வாரத்தில் ரூ. 310-330 என்ற அளவில் வர்த்தகமாகும்.”

இரா.ரூபாவதி

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!