Published:Updated:

ஃபண்டமென்டல் பயிற்சி வகுப்பில் பாராட்டிய முதலீட்டாளர்கள்!

ஃபண்டமென்டல் பயிற்சி வகுப்பில் பாராட்டிய முதலீட்டாளர்கள்!

ங்குச்  சந்தை   ஃபண்டமென்டல் அனாலிசிஸ் குறித்த கட்டணப் பயிற்சி வகுப்பினை கடந்த 1, 2 ஆகிய தேதியில் சென்னையில் நடத்தியது நாணயம் விகடன். இந்தப் பயிற்சி வகுப்பில் 75-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய விழிப்பு உணர்வுக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது நாணயம் விகடன். ‘புதிய முதலீட்டாளர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் அதே நேரத்தில், எங்களுக்கு பங்குச் சந்தையின் ஃபண்டமென்டல்கள் பற்றியும் டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றியும் பயிற்சி வகுப்பு நடத்துங் கள்’ எனப் பல வாசகர்கள் கேட்ட தால், முதலாவது பயிற்சிக் கட்டண வகுப்பு  கோவையிலும் இரண்டா வது கட்டண வகுப்பு சென்னை யிலும் நடத்தப்பட்டிருக்கிறது.

ஃபண்டமென்டல் பயிற்சி வகுப்பில் பாராட்டிய முதலீட்டாளர்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தக் கூட்டத்தில் பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீட்டுக்கு உதவும் வகையில் கவனிக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார் பங்குச் சந்தை நிபுணரும் பயிற்சியாளருமான டாக்டர். எஸ்.கார்த்திகேயன்.

பங்கு முதலீட்டில் ரிஸ்க் என்றால் என்ன என்பது தொடங்கி, போர்ட்ஃபோலியோ அமைக்கும் போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் வரை விரிவாக எடுத்துச் சொன்னார் அவர். ஒரு நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டினை எப்படி ஆராய வேண்டும் என்பது பற்றியும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.  ஒவ்வொரு அமர்வின்போதும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்லி, சந்தேகத்தைப் போக்கி னார் அவர்.

ஃபண்டமென்டல் பயிற்சி வகுப்பில் பாராட்டிய முதலீட்டாளர்கள்!

இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் முடிந்தவுடன், இந்தப் பயிற்சி வகுப்பின் மூலம் முதலீட்டில் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் குறித்து தெளிவு ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார்கள் முதலீட்டாளர்கள். ‘‘குறைந்த கட்டணத்தில் எங்களுக்கு இத்தனை தெளிவைத் தந்த நாணயம் விகடனுக்கு நன்றி’’ என்று அவர்கள் பாராட்டினார்கள்.

பங்குச் சந்தை குறித்து இன்னும் ஆழமான அறிவைப் பெற இதுபோன்ற கட்டணப் பயிற்சி வகுப்புகளை தமிழகம் முழுக்க நாணயம் விகடன் நடத்தப் போகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் நீங்கள் கலந்துகொண்டு பயன் பெறலாமே!

பங்குச் சந்தை பயிற்சி வகுப்புக்கான வீடியோ பார்க்க: 

ஃபண்டமென்டல் பயிற்சி வகுப்பில் பாராட்டிய முதலீட்டாளர்கள்!

மு.சா.கெளதமன்

படங்கள்:   ஜெ.விக்னேஷ்

அன்பார்ந்த வாசகர்களே!

நாணயம் விகடனின் கட்டணப் பயிற்சி வகுப்புகளில் நீங்களும் கலந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்கள் விவரங்களைக் கொடுத்து இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள். கட்டணப் பயிற்சி வகுப்பு அறிவிக்கப்படும்போது, தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நாணயம் விகடன் வழங்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.

பதிவுக்கு: nanayam.vikatan.com/training-camp