ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் (Net Profit) எப்படி, பல்வேறு நிலைகளுக்குப் பிறகு நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு வந்து சேருகிறது என்பதை அவற்றுக்கான கணக்கீட்டு ஃபார்முலாக்களுடன் விளக்கிச் சொல்கிறேன்.

நிகர லாபம் என்பது ஐந்து நிலைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. அவை,

1. மொத்த லாபம் (Gross Margin)

2. செயல்பாட்டு லாபம் (Operating Profits - PBDIT)

3. வட்டிக்கு முந்தைய லாபம் (PBIT - Profit Before Interest)

4. வரிக்கு முந்தைய லாபம் (PBT - Profit Before Taxes)

5. நிகர லாபம்

இவை ஒவ்வொன்றும் எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதற்கான ஃபார்முலா கீழே தரப்பட்டுள்ளது.

1. மொத்த லாபம்!

மொத்த வருமானம் - விற்பனையான பொருள் களுக்கான செலவு = மொத்த லாபம்

2. செயல்பாட்டு லாபம்!

மொத்த லாபம் (வணிகச் செயல்பாடுகள் மூலமான லாபம்) - செயல்பாட்டுச் செலவுகள் = செயல்பாட்டு லாபம்

3. வட்டிக்கு முந்தைய லாபம்!

செயல்பாட்டு லாபம் - தேய்மானம் (உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலதன தளவாடங்களுக்கான செலவு) = வட்டிக்கு முந்தைய லாபம்

4. வரிக்கு முந்தைய லாபம்!

வட்டி, வரிகளுக்கு முந்தைய லாபம் - வட்டி செலவு (மூலதனத் தில் கடனுக்கான வட்டி) = வரிகளுக்கு முந்தைய லாபம்

5. நிகர லாபம்!

வரிக்கு முந்தைய லாபம் (அனைத்துப் பங்குதாரர்களுக்கும் லாபத்தைப் பிரித்துக் கொடுத்தது போக உரிமையாளர்களுக்குக் கிடைக்கும் லாபம்) - வரி = நிகர லாபம்.

அதாவது, நிகர லாபம் என்பது செலவுகள் எல்லாம் கழித்து, வரிகள் கட்டியது போக நிறுவனத்தின் உரிமையாளர் களுக்கு வரும் தொகை.

மேலே விவரிக்கப்பட்ட ஐந்து நிலைகளைத் தனித்தனியாக ஆராய்ந்து விட்டு, அந்த நிறுவனப் பங்கு மீதான முதலீட்டு முடிவை எடுக்கக்கூடாது. நீண்ட காலத்தில் இந்த அம்சங்களின் போக்கை புரிந்துகொள்ள வேண்டும். இவற்றின் அடிப்படையில் ஒரு நிறுவனத்தின் எதிர்கால லாபத் தன்மையைச் சிறப்பாகக் கணிக்க முடியும்.

மேலே விவரிக்கப்பட்ட ஒவ்வொரு வருமான விஷயமும் குறிப்பிட்ட நிறுவனத்தின் வணிகத்தின் தன்மை, அந்த நிறுவனத்தின் நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுகிறதா என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. இங்கே சில உதாரணங்களைப் பார்ப்போம்.

விற்பனையான பொருளின் விலை (COGS - cost of goods sold) என்பது வருமானத்தில் பெரும்பகுதியாக இருந்தால், அந்த நிறுவனம் அதன் பொருட்களின் மதிப்பை மிகவும் குறைவாகத்தான் உயர்த்த முடியும். நகை தயாரிப்பு நிறுவனமாக இருந்தால், நிறைவு செய்யப்பட்ட பொருளின் மதிப்பில் தங்கம்

அல்லது வைரத்தின் விலை அதிகமாக இருக்கும். பொருள்களை வர்த்தகம் செய்யும் தொழிலில் இருக்கும் நிறுவனம், அதன் பொருள்கள் மீதான மதிப்பை ஓரளவுக்குத்தான் அதிகரிக்க முடியும்.

ஒரு நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் செயல்பாட்டுச் செலவு அதிகமாக இருந்தால், அந்த நிறுவனம் சேவை வணிகத்தில் இருக்கிறது என்று அர்த்தம். உதாரணத்துக்கு, ஐடி, பிபிஓ, ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் போன்றவை அதிகச் செயல்பாட்டுச் செலவை கொண்டிருக்கும்.

இந்த நிறுவனங்களின் மொத்தச் செலவில் பணியாளர் கள் சம்பளம் அதிகமாக இருக்கும். மொத்த வருமானத்தில் செயல்பாட்டுச் செலவு அதிகமாக இருந்தால், அந்த நிறுவனம் சிறப்பாகச் செயல் படவில்லை அல்லது குறைவான லாப விகிதத்தில் இயங்குகிறது என்று அர்த்தம்.

ஒரு நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் தேய்மானம் அதிகமாக இருந்தால், அந்த நிறுவனத்தின் வணிகம் அதிக மூலதன செலவைக்கொண்டு இருக்கும். உதாரணத்துக்கு, உருக்கு மற்றும் மின்சார ஆலை நிறுவனங்களைக் குறிப்பிடலாம். இந்த நிறுவனங்களின் நிர்வாகம், அதிகத் தேய்மானம் மூலம் வரியைக் குறைத்து லாபத்தை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில், தேய்மானம் முழுமையாகப் பயன்படுத்தப் பட்டுவிட்டால், வரி கட்டுவது அதிகரித்து லாபம் குறைந்துவிடும்.

ஒரு நிறுவனத்தின் வட்டிச் செலவு அதிகமாக இருந்தால், அந்த நிறுவனம் வணிகத்தை நடத்த அதிகக் கடன் வாங்கி இருக்கிறது என்று அர்த்தம். இந்த நிறுவனங்களும் அதிக மூலதனச் செலவை கொண்டிருக்கும்.

உதாரணத்துக்கு, அடிப்படைக் கட்டமைப்புத் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் போன்றவைகளைச் சொல்லலாம். அதிக வட்டிச் செலவை கொண்டிருக்கும் நிறுவனங்கள், வட்டி விகித ரிஸ்க்கை கொண்டிருக்கும். அதுபோன்ற நிறுவனங்கள் சில எதிர்பாராத சூழ்நிலைகளில் நிலைமையைச் சமாளிப்பது கஷ்டமாக இருக்கும்.

வருமானத்தில் ஒரு நிறுவனம், எவ்வளவு சதவிகிதத்தை வரியாகக் கட்டுகிறது என்பதை வைத்து அதன் நிர்வாகத் திறமையைக் கணிக்க முடியும். உதாரணத்துக்கு, ஒரு நிறுவனம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அல்லது வரி குறைவான பிராந்தியங்களைத் தேர்ந்தெடுத்து தொழிற் சாலைகளை அமைத்தால் லாபத்திலிருந்து வரிக்கு செல்வது குறைவாக இருக்கும்.

ஒரு நிறுவனத்தின் உரிமை யாளரின் நோக்கம் நிகர லாபத்தை அதிகப்படுத்துவதாக இருக்கும். நாம் இதுவரைக்கும் ஒரு நிறுவனத்தின் வணிக மதிப்பை அதன் எதிர்கால வருமானம் ஈட்டும் திறனின் அடிப்படையில் பார்த்தோம். அதிக வருமானம் ஈட்டும் திறன் கொண்ட நிறுவனத்தின் வணிகம் அதிக மதிப்பைக் கொண்டதாக இருக்கும்.

ஒரு நிறுவனத்தின் லாப, நஷ்டக் கணக்கை புரிந்துகொள்வதன் மூலம் அந்த நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம், செயல்படும் தன்மை போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும். ஒரு நிறுவனத்தின் மதிப்பை நன்றாக அறிந்து கொள்ள லாப, நஷ்டக் கணக்கை புரிந்துகொள்ள வேண்டும்.

(தொடரும்)

தொகுப்பு: சி.சரவணன்