சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை திடீரென உயர்ந்துள்ளது. இதன் விளைவாகக் கச்சா

எண்ணெய்யின் விலைப்போக்கு வரும் வாரத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து மும்பை காம்டிரென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் கூறுகிறார்.

கச்சா எண்ணெய்!

“கடந்த வியாழன் அன்று கச்சா எண்ணெய்யின் விலை 10% உயர்ந்து வர்த்தகமானது. ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 39 டாலரில் இருந்து 43 டாலராக உயர்ந்தது.

இது கடந்த ஆறரை வருட தின வர்த்தகத்தில் அதிகபட்ச ஏற்றம் ஆகும். இதற்கு முக்கியக் காரணம், சீனச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டுவந்ததே. இதனால் டாலரின் மதிப்பு வலிமை இழக்கத் தொடங்கியது. மேலும், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் கையிருப்பு அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.

கடந்த ஜூலையில் ஈரானின் ஒருநாள் உற்பத்தி அளவு 2.87 மில்லியன் பேரலாக இருந்தது. இது எதிர்வரும் காலத்தில் 3.4 - 3.6 மில்லியன் பேரலாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியும் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகி உள்ளது. இது 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4% அதிகமாகும்.

இந்தியாவுக்குத் தேவைப்படும் கச்சா எண்ணெய்யின் ஒரு பேரல் விலையானது, ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டில் 61.55 டாலராக இருந்தது. நடப்புக் காலாண்டில் இது 42.59 டாலராக உள்ளது. இது 30 சதவிகித விலை வீழ்ச்சி ஆகும்.

எம்சிஎக்ஸ் -ல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ரூ.3,065 - 3,050 இடையே வர்த்தகமாக வாய்ப்புள்ளது.”

தங்கம்!

கடந்த வியாழன் அன்று ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,122 டாலருக்கு சரிந்தது. இதுதான் கடந்த வாரத்தின் மிகப் பெரிய சரிவாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம், சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியாகும். மேலும், அமெரிக்காவின் இரண்டாம் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 3.7 சதவிகிதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு

அமெரிக்க டாலரின் மதிப்பு வலிமை அடைந்துள்ளது.

இதேபோல, கடந்த வாரம் வெளியான அமெரிக்காவின் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் பற்றிய தகவல்கள் எதிர்ப்பார்ப்பைவிடக் குறைந்திருந்தது. இது பங்குச் சந்தை வளர்ச்சிக்கு பாசிட்டிவாக இருக்கும் என்பதால், தங்கத்தில் முதலீடு குறைந்துள்ளது.

மேலும், வார இறுதியில் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வட்டி விகித உயர்வு குறித்த திட்டங்கள்அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் தற்போது வட்டி விகித உயர்வு குறித்தான திட்டம் எதுவும் இல்லையெனில் வரும் வாரத்தில் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

வெள்ளி!

கடந்த புதன்கிழமை அன்று ஒரு அவுன்ஸ் வெள்ளி 14.04 டாலர் அளவுக்கு சரிந்து, மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. வியாழன் அன்று 2.2% உயர்ந்து, 14.42 டாலருக்கு வர்த்தகமானது. அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் அறிகுறிகள் அதிகம் காணப்படுவதால் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீனாவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வெள்ளியின் பயன்பாடு குறைந்துள்ளது. ஆனால், அங்கு நிலைமை சரியானபின் வெள்ளி விலை உயர வாய்ப்புள்ளது. அதாவது, தங்கத்தின் விலையைவிட வெள்ளி வேகமாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் வாரத்தில் வெள்ளி ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

கரன்சி!

கரன்சியின் போக்கு வரும் வாரத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தியா சிமென்ட் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ கே.சுரேஷ் கூறுகிறார்.

“டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரும் வாரத்தில் உயர வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் வெளியாக உள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் பாசிட்டிவ்வாக இருந்தால், இந்தியப் பங்குச் சந்தையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எஃப்ஐஐகள் தங்கள் முதலீட்டை வெளியேற்றுவது நிற்கும். இந்தியாவில் அதிகமாக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையின் அளவு குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளது. ரூபாயின் வீழ்ச்சி 65.80-66.25 வரை இருந்தால், ஆர்பிஐ நடவடிக்கை ஏதும்் எடுக்காமல் இருக்கலாம். ஆனால், 66.50-க்கு மேலும், வீழ்ச்சி தொடருமானால், வீழ்ச்சியைத் தடுக்க ஆர்பிஐ நடவடிக்கை எடுக்கும். வரும் வாரத்தில் ரூபாயின் மதிப்பு 65.85 - 66.25 இடையே வர்த்தகமாக வாய்ப்புள்ளது.”

இரா.ரூபாவதி

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!