Published:Updated:

கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

ங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்து வருவதால் வரும் வாரத்தில் அதனுடைய போக்கு எப்படி

கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

இருக்கும் என்பது குறித்து மும்பை காம்டிரென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் கூறுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தங்கம்!   
                           
``கடந்த புதன் அன்று தங்கத்தின் விலை வெகுவாகச் சரிந்தது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,146 டாலரில் இருந்து 1,113 டாலர் வரை சரிந்து வர்த்தகமானது. இதற்கு முக்கியக் காரணம், அமெரிக்காவின் ஏடிபி வேலைவாய்ப்பு விவரம் எதிர்பார்த்ததைவிட சாதகமாக இருந்ததே. இது அமெரிக்காவின் வட்டி விகித உயர்வுக்கு வழிவகுக்கும். அதாவது, செப்டம்பர் மாத வேலை வாய்ப்பு விவரம் 1,94,000 இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது 2,00,000-ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் 1,73,000-ஆக  இருந்தது.இதனால் தங்கத்தின் விலை வெகுவாகச் சரிய ஆரம்பித்துள்ளது.

ஆனால், வருகிற அக்டோபர் 2-ம் தேதி நான்பார்ம் பேரோல் (US non farm payrolls data) வெளியாக உள்ளது. இது அதிகரித்து வெளி யாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி  அதிகரித்தால், அமெரிக்கா வின் பொருளாதாரம் மேலும் வலிமை அடையும். அதனால் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையக்கூடும். 2014-ம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை அதிகம் சரிவடைந்தது இதுவே முதல்முறை. கடந்த ஜூலையிலிருந்து தங்கத் தின் விலை 5% சரிவடைந்துள்ளது. இந்தச் சரிவு வரும் வாரங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 25,000 வரை சரியக்கூடும்.”

கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

வெள்ளி!

வெள்ளியின் விலை இந்தக் காலாண்டில் மட்டும் சுமார் 8%  சரிந்துள்ளது. அதாவது, கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 15.11 டாலரிலிருந்து 14.56 டாலராக சரிந்து வர்த்தகமானது. கடந்த புதன்கிழமை மட்டும் 0.6% விலை சரிந்தது. மேலும், அமெரிக்காவின் வேலை வாய்ப்பு விவரம் எதிர்பார்த்ததைவிட உயர்ந்து வெளியாகி இருப்பதால், இந்த ஆண்டின் இறுதிக்குள் வட்டி விகித உயர்வு கட்டாயம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. அதாவது ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.34,000 வரை சரிய வாய்ப்புள்ளது.

காப்பர்

காப்பரின் விலை கடந்த ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. கடந்த டிசம்பர் 31-ம் தேதியிலிருந்து காப்பரின் விலை 17% சரிந்துள்ளது. அதற்குமுன் 2014-ம் ஆண்டு 16% விலை சரிந்தது. ஆனால், இந்தச் சரிவை யாரும் மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த வாரம் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின்  தகவல்படி, கடந்த வருட ஆரம்பத்தில் ஒரு டன் காப்பரின் விலை 4,800 டாலராக இருந்தது. அதுவே டிசம்பர் மாதத்தில் 4,500 டாலராக விலை குறைந்தது. அதிக உற்பத்தி மற்றும் உலகப் பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த விலைச் சரிவு ஏற்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு 5,30,000 டன் அதிக உற்பத்தி இருக்கும் எனவும், இது 2019-ம் ஆண்டு 6,57,000 டன்னாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

காப்பரின் விலை இனி அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. அதாவது, கேண்டில் ஸ்டிக் பேட்டன் (Candlestick Pattern) உருவாகி உள்ளதால், விலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், சீனாவின் பொருளாதாரம் உயரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இது காப்பரின் விலை உயர்வுக்கு உதவியாக இருக்கும். இதனால் வரும் வாரத்தில் காப்பரின் விலை சற்று உயர்ந்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்!

பிரென்ட் கச்சா எண்ணெய் மற்றும் யு.எஸ் கச்சா எண்ணெய்யின் விலை இந்தக் காலாண்டில் 24% குறைந்துள்ளது.

சீனாவின் பொருளாதாரத் தகவல் நல்ல நிலையில் வெளிவந்தால், கச்சா எண்ணெய்யின் விலை உயர வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இயற்கை சீற்றங்களுக்கான அச்சுறுத்தல் இருப்பதால், கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தது.

ஆனால், இந்தக் காலாண்டின் மத்தியில் கச்சா எண்ணெய்யின் விலை சற்று உயர ஆரம்பித்தது.

மேலும், கடந்த வாரம் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் வரத்து நான்கு மில்லியன் பேரலாக இருந்தது. ஆனால், ஒரு மில்லியன் பேரல்தான் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இது அமெரிக்காவின் கச்சா எண்ணெய் சந்தைக்கு ஊக்கம் அளிக்கும் நிகழ்வாக இருந்தது.

வரும் வாரத்தில் கச்சா எண்ணெய்யின் விலை சற்று உயருவதற்கான வாய்ப்புள்ளது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

இரா.ரூபாவதி