தங்கம்!

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் முழுவதும் சரிவிலே இருந்தது. கடந்த வெள்ளி அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1103 டாலர் வரை சரிந்து மீண்டும் சற்று உயர ஆரம்பித்தது. கடந்த எட்டு வாரத்தில் மிகப் பெரிய சரிவு இதுதான். 2015 ஜூலை மாதத்தில் இருந்து தங்கமானது தொடர்ந்து சரிவிலேயே வர்த்தகமாகி வருகிறது.

இந்த வருடத்தில் அமெரிக்காவின் வட்டி விகிதம் உயர்வு இருக்கும் என்பதால், தங்கத்தின் மீதான முதலீடு வெகுவாக குறைந்துகொண்டே வருகிறது. வட்டி விகித உயர்வுக்கு வேலைவாய்ப்பு விவரம் அதிகரிக்க வேண்டும். அதேபோல, பணவீக்க விகிதமும் அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க ஃபெடரல் வங்கி முக்கிய அளவுகோலாக வைத்துள்ளது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வேலை வாய்ப்பு விவரம் வெளியாக உள்ளது. அதன் அடிப்படையில் வட்டி விகித உயர்வு இந்த வருடம் இருக்குமா, இல்லையா என்பது தெரியும்.

வட்டி விகித உயர்வுக்குச் சாதகமான முடிவுகள் வெளியானால், தங்கத்தின் விலை வரும் வாரத்தில் மேலும், சரிய வாய்ப்புள்ளது. கடந்த வெள்ளியன்று 10 கிராம் (24 கேரட்) 25,860 ரூபாய் அளவில் வர்த்தகமானது. இது 25,700 ரூபாய்க்கு கீழே சென்றால், 25,500 வரை செல்ல வாய்ப்புண்டு.

வெள்ளி!

தங்கத்தின் விலை போலவே, வெள்ளியின் விலையும் கடந்த வாரம் முழுவதும் சரிவிலே வர்த்தகமானது. கடந்த வாரத் துவக்கத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 15.48 டாலராக இருந்தது. அது வெள்ளிக்கிழமை அன்று 14.97 டாலர் வரை சரிந்து, மீண்டும் சற்று உயர ஆரம்பித்தது. இதுவே கடந்த ஒரு மாதத்தின் மிகப் பெரிய சரிவாகும். வெள்ளி விலைப்போக்கு அமெரிக்காவின் வேலைவாய்ப்பு இல்லாதவர் விவரத்தின் அடிப்படையில் இருக்கும்.

காப்பர்!

கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத அளவுக்கு காப்பரின் விலை சரிந்து வர்த்தகமானது.

சீனாவின் வளர்ச்சி இனிவரும் காலத்தில் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத நிலையில் இருக்கிறது. அமெரிக்காவின் வட்டி விகித உயர்வும் காப்பரின் விலையில் பிரதிபலிக்கும். மேலும், காப்பரின் விலை சர்வதேச சந்தையில் சரிந்து ஒரு டன் காப்பரின் விலை 5000 டாலருக்குக் கீழ் வர்த்தக மானது. இப்படிப் பல காரணங்களினால் காப்பரின் விலை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 20% சரிவைச் சந்துள்ளது. காப்பரை உற்பத்தி செய்யும் சுரங்கங்கள், விலை சரிவின் காரணமாக உற்பத்தியை நிறுத்தியதால், அதன் விலை சற்று உயர ஒரு காரணமாக அமைந்தது. 2017-ம் ஆண்டில் 4,55,000 டன் உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்தில் விலை ஏறுவதற்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய்யின் விலையும் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. அமெரிக்காவின் உள்நாட்டுக் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்ததால், இறக்குமதி வெகுவாகக் குறைந்தது. ஜென்ஸ்கேப் நிறுவனத்தின் அறிக்கையில் இனிவரும் காலத்தில் கச்சா எண்ணெய்யின் விலை குறைய அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் ஒபெக் நாடுகளின் உற்பத்தியும் தேவையைவிட அதிகமாக உள்ளன. மேலும், கடந்த வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய்யின் விலை 2% குறைந்தது. இதற்கு காரணம், அதிக வரத்து மற்றும் டாலரின் மதிப்பு வலிமை யாக இருப்பதே. கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகள் வலிமையாக இருந்தாலும், அடுத்த இரண்டு ஆண்டு களுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை அமெரிக்கா கையிருப்பாக வைத்துள்ளது.

மேலும், கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகள் அனைத்தும் 2015-ம் ஆண்டு அதிக உற்பத்தி செய்துள்ளன. இதன் காரணமாகவும் விலை குறைந்து வருகிறது.

அக்ரி கமாடிட்டி வர்த்தக நிலவரங்களை அறிய: http://bit.ly/1RBN6kT

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!