அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பால் மெட்டல் மற்றும்

ஆயில் கமாடிட்டிகளின் விலைப் போக்கில் தாக்கம் அதிகரித்துள்ளது. வரும் வாரத்தில் கச்சா எண்ணெய்யின் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து குட்வில் கமாடிட்டி நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் தினேஷ் பாலாஜி விளக்குகிறார்.

கச்சா எண்ணெய்!

“கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இதற்கு கச்சா எண்ணெய்யின் உற்பத்தி அதிகரிப்பதும் டாலரின் மதிப்பு வலுவாக இருப்பதுமே முக்கிய காரணம்.

உலக நாடுகள் அனைத்துக்கும் அவசியத் தேவையாக இருக்கும் கச்சா எண்ணெய்யின் விலை சமீபகாலமாக குறைந்து வருகிறது. ஆனால், கச்சா எண்ணெய்க்கான தேவை உலகளாவிய பொருளாதாரச் சூழ்நிலைகளையும், சந்தை ஏற்ற இறக்க யூகங்களையும் சார்ந்து இருப்பதால், இவையே கச்சா எண்ணெய்யின் விலைப்போக்கை நிர்ணயிப்பதாக உள்ளன.

இந்த வாரத்தில் ஒரு பீப்பாய் ப்ரென்ட் கச்சா எண்ணெய் விலை 5 சதவிகிதத்துக் கும் மேல் குறைந்து, தற்போது 46 டாலருக்கு வர்த்தகமாகிறது. மேலும், வர்த்தகர்கள் மத்தியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 40 டாலர், ஏன் 25 டாலர் வரைகூட விலை சரியும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவும் சூழல்கள் உள்ளன. வரும் வாரத்தில் விலை அதிகரிக்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.”

தங்கம்!

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது 5% குறைந்துள்ளது. ஆனால், இந்தியச் சந்தையில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலைச்சரிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து, கடந்த வியாழன் அன்று 1,084.7 டாலருக்கு வர்த்தகமானது.

இதற்கு அமெரிக்க டாலரின் மதிப்பு மிக வலிமையாக இருப்பதும், அமெரிக்க ஃபெடரல் வங்கி டிசம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தைக் கட்டாயம் உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதும்தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, பங்குகளில் முதலீடு செய்ய தயாராகி வருகிறார்கள். இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, சரிவைச் சந்தித்து வருகிறது.

ஆனால், வெள்ளியன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்தது. அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளியிடப்பட்ட தாக்கத்தினால், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில், 2.20 டாலர் உயர்ந்துள்ளது. இந்தியச் சந்தையிலும் 10 கிராம் தங்கத்தின் விலை 0.32% அதிகரித்து, 25,409 ரூபாயாக உள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவடைந்து வருவதால், இந்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அன்று தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் இறக்குமதி வரிக்கான அடிப்படை விலையை 373 டாலரிலிருந்து (10 கிராம் விலை) 354 டாலராக குறைத்துள்ளது. டிசம்பரில் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மேலும் சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

வெள்ளி!

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் சரிவைச் சந்தித்தது. கடந்த திங்கட்கிழமை ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 14.73 டாலராக இருந்தது, தொடர்ந்து குறைந்து வெள்ளிக்கிழமை அன்று 14.35 டாலராக வர்த்தகமானது. இந்தியச் சந்தையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 0.12% குறைந்து, 33,850 ரூபாயாக உள்ளது. குறுகிய காலத்தில் வெள்ளியின் விலைக்கான சப்போர்ட் ரூ.33,500 ஆகும். வரும் வாரத்தில் வெள்ளியின் விலை ரூ.34,460 லிருந்து ரூ.34,630 வரை என்ற அளவில் வர்த்தகமாகலாம்.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!