இந்த வாரம் கச்சா எண்ணெய்யின் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தியா

நிவேஷ் கமாடிட்டி நிறுவனத்தின் தலைவர் மனோஜ்குமார் ஜெயின் விளக்குகிறார்

கச்சா எண்ணெய்!

“டாலரின் மதிப்பு சற்று குறைந்தபோதும் அதிக வரத்து காரணமாக கச்சா எண்ணெய்யின் விலையானது தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த வியாழன் அன்று 10 வாரங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 40 டாலருக்குக் கீழ் சரிந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப்பிறகு இந்த அளவு விலை சரிவது இதுவே முதல்முறை. டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை 38 டாலராகச் சரிந்தது.

கடந்த மாத ஃப்யூச்சர்ஸ் வர்த்தகத்தில் அமெரிக்க கச்சா எண்ணெய் 8 சதவிகிதத்துக்கு மேல் விலை சரிந்தது. கடந்த 80 வருடத்தில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் கச்சா எண்ணெய்யின் கையிருப்பு அதிகரித்துள்ளது. உலக அளவிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய்யின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

எம்சிஎக்ஸ் கச்சா எண்ணெய் ரூ.2,790 அளவில் வர்த்தகமாகிறது. ரூ.2,810-க்கு மேல் சென்றால், ரூ.2,860, ரூ.2,915 வரை உயரலாம். சப்போர்ட் ரூ.2,750 என்கிற அளவில் உள்ளது. இதற்கு கீழ் சென்றால், வீழ்ச்சி ரூ.2,705 - ரூ.2,670 - ரூ.2,600 வரை தொடரலாம். சுறுசுறுப்பான வர்த்தகர்கள் ரூ.2,810-க்கு மேல் வாங்கலாம். டார்கெட் ரூ.2,860, 2,915. ஸ்டாப்லாஸ் ரூ.2,750-க்குகீழ்.’’

தங்கம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த வாரம் செவ்வாய் அன்று அதிகபட்சமாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,066 டாலர் வரை சரிந்தது. அடுத்த நாட்களில் விலை சற்று உயர்ந்து, வெள்ளியன்று ஒரு அவுன்ஸ் 1081 டாலருக்கு வர்த்தகமானது. கடந்த வியாழனன்்று மட்டும் தங்கத்தின் விலை ஒரு சதவிகிதத்துக்கு மேல் சரிந்தது. இது கடந்த ஆறு வருடங்களில் இல்லாத சரிவு ஆகும்.

இந்த நிலையில் அமெரிக்கா ஃபெடரல் வங்கி டிசம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே, தங்கத்தில் முதலீடு குறைந்துள்ளது. இந்த வருடம் வட்டி விகிதம் உயர்வு இருக்கும் என்ற எதிர்பார்ப்பினால், இதுவரை தங்கத்தின் விலை 9% சரிந்துள்ளது.மேலும், டாலரின் மதிப்பு மிக வலிமையாக உள்ளது. டிசம்பர் 15,16-ல் அமெரிக்க வட்டி விகித முடிவுகள் தெரியும் என்பதால், தங்கத்தின் விலை சிறிய ஏற்ற இறக்கங்களுடன் வர்த்தகமாகலாம்.

வெள்ளி!

வெள்ளியின் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த வாரம் புதனன்று ஒரு அவுன்ஸ் அதிகபட்சமாக 14.05 டாலருக்கு சரிந்தது. அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகள் அக்டோபரிலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஆரம்பித்துள்ளது. அதேநேரத்தில், வேலைவாய்ப்பு சந்தையும் நல்ல நிலையிலே உள்ளது. இதெல்லாம் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான காரணிகள் ஆகும். அதே நேரத்தில், மத்திய அட்லாண்டிக் பகுதியில் உற்பத்தி கடும் சரிவைச் சந்தித்துள்ளது. வட்டி விகிதம் குறித்த முடிவுகளின் அடிப்படையில் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

காப்பர்!

நவம்பர் மாத துவக்கத்திலிருந்து ஒரு நாள் மட்டும்தான் காப்பரின் விலை உயர்ந்து வர்த்தகமானது. கடந்த வாரத்தில் 7 சதவிகிதத்துக்கு மேல் விலை சரிந்தது. அதாவது, டாப் 15 சுரங்கங்கள் சேர்ந்து 5.1 மில்லியன் டன் காப்பரை 2014-ம் ஆண்டில் உற்பத்தி செய்தது.

ஆனால், இந்த உற்பத்தி அளவானது சாதாரணமாக ஒரு காலாண்டுக்கு உரியதாகும். மேலும், இந்த 15 சுரங்கங்களும் குறைந்தபட்சமாக 50 பில்லியன் டன் காப்பரை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது. தற்போது மொத்தமாக 289 மில்லியன் டன் காப்பர்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. டிமாண்ட் மிகவும் குறைந்துள்ளது. இதன் தாக்கம், சிலி, தென் அமெரிக்க நாடுகளில் அதிகமாக இருக்கிறது. வரும் வாரத்தில் காப்பரின் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என எதிர்பார்க்கலாம்.

அக்ரி கமாடிட்டி வர்த்தக நிலவரங்களை அறிய: http://bit.ly/1kKz5ar

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!