கச்சா எண்ணெய்யின் விலைப்போக்கு குறித்து அலைஸ்ப்ளூ நிறுவனத்தின் துணைத் தலைவர் கார்த்திகேயன் ராமநாதன் விளக்குகிறார்.

கச்சா எண்ணெய்!

“கச்சா எண்ணெய்யின் விலையைத் தீர்மானிப்பதில் சவுதி அரேபியாவின் பங்கு அதிகமாக உள்ளது. 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியிலிருந்து, கடந்த வியாழக்கிழமை விலை சற்று அதிகரித்து வர்த்தகமானது. அடுத்த வருடத்தில் கச்சா எண்ணெய்யின் விலையில் ஒருவிதமான சமநிலையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஒபெக் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த ஒபெக் அமைப்பின் சார்பில் டிசம்பர் 4-ம் தேதி வியன்னாவில் கூட்டம் நடைபெற்றது. அதில் உற்பத்தியைக் குறைப்பதற்கான வழிமுறைகள் எட்டப்படாததால், கச்சா எண்ணெய் விலை கடந்த வெள்ளியன்று இறக்கம் கண்டது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை ரூ.2,660, ரூ.2,570 மற்றும் ரூ.2,445 வரை சரிய வாய்ப்புள்ளது.’’

தங்கம்!

கடந்த வார துவக்கத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1053 டாலராகவும், வார இறுதியில் ஒரு அவுன்ஸ் 1066 டாலராகவும் இருந்தது. அதுவே இடையில் அதிகபட்சமாக 1072 டாலர் வரை உயர்ந்தது.

ஐரோப்பிய மத்திய வங்கியின் பணக் கொள்கை முடிவுக்குப் பிறகு டாலரின் மதிப்பு சற்று சரிய ஆரம்பித்தது. அதாவது, கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு யூரோவுக்கு நிகரான டாலரின் மதிப்பு சரிந்தது. மேலும், அமெரிக்காவின் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு விவரம் வட்டி விகித உயர்வுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, வேலைவாய்ப்பு இல்லாதவர் விவரமும் வெகுவாகக் குறைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் குறையாத வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என அமெரிக்க ஃபெட் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 15, 16-ம் தேதிகளில் வட்டி விகிதம் உயர்வு குறித்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் 2006-க்குப் பிறகு அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு உருவாகி உள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் தங்கத்தின் விலைப்போக்கு இருக்கும்.

வெள்ளி!

ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையானது கடந்த சில மாதங்களாகவே 14 - 15 டாலருக்குள் வர்த்தகமாகி வந்தது. இது கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று 13.95 டாலருக்கு வர்த்தகமானது. அதன்பிறகு மீண்டும் வெள்ளியின் விலை சற்று அதிகரித்து வாரத்தின் இறுதியில் 14.13 டாலருக்கு வர்த்தகமானது. மேலும், வெள்ளியின் மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதத்துக்கு மேலாகத் தொழில் துறையில் பயன்படுகிறது. சீனா போன்ற வளரும் நாடுகளில் வெள்ளியின் தேவை அதிகமாக உள்ளது. முதலீட்டு நோக்கிலும் மிகக் குறைந்த அளவில்தான் வாங்கப்படுகிறது. மேலும், வெள்ளியின் பயன்பாடு அதிகமாக இருக்கும் தொழில் துறையில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாதால், விலை மேலும் சரிவடைய வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் வட்டி விகித உயர்வின் அடிப்படையில் வரும் வாரத்தில் வெள்ளியின் விலை அமையும்.

காப்பர்!

காப்பரின் விலையானது 2009-ம் ஆண்டில் இருந்த அளவுக்குச் சரிந்துள்ளது. மேலும், அமெரிக்காவில் வட்டி விகித உயர்வு இருந்தால், வணிக செலவுகள் அதிகரித்து டிமாண்ட் குறைய வாய்ப்புள்ளது. தவிர, காப்பரை உற்பத்தி செய்யும் பல்வேறு சுரங்கங்கள் மூடப்பட்டு வரும் நிலையில், சில சுரங்கங்களின் லைசென்ஸ் புதுப்பிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், டாலரின் மதிப்பு வலுவடையும். ஐரோப்பிய மத்திய வங்கியின் கொள்கைகள் உலோகங்களின் விலை ஏற்றத்தில் ஏமாற்றத்தையே அளித்துள்ளன. ஆனால், அமெரிக்காவின் வேலைவாய்ப்பு விவரம் வெளியான பிறகு, அதன் அடிப்படையில்தான் அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு குறித்த முடிவுகள் எடுக்கப்படும். அதன்பிறகு உலோகங்களின் விலை ஏற்றம் அடைய வாய்ப்புள்ளது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!