இந்த வாரம் மஞ்சள் விலைப் போக்கு குறித்து இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளர் முருகேஷ்குமார் விளக்குகிறார்.

மஞ்சள் (Turmeric)

``முக்கியச் சந்தைகளில் மஞ்சளுக்கான தேவை குறைந்து காணப்பட்டதால், கடந்த வாரத்தில் மஞ்சள் விலை குறைந்தே வர்த்தக மானது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்ததன் காரணமாக மஞ்சள் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

தெலங்கானா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் வறட்சி நிலவுவதால், மஞ்சள் உற்பத்தி பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தெலங்கானா வேளாண் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2015-16-ல் மஞ்சள் விளைச்சல் 40,823 ஹெக்டேராக கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் கணிக்கப் பட்டதைவிடக் குறைவு. மழையிலிருந்து மீண்டுவந்த பிறகு மஞ்சளுக்கான தேவை அதிகரிக்கலாம். மேலும், வரும் பருவத்தில் மஞ்சள் அதிகம் விளையும் மாநிலங்களில் விளைச்சல் ஏரியா குறையும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் இனி வரும் வாரங்களில் மஞ்சள் விலை உயர்ந்து வர்த்தகமாகும் வாய்ப்பு உள்ளது.’’

ஜீரகம் (Jeera)

முக்கியச் சந்தைகளில் வரத்து அதிகரித்ததன் காரணமாகவும் தேவை குறைந்ததன் காரணமாகவும் ஜீரகம் கடந்த வாரம் விலை குறைந்து வர்த்தகமானது. இதனால் விவசாயிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர். குஜராத்தில் ஜீரக விளைச்சல் ஏரியா கடந்த ஆண்டு 1,59,800 ஹெக்டேராக இருந்தது தற்போது நவம்பர் 30-ம் தேதி சந்தை நிலவரப்படி, 1,27,600 ஹெக்டேராக குறைந்துள்ளது. மேலும், ஜீரகத்துக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகளவில் இல்லாத காரணத்தினாலும், இனி வரும் மாதங்களில் விளைச்சல் அதிகரிக்கலாம் என்ற கணிப்பினாலும் விலை குறைந்து இருக்கிறது.

அரசு வேளாண் துறை தரப்பில் 2014 - 2015 (ஜூலை - ஜூன்) ஆண்டுக்கான ஜீரக விளைச்சல் 5,99,000 டன்னாகக் கணிக்கப்பட்டிருந்தது. இது கடந்த நிதி ஆண்டில் 5,14,000 டன்னாக மட்டுமே இருந்தது. தற்போது ஜீரகம் அதிகம் விளையும் பகுதிகளில் விளைச்சலுக்கு சாதகமான வானிலை இல்லாத காரணத்தினால் விளைச்சல் குறையலாம் என்ற எதிர்பார்ப்பில் விலை மேலும் குறையாமல் இருக்க வாய்ப்புள்ளது.

ஏலக்காய் (Cardamom)

கடந்த வாரத்தில் ஏலக்காய் முக்கிய சந்தைகளில் வரத்து அதிகரித்து காணப்பட்டதாலும், தேவை குறைந்து காணப்பட்டதாலும், விலை குறைந்து வர்த்தகமானது. கடந்த புதன் அன்று கிடங்குகளில் இருந்த 111 டன் ஏலக்காய் இருப்பு கிலோ குறைந்தபட்சமாக ரூ.605-க்கும் அதிகபட்சமாக ரூ.951-க்கும் ஏலத்தில் விடப்பட்டது.

ஏலக்காய்க்கான உள்நாட்டு ஆர்டர்களும், ஏற்றுமதி ஆர்டர்களும் குறைவாகவே இருப்பதால், கிடங்குகளில் ஏலக்காய் இருப்பு தேக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் மேலும் வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், ஏலக்காய்கள் சரியாகப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏலக்காய்களின் தரம் குறையத் துவங்கியுள்ளது. இதனால் விலையைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக ஏலக்காய்களுக்கான தேவை குறைந்துள்ளதால் இனிவரும் வாரங்களிலும் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

கொத்துமல்லி (Coriander)

கடந்த வாரத்தில் கொத்துமல்லிக்கான தேவை குறைந்து காணப்பட்டதால், முக்கியச் சந்தைகளில் இருப்பு அதிகரித்து விலை குறைந்து வர்த்தகமானது. மேலும், கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு கொத்துமல்லி விளைச்சல் ஏரியா அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கொத்துமல்லி அதிகம் விளையும் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் விளைச்சல் ஏரியா அதிகரிக்கப்பட்டுள்ளதன் விளைவாக முக்கியச் சந்தைகளில் கொத்துமல்லி விலையைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனாலும், வரும் நாட்களில் கொத்துமல்லிக்கான தேவை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதால், விலை குறைவது ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும். மேலும், கொத்துமல்லி விலை குறைவதைத் தடுக்க அதிக விளைச்சல் பகுதிகளில் விளைச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. எனவே, வரும் வாரங்களில் கொத்துமல்லி விலை சற்று உயர்ந்து வர்த்தகமாகும் வாய்ப்பு உள்ளது.