தங்கத்தின் விலைப் போக்கை பற்றி இந்தியா நிவேஷ் கமாடிட்டீஸ் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ்

குமார் ஜெயின் கூறுகிறார்.

தங்கம்!

அமெரிக்க ஃபெட்ரல் வங்கி கூட்டத்துக்குப்பின் தங்கத்தின் ஜூன் மாத கான்ட்ராக்ட் விலை ரூ.30,161-ல் இருந்து ரூ.28,270-ஆக குறைந்தது. கடந்த வார இறுதியில் சுமாராக ரூ.28,800 க்கு வர்த்தகமானது.

வரும் வாரத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து ரூ.28,900 க்கு மேல் வர்த்தகமாகி நிறைவடைந்தால், அடுத்த நாட்களில் ரூ.29,050- க்கு புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகமாகலாம். தங்கம் ரூ.28,900 க்கு ரூ.28,550- ஐ சப்போர்ட்டாக எடுத்துக்கொண்டு வர்த்தகம் மேற்கொள்ளலாம்.

ஒருவேளை அடுத்த வாரம் தங்கம் இறக்கத்தில் வர்த்தகமானால் அதிகபட்சமாக ரூ.28,400 வரை இறங்கி வர்த்தகமாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்திய சந்தைகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தங்கத்தின் விலை ஏற்றத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. எனவே, அதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு தங்கத்தில் வர்த்தகத்தை மேற்கொள்ளவும்.

வெள்ளி!

கடந்த வாரத்தில் இந்திய கமாடிட்டி சந்தையில் வெள்ளி விலை சுமாராக 1% வரை விலை அதிகரித்து வர்த்தகமானது.

சந்தையில் மார்ச் மாத சிகாகோ பிஎம்ஐ 50.5 புள்ளிகளாக இருக்கும் என்கிற கணிப்புக்கு எதிராக 53.6 புள்ளிகளாக அதிகரித்தது, வெள்ளியின் விலை உயர முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அதோடு கடந்த வாரத்தில் மார்ச் மாதத்துக்கான கெய்க்சின் உற்பத்தி பிஎம்ஐ 49.7-ஆக அதிகரித்திருக்கிறது. இதுவும் கடந்த வார வெள்ளி விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக

கருதப்படுகிறது.

தங்கம் - வெள்ளிக்கான ரேஷியோ 80 லெவல்களுக்கு கீழ் இறங்கி இருக்கிறது. இது போன்ற சர்வதேச காரணிகளால் அடுத்த வாரமும் வெள்ளியின் விலை சிறிய ஏற்றத்தில் வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

காப்பர்!

சீனப் பொருளாதார தேக்க நிலை காரணமாக மெட்டல் கமாடிட்டிகளில் காப்பர் அதிக விலை இறக்கத்தில் வர்த்தகமானது. சீனாவின் மெட்டல் உற்பத்தி அடுத்த எட்டு மாதங்களுக்கு தொடர்ச்சியாக குறைய அதிக வாய்ப்பிருப்பதாக அனலிஸ்ட்டுகள் கணித்திருக்கிறார்கள். கடந்த நவம்பர் 2011-லிருந்து இதுவரையான காலத்தில் கடந்த மாதம் வெளியான சீனாவின் உற்பத்திதான் குறைவு. தற்போது சீனாவில் மெட்டல் களுக்கான டிமாண்ட் சற்று அதிகரிக்கத் தொடங்கி இருப்பதால், அடுத்த வாரம் காப்பர் விலை சற்றே உயரலாம்.

கச்சா எண்ணெய்!

சுத்தீகரிக்கப்படும் கச்சா எண்ணெய் அளவு அதிகரித்திருப்ப தால் அதன் நுகர்வும் அதிகரித் திருக்கிறது. இருப்பினும் அமெரிக்கா வில் கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய்யின் உற்பத்தி, நாள் ஒன்றுக்கு 9.022 மில்லியன் பேரல் களாக குறைந்திருக்கிறது. இது கடந்த வாரத்தைக் காட்டிலும் நாள் ஒன்றுக்கு 16,000 பேரல் குறைவு. அதோடு அமெரிக்காவில் கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறைந்திருக்கிறது.

ஈரான் மீதான தடை விலக்கப்பட்டு விட்டதால், வரும் வாரங்களில் ஈரான் மட்டுமே நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்ப இருக்கிறது. இதனால் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் பக்க வாட்டிலோ, சிறிய அளவில் விலை ஏற்றத்திலோ வர்த்தகமாகலாம்.

அக்ரி கமாடிட்டி பகுதியைப் படிக்க: http://bit.ly/1Y42ycC

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!