கச்சா எண்ணெய்! கடந்த வாரத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏறி இறங்கி வர்த்தகமானது. ஆரம்பத்தில் 40 டாலர் என்ற நிலையிலிருந்தது, இரண்டு வர்த்தக தினங்களில் 42 டாலராக உயர்ந்தது. அதன்பிறகு மீண்டும் 40 டாலருக்கே திரும்பியது.

சர்வதேச எரிசக்தி முகமையின் அறிக்கைப்படி, கச்சா எண்ணெய்யின் இருப்பு, இந்த நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் ஒரு நாளைக்கு 2 லட்சம் பேரலாகக் குறையும் என்று கூறியிருக்கிறது. முதல் பாதி ஆறு மாதங்களில் கச்சா எண்ணெய் இருப்பு ஒரு நாளைக்கு 15 லட்சம் பேரலாக இருக்கிறது. இதன் காரணமாக உற்பத்தியைக் குறைக்க தோஹாவில் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இருந்தாலும் ரஷ்யா இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு விலை ஏற்றம் இருக்காது என தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச கச்சா எண்ணெய் தேவையும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறை வாக இருக்குமென தெரிவித்துள்ளது.

ஆனால், ஈரான் உற்பத்தியைக் குறைக்க மறுப்பு தெரிவித்துள்ளது. ஈரானைப் போலவே மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தக் குழப்பங்களால் கச்சா எண்ணெய் விலை குறைந்தது.

மேலும் இந்த தோஹா மாநாட்டில் எந்தவொரு முடிவும் எட்டப்படா விட்டால், இந்த உற்பத்தி கட்டுப்பாடு ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்குப் பெரும்பாலும் வாய்ப்பு குறைவுதான். இதனால் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் கரெக்ஷன் ஏற்பட வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் மே மாத ஃப்யூச்சர்ஸ் ரூ.2,866-லிருந்து ரூ.2,899 என்ற நிலையில் வர்த்தகமாகலாம்.

தங்கம்!

கடந்த வாரத்தில் தங்கமும் சரிவைச் சந்தித்தது. ஒரு அவுன்ஸ் தங்கம், வாரத் தொடக்கத்தில் 1245 டாலர் என்ற நிலையில் வர்த்தகமானது. ஆனால், அடுத்த தினங்களில் 1226 டாலர் என்ற நிலைக்குக் குறைந்தது. வெள்ளி அன்று சற்று ஏற்றம் கண்டு அவுன்ஸ் தங்கம் 1228 டாலர் என்ற நிலையில் உள்ளது.

டாலரின் மதிப்பு வலிமை பெற்றதும், ஈக்விட்டி சந்தைகள் தங்கத்துக்கு சாதகமாக திரும்பியதுமே இதற்கு காரணம். கச்சா எண்ணெய் விலையில் சற்று ஏறியதும், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டதும் கூடுதல் காரணங்களாகும். ஆனாலும் விலையில் அதிக உயர்வு நடக்கவில்லை.

கடந்த வாரத்தில் நடந்த அமெரிக்க வட்டி விகித முடிவு கூட்டத்தின் தாக்கத்திலிருந்து தங்கம் வெளியே வரவில்லை என்பதாலும், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு குறித்த முடிவு எட்டப்படாது என்பதால், அமெரிக்க டாலர் மதிப்பு குறையாது. எனவே வரும் வாரத்திலும் இந்த நிலையே தொடரும்.

வெள்ளி!

கடந்த வாரத்தில் வெள்ளி ஏற்றத்தில் வர்த்தகமானது. எம்சிஎக்ஸ் சந்தையில் கடந்த வாரத்தில் வெள்ளி கான்ட்ராக்ட்டுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், ஒரு கிலோ வெள்ளி ரூ.36,000 என்ற சப்போர்ட்டில், 2% உயர்ந்து, ரூ. 36,671-க்கு வர்த்தகமானது.

கடந்த வாரத்தில் திங்கள்கிழமை மட்டும் வெள்ளி 3% விலை உயர்ந்து வர்த்தகமானது. வெள்ளியைப் பொறுத்தவரை குறுகிய காலத்துக்கு ஏற்றத்திலேயே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.37,000 - 37,500க்கு வர்த்தகமாகலாம். வர்த்தகர்கள் ஸ்டாப்லாஸ் ரூ.37,400-ஆக வைத்துக் கொள்ளலாம்.

காப்பர்!

காப்பர் விலை கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு சமீபத்தில் குறைந்தது. பெரிய சுரங்கங்கள் விலைக் குறைவின் காரணமாக உற்பத்தியைக் குறைத்துக் கொண்டதே இதற்கு முக்கிய காரணம். ஆனால், அந்த சரிவிலிருந்து காப்பர் கடந்த வாரத்தில் மீண்டு வந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் 3.6% உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது. தற்போது ஒரு கிலோ காப்பர் ரூ.318.40 என்ற நிலையில் உள்ளது. சீனாவில் காப்பருக்கான தேவை நன்றாக இருப்பதால், குறுகிய காலத்தில் தற்போதைய ரூ.320 ரெசிஸ்டன்ஸைத் தாண்டி போக வாய்ப்புள்ளது. எனவே, வரும் வாரத்தில் காப்பர் ரூ.330-340 என்ற நிலையில் வர்த்தகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

அக்ரி கமாடிட்டி பகுதியைப் படிக்க: http://bit.ly/23L4Dhm