Published:Updated:

அரசு ஊழியர்கள் பங்கு வர்த்தகம் செய்யலாமா?

கேள்வி-பதில்

அரசு ஊழியர்கள் பங்கு வர்த்தகம் செய்யலாமா?

கேள்வி-பதில்

Published:Updated:
அரசு ஊழியர்கள் பங்கு வர்த்தகம் செய்யலாமா?

அரசு ஊழியரான நான் எனது பெயரில் பங்கு வர்த்தகம் செய்ய முடியுமா?

திருமுருகன், நாகப்பட்டினம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
ஏ.கே.நாராயணன்,
தலைவர், தமிழ்நாடு இன்வெஸ்ட்டார் அசோசியேஷன்.

''அரசு ஊழியர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள பங்குகளின் விவரம், முதலீட்டு அளவு போன்றவற்றை ஆண்டுதோறும் நீங்கள் வேலை பார்க்கும் துறைக்கு உறுதியளிப்பு பத்திரமாக (Declaration) சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் தரும் விவரங்கள் சரியாக இருந்து, அதை நீங்கள் வேலை பார்க்கும் துறை அதிகாரிகள் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் பங்கு வர்த்தகம் செய்ய அரசு ஊழியர்களுக்கு எந்தவித பிரச்னையும் இருக்காது.''  

அரசு ஊழியர்கள் பங்கு வர்த்தகம் செய்யலாமா?

நானும் எனது மனைவியும் அரசுப் பணியில் இருக்கிறோம். பணி ஓய்வுக்குப் பிறகு எங்களுக்குப் பென்ஷன் வருமென்றாலும், வேறு ஏதேனும் பென்ஷன் திட்டங்களில் சேரலாமா?

ஆர்.வைத்தியநாதன், சென்னை.

சூர்யகுமார், நிதி ஆலோசகர்.

''ஓய்வு காலத்துக்குப் பிறகு உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஓய்வூதியத் தொகை உங்களது தேவைகளை நிறைவேற்ற போதுமானதாக இருக்குமா என்பதைப் பொறுத்து வேறு பென்ஷன் திட்டங்களில் சேரலாம். உங்களுடைய தற்போதைய வருமானம் மற்றும் செலவுகளைக் கணக்கிட்டு எதிர்காலத்தில் உங்களுக்கு எவ்வளவு தேவைப்படும், பென்ஷன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்பதை முதலில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இதனோடு, எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவச் செலவுகளையும் கணக்கி லெடுத்துக் கொள்ளுங்கள். இதன் அடிப்படையில் வேறு பென்ஷன் திட்டங்களில் சேரலாம். உங்கள் எதிர்காலத் தேவையைப் பொறுத்தே எந்த மாதிரியான பென்ஷன் திட்டங்கள் உங்களுக்குப் பலன் அளிக்கும் என்பதைச் சொல்ல முடியும்!''

அரசு ஊழியர்கள் பங்கு வர்த்தகம் செய்யலாமா?

பிளாட் ஒன்றை ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கி, அந்த இடத்தில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். ஊராட்சியில் தற்போது அனுமதி கேட்டபோது, அது விவசாய நிலம் என்று கூறி அனுமதி அளிக்க மறுத்து கட்டிய கட்டடத்தையும் இடிக்குமாறு சொல்கிறார்கள். பட்டா கேட்டு சர்வேயரை அணுகினால் ஊராட்சி அனுமதி இல்லாமல் பட்டா தர முடியாது என்கிறார். என்ன செய்வது?

அருள்ராஜ், அய்யலூர்.

என்.ரமேஷ், வழக்கறிஞர்.

அரசு ஊழியர்கள் பங்கு வர்த்தகம் செய்யலாமா?

வீட்டு மனையாக அங்கீகாரம் பெறாத இடத்தை நீங்கள் வாங்கியிருக்கிறீர்கள். அதாவது, நீங்கள் வாங்கிய இடம் விவசாய நிலம். இதுபோன்ற சூழ்நிலையில் விவசாய நிலத்தை வீட்டு மனையாக மாற்றம் செய்யக்கோரி ஊராட்சி அலுவலகத்தில் மனு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகு கட்டடம் கட்ட அனுமதியும், வரைபட அனுமதியும் ஊராட்சியிலிருந்து பெற்றிருக்க வேண்டும்.

அதன்பிறகுதான் கட்டடம் கட்ட தங்களுக்கு உரிமை உண்டு. உரிய அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் தாங்கள் கட்டடம் கட்டியதால்தான் அதை இடிக்கக்கோரி தமிழக மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் கீழ் தங்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டிருக்கும். தற்போதைய நிலையில் அந்த அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தை நாடலாம்.

பட்டா வழங்குவதற்கும், ஊராட்சிக்கும் சம்பந்தமில்லை. உங்களுக்கு கிரயம் கொடுத்தவரின் பெயரிலுள்ள பட்டா நகலையும், உங்கள் பெயரில் உட்பிரிவு செய்து மாற்றுவதற்கு உரிய மனுவையும், வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்து பட்டா பெயர்மாற்றம் செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism