நல்ல விஷயங்களை நல்ல நாட்களில் செய்ய வேண்டும் என்பார்கள். வருஷம் முழுக்க பங்குகளை வாங்குகிறோம் என்றாலும், தீபாவளி அன்று பங்குகளை வாங்குவது விசேஷமானது. எனவே, ஒவ்வொரு தீபாவளியின் போதும் 'முகூர்த் டிரேடிங்’ என்கிற பெயரில் ஒரு மணி நேரம் ஸ்பெஷல் டிரேடிங் நடத்துகின்றன எக்ஸ்சேஞ்சுகள்.

இந்த முகூர்த் டிரேடிங்கை முதலில் தொடங்கியது பி.எஸ்.இ. என்றாலும் பிற்பாடு என்.எஸ்.இ. மற்றும் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சுகளான எம்.சி.எக்ஸ்., என்.சி.டி.இ.எக்ஸ். என அனைத்து எக்ஸ்சேஞ்சுகளும் அதை ஃபாலோ செய்ய ஆரம்பித்து விட்டன. இந்த ஆண்டு தீபாவளி அன்று மாலை 4.45 முதல் 6 மணி வரை இந்த முகூர்த் டிரேடிங் நடக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த டிரேடிங்கில் முன்பு வடநாட்டினர்தான் அதிகம் ஈடுபட்டனர். தற்போது நம்மூர் முதலீட்டாளர்களும் ஆர்வமுடன் கலந்துகொள் கிறார்கள். சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டு மில்லை, பொள்ளாச்சி, தூத்துக்குடி போன்ற நகரங்களிலும்கூட இந்த வழக்கம் வந்துவிட்டது.
முகூர்த் டிரேடிங் அன்று முதலீட்டாளர்கள் வாழ்த்துச் சொல்லி, இனிப்புகளை பரிமாறிக் கொள்வதும் வெடி வெடித்து மகிழ்வதும் மறக்க முடியாத அனுபவமாகிக் கொண்டிருக்கிறது.
சில புரோக்கிங் நிறுவனங்கள் முகூர்த் டிரேடிங் அன்று வாங்குவதற்காக சில பங்குகளை பரிந்துரையும் செய்கின்றன. கடந்த 15 ஆண்டுகளில் நடந்த முகூர்த் டிரேடிங்களில் இரு ஆண்டுகளில்தான் மைனஸில் முடிந்திருக்கிறது.

##~## |
நல்ல அட்வைஸ்தான்!
- சி.சரவணன்